(Reading time: 9 - 17 minutes)

இவர்கள் அத்தை என்று அழைப்பவர் ஷைலுவின் பக்கத்து வீட்டவர். அவர்களது குடும்பமும் ஷைலுவின் குடும்பமும் 20 வருடங்களுக்கு மேலாக பழக்கம். சங்கீத்தா-சேகர் தம்பதியர் திருச்சியை சேர்ந்தவர்கள். வேலை காரணமாக மாற்றல் வாங்கி சென்னையிற்கு வந்து சென்னை வாசியாகவே மாறிவிட்டனர். ஷைலுவின் இல்லம் மற்றும் இவர்களின் இல்லமும் தனி தனி வீடு தான். சேகர் தங்களுக்கு கிடைத்த புதிய உறவான இவர்களை இழக்கக் கூடாது என அவர்கள் வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கிவிட்டார். அவர்களின் ஒரே மகன் சந்தோஷ் திருமணம் முடிந்து மனைவியுடன் பெங்களூரில் வசித்து வருகிறான்.

ஷைலு தனது பெற்றோர் வாழ்ந்த இவ்வீட்டில் தான் இருப்பேன் என பிடிவாதமாக இருக்கவும் சேகர் முன்வந்து அவர்கள் ஷைலுவிற்கு துனையாக இருப்பதாக கூறினார். ரிந்து வீட்டில் அவளது மாமனார் மாமியாரை விட்டு வர முடியாதக் காரணத்தால் இவர்களது முடிவிற்கு ஒற்றுக்கொண்டாள். அதில் அவளிற்கு வருத்தமே ஆனாலும் தன் தங்கையை இவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என மன நிம்மதிக் கொண்டாள்.

சேகரும் தாங்கள் இருந்த வீட்டை வாடகைக்கு விடுத்து இங்கு வந்தனர். அவருக்கு வரும் வாடகை பணத்தை ஷைலு மற்றும் ரிந்துவின் பெயரில் எஃப்டி யாக செலுத்திவிடுவார். சந்தோஷ் தான் இந்த ஐடியாவை சொன்னது. பெண் பிள்ளை இல்லாததால் அவர்கள் மூவருக்குமே இவர்களிருவரின் மேல் பிரியம் ஜாஸ்த்தி. அதுவும் சந்தோஷிற்கு சிறு வயதில் தன் காலையே அண்ணாவென சுற்றி வரும் ஷைலு என்றால் இன்னும் அதிக பாசம். (இப்போ புரிஞ்சுதா அந்த கதவை திறந்த அத்தை யாருனு;-) )

அச்சூழ்னிலையை மாற்ற “ஷைலு உன்னை மழை’ல நனையாத’நு எவ்ளோ தடவ சொல்லி இருக்கேன், உங்க மாமா வரட்டும் அவர சொல்லனும் உனக்கு செல்லம் தந்து கெடுத்து வெச்சிருக்கார். அவர ரெண்டுப் போட்டா சரியா போகும்” என போலியாக சங்கீ அத்தை மிரட்ட, “ஹாஹாஹா காமடி பண்ணாதீங்க நெனச்சுப் பார்த்தா சிரிப்பா வருது.. அப்புறம் சில்சீ’ல போடுற ஹப்பி பாவம் ஜோக்ஸ்(:-P)எல்லாம் உன்மை அயிரும் நம்ம வீட்ல” என ஷைலு ஓட்ட.. ரிந்து சிரிக்க ஆரம்பித்துவிடாள்.

ஷைலு மற்றும் சங்கீத்தாவிற்கு ரிந்துவின் சிரிப்பு ஒரு நிறைவைக் கொடுத்தது. “சரி நீங்க இருவரும் ஃப்ரெஷ் அயிட்டு வாங்க. உங்களுக்கு காஃபி போட்டு வெக்கறேன். உனக்கு சக்கரை ஜாஸ்த்தியா அதான எனக்கு தெரியாதா டா..” என ஷைலு கூற வரவும் தானே அவளது வாக்கியத்தை சொல்லிமுடித்தார்.

பின் இருவரும் மாடியேற.. சங்கீத்தா கிட்சென் நோக்கி சென்றார். “ஆமா அக்கா நீ எப்படி வந்த?”

