(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 02 - ஆர்த்தி N

maraveno ninnai

உன் எண்ணங்களின்

தாக்கத்தில் உள்ளம்

உருகிட!!

உன் நிழல்பிம்பங்கள்

மட்டுமே என் நிஜத்துடன்

சேர்ந்திட!!

எப்போது என் கை

சேர்வாயடா!?!?

நினைவலைகள் அவளது மனதினை நிறைக்க, ஆழ் மனதில் மூழ்கியிருந்த அவனது எண்ணங்கள் கண்முன் விரிய சிலையென இருந்தாள் ஷைலாரன்யா.! அவள் மனம் அமைதியற்று இருந்தது. இவ்வளவு வருடங்கள் இல்லாத அவனது நினைவு இன்று தன் திருமணம் விஷயம் பேசும் பொழுது ஏன் நினைவு வர வேண்டும். அவளுக்கு புரிந்தது அவன் அவளுள் எந்த அளவிற்கு ஆழ பதிந்துள்ளானென. ஆனால் இப்போது தான் தனக்கு அது உரைக்க வேண்டுமாவென தன்னையே நொந்துக் கொண்டாள்.

“ஏய் ஷைலு உன்ன தான். என்ன பேய் அறைஞ்ச மாதிரி உக்காந்திருக்க? எவ்ளோ நேரம் கூப்பட்றது உன்ன” என ரிந்து அவளை உலுக்க,

“அது கல்யாணம் பத்தி பேசுனோம்’ல அதான் அவ ஷாக் ரியாக்ஷன் தர்ராளாமா, ஏன் ஷைலு அப்படி தான இல்ல வேற ஏதாச்சு இருக்கா?” என அத்தை அவளை சந்தேகமாக நோக்க.

அக்காவின் உலுக்கல்லேயே அவள் தெளிந்து இருக்க, அத்தையின் சந்தேக பார்வை அவளுக்கு லேசாக பயத்தை தர,

“ஹிஹி அப்படி எல்லாம் இல்லை அத்த, என்ன இப்படி பேக்அப் பண்ணி அனுப்ப ப்ளேன் பண்ணிட்டு இருக்கீங்க அதுக்கு எப்படி நானே ஐடியா தருவேன்னு எதிர்பார்க்கறீங்க.. சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்க நா தயாரா இல்லை”

:”அடி வாயிலையே போட்டேன்னா.. நல்ல விஷயம் பேச ஆரம்பிக்கும் போது சூன்யம் அது இது நு அபத்தமா பேசிட்டு” என அவளின் காதை பிடித்து திருக,

“நீங்க என் காதை திருகியே எனக்கு காது கேக்காம போக போகுது” வலித்த காதை தேய்த்துவிட்டுக் கொண்டே தனது அத்தையை முறைத்தாள்.

“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் என்ன உனக்கும் கிஷோர தெரியும்.. பாக்கலாமா.. நான் சூர்யா கிட்ட சொல்லி அவங்க வீட்ல பேச சொல்லறேன்”

‘ஐயோ இந்த அக்கா என்ன இப்படி சோதிக்கறாங்களே, சரி சமாளிப்போம்’ “அக்கா இன்னும் ஒரு வருஷம் போகட்டும், நான் கொஞ்ச நாள் ப்ஃரீ’ஆ இருக்கேன். ப்லீஸ். நானே சொல்லறேன். அது வரைக்கும் இந்த பேச்சு வேண்டாம்” என ஷைலு முடிக்க. ரிந்து யோசனையில் ஆழ்ந்தாள்.

“என்ன ஷைலு இப்போ ஃபிக்ஸ் பண்ணிக்கலாம், ஒரு வருஷம் கேப் விட்டு கல்யாணம் வெச்சுக்கலாம்” என சங்கீ அத்தையும் அவளை ஆழம் பார்க்க..

“அத்தை நான் சொன்னா சொன்னது தான். இப்போ எனக்கு இஷ்டம் இல்லை. நானே சொல்லறேன்”

என்னமோ இருக்கு, இல்லைனா இவ்ளோ மறுத்து பேசக்கூடியவள் அல்லவே. தன் கணவரிடம் இது குறித்து பேச வேண்டும் என தீர்மானித்தார்.

மூவரும் அவரவர்களின் யோசனையில் மூழ்க, அழைப்பு மணி அடித்ததும் ஷைலு தன் சிந்தையிலிருந்து கலைந்து வாயில் திறக்க சென்றாள்.

“வாங்க மாமா, உங்க ஆத்துக்காரி ரொம்ப நேரமா என்னமோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்காங்க வந்து என்னன்னு கேளுங்க”

உள்ளே வந்த சேகர் தனது மனைவி அருகில் அமர்நது, “என்ன டார்லிங் நா வந்தது கூட தெரியாம என்ன யோசிக்கறீங்க.. ரிந்து நீயும் உன் அத்தை கூட சேர்ந்து அப்படி என்ன யோசிக்கற” என இருவரையும் தங்களது சிந்தனையிலிருந்து அவர் கலைக்க..

“எப்போ வந்தீங்க நீங்க..” என பொய் ஆச்சரியம் அவர் காமிக்க,

“இதான வேண்டாங்கறது. ரிந்து வந்திருக்கானு கால் பண்ண தெரிஞ்சுதுல.. ஆனா நா வந்தது உங்க அத்தைக்கு தெரிலையாமா.. சரி அப்படி என்ன யோசிச்ச சொல்லு கேக்கலாம்”

ஐயோ மறுபடியும் இவங்க ஆரம்பிப்பாங்களே.. நான் என் வாய வெச்சுட்டு சும்மா இருந்திருக்கனும் என ஷைலு தன்னயே நொந்துக்கொண்டு..

“மாமா இப்போ அதுவா முக்கியம்.. நீங்க ரொம்ப டையர்டா வந்திருப்பீங்க.. நானே என் கையால உங்களுக்கு டீப் போட்டுத் தரேன்.. வாங்க” என அவரை கைப் பிடித்து இழுத்துச் சென்றாள். பின்னாடியே சரண் அத்தையும் சென்றார்.

‘சப்பாஆஆஆ.. இப்போவே கண்ணக்கட்டுதே. டேய் உன்ன எங்கடா தேடுவேன் நா. சீக்கிரம் என் கண்ணுலப் பட்டுரு. இவங்கள என்னால தனியா சமாளிக்க முடியாது’ என மனதோடு அவளவனுடன் பேசிக்கொண்டே தனது மாமா மற்றும் அத்தையை வம்படித்துக் கொண்டிருந்தாள்.

ரிந்துவிற்கு இவளது நடவடிக்கை சந்தேகத்தை தந்தாலும். தன் தங்கை தானே முன் வந்து தன்னிடம் ஏதாவது இருந்தால் சொல்லுவாள் என்ற நம்பிக்கையோடு அவர்களது அரட்டை கச்சேரியில் தானும் ஐக்கியமானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.