அவள் பேச்சின் வருத்தத்தை உணர்ந்தவர் காபியை அவள் கையில் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தார்..
“என்னாச்சு ஹரிணி??”
“புது ஊரு புது காலேஜ் பிடிக்கவேயில்லம்மா..கேள்ர்ஸ் காலேஜ்ல சீட் வாங்குனு எவ்ளோ சொன்னேன்..உன் அருமை புள்ள ஏன் இப்படி பண்றான்..”
பேச்சு சத்தம் கேட்டு கையில் காபியோடு அவளறையின் வாசலுக்கு வந்தவன் கதவில் சாய்ந்தவாறே,”நா என்னடி பண்ணேன்..ஒழுங்கா பர்ஸ்ட் இயரே இங்க வானு சொன்னேன் நீதான் அப்பாபாகிட்ட பேச பயந்துட்டு முடியாதுனு சொன்ன??”
“போடா இவங்க ரெண்டு பேரும் இப்படி திடீர்நு புள்ளை மேல இருக்குற பாசத்துல இங்க வருவாங்கனு எனக்கு எப்படி தெரியும்??”
“கழுத ஏன் அப்படி சொல்ற அவனுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காம எவ்வளவு கஷ்டப்பட்டான்னு உனக்கும் தெரியும்தான??”
“என்னவோ போம்மா..எனக்கு இன்னைக்கு காலேஜை நினைச்சாலே வயித்த கலக்குது..ரேகிங் அது இதுனு என்ன ஆகப் போறேனோ என குழந்தையாய் சிணுங்குபவளை பார்த்தவருக்கு சமாதானம் செய்ய தெரியாமல் முழிக்க,ஹர்ஷா தான் பார்த்துக் கொள்வதாய் கூறி அவரை அனுப்பி வைத்தான்..
அம்மா கீழே சென்றதை உறுதிப்படுத்தியவன்,”ஏ குரங்கு ரொம்ப நடிக்காத உன் மனசுகுள்ள ஜாலியா இருக்கனு எனக்குத் தெரியும்”என அவளை சீண்ட,
“டேய் வேணாம் அப்பறம் அண்ணணுகூட பாக்காம எதாவது சொல்லிட போறேன்..”
“எதுக்குடீ இவ்ளோ டென்ஷன் ஆகுற நீ பயப்படுற அளவுலா ஒண்ணும் இருக்காது ஒரு வாரம் போனா உனக்கே பழகிடும்..சரியா” என அக்கறையாய் பேச,
அவனை காரமாய் ஒரு பார்வை பார்த்தவள்,”இப்படி பொறுப்பு புருஷோத்தமனா பேசிதான் என் அத்தை பொண்ணு மனச கெடுத்து வச்சுருக்கியா??”என மெதுவாய் கேட்க சட்டென அவள் வாயை மூடியவன்..
“அம்மா தாயே நல்லாயிருப்ப உன் திருவாயை வச்சுகிட்டு கொஞ்சம் சும்மா இரு..கீழே கேப்டன் பிரபாகரன் காதுல விழுந்தது வேற வினையே வேண்டாம்..”
அவன் கையை இறக்கியவள்,”ஏன்டா இப்படி பயப்படுற அவ உனக்குத்தான்னு எப்பவோ முடிவானது தானே..அப்பறம் என்ன??”
“அப்பாவ பத்தி தெரிஞ்சும் இந்த கேள்வியை கேக்குறியே ஹரிணிம்மா..அவரோட முடிவா இருக்குற வரைதான் இந்த கல்யாணம் கன்பார்ம் லிஸ்ட்ல இருக்கும்..எங்க பங்கு இருக்குனு தெரிஞ்சுது எப்போ எப்படி மாறுவாருனே தெரியாது..நல்லாயிருப்ப கொஞ்சம் அடக்கியே வாசி..”