“சூர்யா தான் டா உன் ஸ்கூல்ல ட்ராப் பண்ணாரு.. அப்புறம் உன் கூடவே வந்துட்டேன். நீ ஸ்கூட்டி எடுக்கறதே இல்லையா டா..”

“எடுப்பேன்.. ஆனா ஸ்கூல் பக்கம் தானக்கா நடக்கறது நல்லது தான்.. அத்தான் நைட் வருவாரா?”

“நாளைக்கு சேட்டர்டே தான டா.. நாளைக்கு நைட் இங்க வரேன் சொல்லியிருக்காரு.”

“ஐஐஐ ஜாலி அப்போ நாளைக்கு நம்ம டின்னர் போகலாம். சேகர் மாமா சங்கீ அத்தை’யும் கூப்பிடுட்டு..”

“தெரியுமே நீ இது சொல்லுவனு அதான் அவரும் நாளைக்கு வரேன்னு சொன்னாரு.”

பின் ஷைலு ஃப்ரெஷ் ஆக செல்ல ரிந்து அங்கிருந்த பால்கனியில் போய் நின்று தனது எண்ணங்களில் மூழ்கினாள். தனது தங்கையின் இச்சிரிப்பிற்கு காரணம் சேகர் மாமா குடும்பம் தான். தங்களது பெற்றோர் தங்களை தனியாக விட்டுச் செல்லவில்லை. ஒரு அன்பான குடும்பத்தை தந்திருகிறார்கள் என எண்ணினாள்.. மேலும் அவளுள் எப்போதும் எழும் வலி.. ரிந்து தான் அம்மா அப்பா இருவரையும் மிகவும் வற்புறுத்தி அவர்கள் மறுத்தும் அனுப்பினாள். தன்னால் தான் இவ்வாறு அயிற்று என்று அவளுள் அவ்வலி இரண்டு வருடங்களாகியும் ஆறவில்லை. அது அவளது கண்களில் இறங்கியது.

அவளது கண்ணீரை ஒரு கரம் துடைத்தது. “அக்கா உன்னோட தப்பில்லை.. அம்மா அப்பா நம்ம கூடவே தான் இருக்காங்க.. அவங்க இருந்த கடைசி நிமிடம் வரைக்கும் சந்தோஷமா தான் இருந்தாங்க”

“ஆமா டா. ஆனா I miss them “என வருந்தினாள். ஷைலுவிற்கும் மனம் பாரமாகியது.

“சரி வாடா அத்தை நமக்காக காத்திருப்பாங்க..” என இருவரும் கிழே சென்றனர்.

ஹாலில் மூவரும் அமர்ந்து ஹாயாக பேசிக்கொண்டிருந்தனர்.. அப்பொழுது ரிந்து ஏதோ சொல்ல தயங்குவதுப் போல தோன்ற..

“என்ன அக்கா ஏதாச்சு சொல்லனுமா.. ?”

“ஆமா டா ரிந்து ஏன் தயங்குர.. ஏதாச்சு பிரச்சணையா..?” என அத்தையும் வினவ..

“இல்ல சூர்யா ஓட கசின் கிர்ஷோர் தெரியும்’ல உங்களுக்கு. யு.ஸ்’ல வொர்க் பண்ணிட்டு இருக்காங்க.. அவங்க அம்மா கிஷோர்க்கு ஷைலுவ கேட்டாங்க.. அதான் யோசிச்சிட்டு இருந்தேன் அத்தை”

“அப்படியா.. ரொம்ப சந்தோஷம் டா.. நானே சொல்லனும் இருந்தேன். இவளுக்கும் 24 வயசாகுது.. வரன் பார்க்க ஆரம்பிக்க உன் கிட்ட சொல்லனும்னு..”

இதைக் கேட்ட ஷைலு சிலையாக எவ்வுணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். மறந்துவிட்டேன் என்று அவள் எண்ணி இருந்த அந்த முகம் அவளது அகக்கண்ணில் தோன்றி அவளைப் பார்த்துப் புன்னகைத்தது!!!!!!

தொடரும்

Episode 02

{kunena_discuss:1161}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.