“என்ன அத்த அப்பாவ பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி கேக்குறீங்களே??எனக்கும் அஞ்சலியை ரொம்ப பிடிக்கும் ஆனா நா அவ மனசுல வீணா ஆசையை வளர்த்துவிட்டு நாளைக்கு அப்பா எதாவது முடியாதுனு சொல்லிட்டா??”
“உச்சி குளிர்ந்து போனார் கஸ்தூரி..அப்படியே எங்க அண்ணி குணம்டா உனக்கு..என்ன அழகா பேசுற நேத்து தூக்கி வளர்த்தமாதிரி இருக்கு எவ்ளோ பெரிய மனுஷனா பேசுற..நீ சொன்ன வார்த்தை போதும்யா..நா அண்ணணை சரி கட்டிகுறேன்..எங்க அண்ணன் நல்லவருதான் என்ன கொஞ்சம் கோபகாரரு..என அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசும் அத்தையை நினைத்து பெருமை கொண்டான்..
சோ கடந்த ஒரு வருஷகாலமா சொந்த அத்தை பொண்ணையே வீட்டுக்கு தெரியாம லவ் பண்ணிட்டு இருக்காரு நம்ம ஹர்ஷா..அடடா அங்க காலேஜ் போன நம்ம குட்டி பொண்ணு என்ன ஆனானு மறந்தே போய்ட்டோமே..வாங்க வாங்க..
வாசலில் இறக்கிவிட்ட அண்ணணுக்கு கைகாட்டி திரும்பியவள் முன்னிருந்த கல்லை கவனியாது அதில் காலை வைக்க லேசாய் இடறி சாயப் போனவளை சட்டென ஒரு கரம் பிடித்து நிறுத்த,ஆண் என்பதை உணர்ந்தவள் தானே நகர்ந்து கொண்டு லேசாய் அவனைப் பார்த்து தேங்க்ஸ் என்றதோடு நிற்காமல் சென்றுவிட்டாள்..
தனது டிப்பார்ட்மெண்டை தேடி கண்டுபிடித்து வகுப்பில் அமர்ந்தபின்பு தான் அவளுக்குசுவாசமே சீரானது..பயம் படபடப்பு என அனைத்தும் ஏதோ செய்ய இருந்தஇடத்தை விட்டு நகரவில்லை..முதல் வகுப்பு ஆரம்பமாக அட்டெண்டன்ஸ் எடுத்த பேராசிரியர் இவள் பெயரை உச்சரிக்காமல் போக மெதுவாய் எழுந்தவள்.,
சார்..
எஸ்..
நியூ அட்மிஷன்..
ஓ..ஓ.கே பர்ஸ்ட் இன்ட்ர்டியூஸ் யுவர்செல்ப் என கைகட்டி அவளை அவர் பார்க்க மொத்த வகுப்பும் அவளைத்தா ன் பார்த்திருந்தது..உள்ளிருந்த சுனாமி அளவு பயத்தை வெளிக்காட்டாது தன்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள்..
குட் பர்ஸ்ட் இயர் என்ன பெர்சென்டேஜ் வச்சுருக்க ஹரிணி???
சார் 92%..
ஓ குட்..நானே நினைச்சேன் கரஸ்பாண்டெண்ட் இப்படி நடுவுல அட்மிஷன் போடமாட்டாரேனு..ஓ.கே இந்த வருஷமும் அதையே மெயின்டெயின் பண்ணு..லெட் மி ஸ்டார்ட்தி க்ளாஸ் நவ் என அவர்தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்..
பெஞ்சில் அமர்ந்தவளை பார்த்து அருகிலிருந்த பெண் சிநேகமாய் சிரிக்க,பதிலுக்குசிரித்தவள் ஹரிணி என கைகொடுக்க,ஏஞ்சலின் என அவளும் கைப்பற்றி குலுக்கினாள்..அதன்பின் இருவரும் வகுப்பை கவனிக்க ஆரம்பிக்க இடைவேளையில் அவளோடு பேசினாள்..
ஹரிணி நீ இவ்ளோ படிப்பாளியா இருக்கியே..எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் கல்ச்சுலர்ஸ் தான் என் இஷ்டம் வீட்ல உயிர எடுக்குறாங்கனு தான் இந்த டிகிரி எடுத்தேன்..
வாவ் ஏஞ்சல் சூப்பர் எனக்குகூட டான்ஸ்னா ரொம்ப இஷ்டம்..பரத நாட்டியம் கத்துருக்கேன்..
ஹே சூப்பர் சூப்பர் இப்போ இந்த வருஷ இன்டர் காலேஜ் மீட்ல கலக்குறோம்..நம்ம காலேஜ்க்கு பரதநாட்டிய கேட்டகிரில தான் எப்பவும் பாயிண்ட்ஸ் போய்டும் அப்போ இந்த இயர் வின்னர் ட்ராபி நமக்குதான் எனஅவளுக்கு ஹைபை கொடுத்தாள்..
ஹரிணிக்கு ஏனோ அவளை பிடீத்துவிட்டது..அவளின் எதார்த்தமான பேச்சும் பழக்கமும் சற்றே தன் பயத்தை குறைத்திருப்பதாய் உணர்ந்தாள்..மதிய உணவுக்கு ஏஞ்சல் தன்னோடு சாப்பிட வருமாறு அவளை அழைத்துச் செல்ல இருவருமாய் கேட்டீனிற்கு சென்றார்கள்..
அவர்கள் இருவரும் சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் இருவர் வந்து எதிர் டேபிளில் அமர ஹரிணி கேள்வியாய் பார்த்தாள்..
ஹரிணி இது என் அண்ணா அகில்..இது என் கசின் விக்கி..”
என்ன செய்வதென தெரியாமல் லேசாய் சிரித்து தன் உணவை உண்ண ஆரம்பித்தாள்..அவர்கள் மூவருமே பேசிக் கொண்டிருக்க அவள் அமைதியாய் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..பாதி உணவை முடித்திருந்த நேரம் மற்றுமொருவன் வந்து அவர்கள் டேபிளில் அமர,ஹரிணிக்கு ஹய்யோ என்று ஆனது..லேசாய் நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து ஹாய் என கையசைத்து அழகாய் சிரித்தான் அந்த புதியவன்..
சிறு தலையசைப்போடு அவள் நிறுத்திக் கொள்ள அவனுக்கே ஆச்சரியமாய் தான் இருந்தது..இருந்தும் ஒன்றும் கூறாமல் அகிலின் தட்டிலிருந்த வத்தலை எடுத்து கொரித்தவாறே அமர்ந்தான்..
“ஹரிணி இவரு பேரு ரகுநந்தன்.. எங்க பேமீலி ப்ரெண்ட் இவருதான்..”என அவள் கூற வருவதற்குள் பொறுமையிழந்த ஹரிணியோ,
“உங்க குடும்பத்துக்காகவே இந்த காலேஜ் கட்டினாங்களா??எல்லாரையுமே ரிலேட்டிவ்னு தான் இன்ட்ரோ குடுக்குற..”என கேட்டவாறு தன் பாக்ஸை மூடிக் கொண்டிருந்தாள்..