ஏன்தான் அப்பா இப்படி இருக்காரோ சரி விடு நீ ஒண்ணும் கவலபடாதாடா எல்லாம் நல்லபடியா நடக்கும்..என்றவள் மணியை பார்க்க,”டேய் இன்னைக்கு செத்தோம் பத்து நிமிஷம் டிலே வசமா வாங்கி கட்ட போறோம்”என அவள் முடித்த நேரம் ஹர்ஷா அங்கு இல்லை..
அனைவருமாய் உணவு மேஜையில் அமர்ந்திருக்க மதுரா அனைவருக்கும் பரிமாறினார்..பிள்ளைகள் இருவரும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவதை பார்த்தவருக்கு சிரிப்பு வந்தது..ஹர்ஷா தான் போகும் வழியில் ஹரிணியை காலேஜில் விட்டுச் செல்வதாய் கூறி கிளம்பினான்..அவர்கள் இருவரும் சென்றவுடன் மதுரா கணவரிடம்,
“ஒரு நாளாவது பசங்களோட சிரிச்சு பேசுறீங்களா எப்போ பாத்தாலும் ஏதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி உக்காந்துகிட்டு..எப்போ தான் மாறுவீங்களோ நானும் கல்யாணம் ஆனதுலயிருந்து சொல்றேன்..நமக்கே பேரன் பேத்தி எடுக்குற வயசாய்டுச்சு இன்னுமூம் ஒண்ணும் மாறினமாறியில்ல..என்றவாறு தட்டில் தனக்கான உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்..
கிருஷ்ணண் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர் அவரின் உலகமே அவரின் தம்பி தங்கை தான்..ஓரளவு இருந்த சொத்துக்களை வைத்து தானும் படித்து தம்பி தங்கையையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார்..ஆனால் எது ஒன்றும் எளிதான விஷயமாய் இருக்கவில்லை..அவருக்கு 15 வயதில் பெற்றோர் இறக்க தங்கைக்கு பத்து வயதும் தம்பிக்கு எட்டு வதுமாய் இருந்தது..இரண்டுமே இரண்டும் கெட்டான் வயதிலிருக்க எதற்கெடுத்தாலும் அடம் அழுகை என இருக்க அவர்களை வழிக்கு கொண்டுவருவதற்காகவே அந்தகோப முகமூடியை தனக்கு போட்டுகொண்டார்..ஆனால் நாளடைவில் அதுவே அவர் சுபாவமாய் மாறிவிட்டிருந்தது..குடும்பத்தில் அனைவருமே அவரிடம் பேசும்போது குரல்தாழ்த்தி தான் பேசுவார்கள்..அவரது தங்கை கஸ்தூரிக்கு அஞ்சலி அருண் என இரு பிள்ளைகளும்,தம்பி குமரனுக்கு அஜய் அக்ஷய் என இரண்டு மகன்களும் இருந்தனர்.. அனைவருமே தென்காசியின் அருகிலேயே இருந்ததால் அடிக்கடி சந்திந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது..அப்படி தான் அஞ்சலிக்கு ஹர்ஷாவின் மேல் காதல் ஏற்பட்டது..இன்னொரு முக்கிய காரணம் அஞ்சலியின் சிறு வயதிலேயே அவள் அன்னை தன் அண்ணணிடம் கட்டாயமாக என் பொண்ணிற்க்கு உன் பையன்தான் எந்த நிலையிலும் அதமட்டும் முடியாதுனு சொல்லிராத அண்ணா என சத்தியம் வாங்காத குறையாக கூறிவிட பெண்ணவளுக்கு அதுவே மனதில் பதிந்தும் போனது..
ஹர்ஷாவிற்கு மனதில் விருப்பம் இருந்தாலும் அப்பாவின் குணமறிந்து வாயேதிறக்கவில்லை..அப்படியிருக்க அவன் வேலைக்காக சென்னை கிளம்பிய போது அஞ்சலியே வந்து தன் காதலை வெளிப்படுத்த அவன் பட்டும் படாமல் நழுவிக் கொண்டான்..கலங்கிய முகத்தோடு வரும் மகளிடம் விஷயத்தை கேட்ட கஸ்தூரி ஹர்ஷாவை தனிமையில் சந்தித்து பேசினார்..