தொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ
“காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே
உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழா வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்த்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நதி பாயுதே”
அழகான காலை வேளையில் சமையலறையில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார் மதுரவல்லி..ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனை நொடிக்கொரு முறை பார்த்தவாறே தன் வேலையில் கவனம் வைத்திருந்தார்..இரண்டாவது காபிக்கான அழைப்பு எந்நேரமும் வருமென்பதற்காகத் தான் அந்த பார்வை..கிருஷ்ணன் எல்ஐசியில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்வர்..இந்த தம்பதிகளுக்கு அழகாய் இரு பிள்ளைகள்..பெரியவன் ஷர்ஷா எம் பி ஏ முடித்து ஒரு எம் என் சி யில் எச் ஆர் ஆக வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது..சிறியவள் ஹரிணி கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறாள்..
கிருஷ்ணன் ஓய்வு பெற்று ஆறு மாதம் ஆன நிலையில் தங்கள் ஊரான தென்காசியிலிருந்து இடம் பெயர்ந்து மகனுக்காக சென்னையில் வந்து தங்கியிருக்கின்றனர்..ஹரிணிக்காக காலேஜிலும் பேசி சீட் வாங்கி வைத்தான் அந்த பொறுப்பான அண்ணன்…கிருஷ்ணன் மிகவும் கண்டிப்பானவர் நல்லவர்தான் எனினும் எதிலும் ஒரு கண்டிப்பு இருக்கும் அதனாலேயே பிள்ளைகள் தாயோடு அதிகம் ஒட்டிக் கொண்டனர்..மதுரவல்லி அன்றி அந்த வீட்டில் ஒரு வேலையும் ஓடாது எனும் அளவிற்கு அந்த அழகிய கூட்டை தாங்கும் மரமாய் இருந்தார்..மிகவும் பொறுமையானவர் நடுத்தர குடும்பத்துக்கேயுரிய பொறுப்பு குணம் சற்று அதிகமாகவே இருக்கும் அவரிடம்..கணவனும் குழந்தைகளும் தான் அவர் உலகம்..
ஹர்ஷா அதிகம் பேச மாட்டான் இருப்பினும் குடும்பத்தினரின் மேல் அதிக பாசமுடையவன் அதே நேரம் தாயை போன்றே பொறுமையானவன்..அப்பாவிற்கு அப்படியே நேரெதிர்..
நம்ம ஹிரோயின் ஹரிணி வீட்டில் பரமசாது..அவள் வால்தனத்தை அவ்வப்போது அவிழ்த்து விடுவது தன் அப்பாவி அண்ணணிடமும் அன்னையிடமும் தான்..அப்பாவை கண்டால் பின்னங்கால் பிடதியில் பட தெறித்து ஓடுவாள்..எள் என்பதற்குள் எண்ணெயாய் வந்து நிற்பாள்..அவளுக்கு தன் ஊரையும் தோழிகளையும் விட்டு வர மனமேயில்லை..இவளது நட்பு வட்டாரம் என்பது வீட்டின் வாசலுக்கு அந்தபுறத்தோடு முடிந்து விடவேண்டும்..வீட்டிற்கு தோழிகள் என்று வந்ததே இரண்டு இல்லை மூன்று முறை இருக்கலாம்..பள்ளி கல்லூரி அனைத்துமே தந்தையின் விருப்பப்படி பெண்கள் மட்டுமே பயிலும் இடம்தான் இப்போது அதுவும் இன்று தான் தன் புது கல்லூரிக்கு முதல் நாள் போகவிருக்கிறாள்..அதுவும் கோ எட் காலேஜ்..நடுவில் சேர்ப்பதால் ஹர்ஷா எவ்வளவு முயன்றும் அருகில் இருப்பதில் இந்த கல்லூரியில் தான் இடம் கிடைத்தது..கிருஷ்ணணுக்கு விருப்பம் இல்லை எனினும் வேறு வழியில்லை எ ன தலையசைத்து வைத்தார்..சரி சரி மொக்கையை நிறுத்திட்டு வீட்டுக்குள்ள நடக்குறத பாப்போம்னுநீங்க சொல்றது புரியுது வாங்க வாங்க..
மதுரா காபி..என அவர் முடிப்பதற்குள் காபி அவர் கைக்கு வந்திருந்தது..தன் மனைவியை நினைத்து மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..
அடுப்பை அணைத்துவிட்டு இரு டம்ளரில் காபி எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த அறைக்குச் சென்றவர் முதலில் ஹர்ஷாவை எழுப்ப கண்ணை கசக்கியவாறே எழுந்தமர்ந்தவன் காபியை வாங்கிக் கொண்டு,தேங்க்ஸ்ம்மா என்றான்..
நீ குளிச்சுட்டு வாடா டிபன் வைக்குறேன் இந்த சின்னதுதான் எழுந்தாளானு தெரில??புது காலேஜ் வேற சீக்கிரம் போணுமேனு பொறுப்பு இருக்கா பாரு என பக்கத்து அறைக்குச் சென்றவர்,அங்கு குளித்து முடித்து தயாராய் தன் காதில் கம்மலை மாட்டிக் கொண்டிருந்தவளை பார்த்து அப்படியே நின்றுவிட்டார்..
“என்ன டீ அதிசயம்லா நடக்குது சென்னைல???”
“ம்மாமா ஏற்கனவே செம கடுப்புல இருக்கேன் நீ வேற கிண்டல் பண்ணாத..”