(Reading time: 7 - 13 minutes)

ரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது நகரத்திலிருந்த அந்த புகழ்பெற்ற மருத்துவமனை. எங்கு கண்டாலும் மக்கள் முகத்திலொரு சொல்லன்னா பயம் பரிதவிப்பு என இருந்தனர். மனிதன் சம்பாதிப்பதே உடல் அரோகியத்திற்கு தான். ஆனால் அவ்வாறு உடலை பேணுகிறார்களா என்பது கேள்விக்குறியே. பகட்டு பலப்பேரின் உடல் மன நிலையை குலைத்திருக்கிறது. இது என்று உலக மக்களுக்கு புரியுமோவென பலவாறு சிந்தித்துக் கொண்டே தன் எதிரே வந்தவர்களைக் கடந்து அம்மருத்துவமனையின் சீஃப் டாக்ட்ர் அறையை நோக்கி சென்றான் அந்த மேல்தட்டு இளைஞன். வெளியே இருந்த வரவேற்பு பெண்ணிடம் கூறியிருந்ததால் எத்தடையுமின்றி உள்ளே சென்றவன் அத்தலைமை மருத்துவரிடம் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தான்.

“அங்கிள் இன்னும் எவளோ நாள் இதையே சொல்லுவீங்க.. I am tired hearing this from you.. வேற ஏதாச்சு சொல்லுங்க.. அந்த யுகே டாக்டர்ஸ் எப்போ வராங்க?” என அவன் சலிப்புடன் கேட்க..

“டேய் உனக்கு நல்லா தெரியும் இதோட சீரியஸ்னஸ்.. you have to be patient.. நெக்ஸ்ட் வீக் அந்த யுகே நியுராலஜிஸ்ட் கிட்ட அப்பாயின்ட்மென்ட் இருக்கு.. let us hope for the best..”

“எவ்ளோ நாள் பொறுமையா இருக்கிறது.. என்னால அவன இப்படி பார்க்க முடியல.. அம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க.. ப்ளீஸ் டூ சம்திங்க் அங்கிள்..” என மிகவும் களைப்பாக உறைத்தான்.

“குட்டா உன்னோட கஷ்டம் புரியுது.. நீங்க பொறந்ததுல இருந்து ஐ நோ யு கைஸ்.. கண்டிப்பா அந்த நியுராலஜிஸ்ட் வந்து பாத்ததுக்கு அப்புறம் இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்.. யு நோ comatose patient எப்படி இருப்பாங்கனு.. இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு.. அம்மா கிட்ட சொல்லு சீக்கிரம் எல்லாம் சரி ஆகும் நு..”

“போங்க அங்கிள் எனக்கு நம்பிக்கையே இல்ல.. பாக்கலாம்.. அம்மா நானும் அந்த நம்பிக்கைல தான் இருக்கோம்.. நான் போய் அவன பாத்திட்டு வரேன்..”

நீண்டு பரந்து இருந்த அந்த வெரான்டாவின் கடைசியில் இருந்தது அந்த இன்டென்சிவ் கேர் யுனிட்.. அதனுள் சென்ற அவன் செவிலியப் பெண்னை வெளியே அனுப்பி விட்டு.. அங்கு மருத்துவ உபகரனங்கள் சூழ கிடத்தப்பட்டிருந்த தன் வயதொத்த வாலிபனை கண்களில் நீர் நிறைய பார்த்துக் கொண்டிருந்தான்..

ஆயிற்று இரண்டு வருடங்கள்.. என்ன முயற்சி செய்தும் அவனை இதுவரை மீட்க முடியவில்லை.. அவன் இருக்குமிடம் எப்பொழுதும் ஓர் பரபரப்புடன் தான் இருக்கும்.. ஓயாமல் பேசிக் கொண்டு தான் இருப்பான். ஆனால் தான் செய்யும் தொழில் என்று வந்தால் அவனுக்கு நிகர் அவனே.. அதனால் தான் டாப் 10 இளம் தொழிலதிபர்களின் பட்டியலில் அவன் இருந்தான்..

இன்று அவனது இந்நிலைமைக்கு காரணமானவர்கள் யார் என்று தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது என்ற உண்மை தன்னை பயங்கரமாக தாக்கியது போல உணர்ந்தான்..

அவனது கைகளை பிடித்துக் கொண்டு ‘ I and Amma need you back appu.. இவளோ நாள் எப்படி இருந்தோம்னே தெரியல.. பட் இந்த தடவ கண்டிப்பா நீ திரும்ப கிடைக்கனும்.. உன்னை ரொம்ப மிஸ் பன்னறோம் டா.. அம்மா தினம் எங்கிட்ட கேக்கறாங்க.. எனக்கு பதில் சொல்ல முடியல.. எப்பவுமே எனக்கு கைடன்ஸ் உங்கிட்ட இருந்து தான் கிடைக்கும்.. I seriously need you..’ என மனம் போன போக்கில் எச்சலனமும் இன்றி படுத்து இருந்தவனின் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் க்ருஷ் வந்தியத்..!!!!

Hi friends wish you all a very happy new year and Pongal wishes in advance!!! First of all sorry for this kutty update. Got stuck with my academics. So excuse panirunga ;-) Next time kandipa lengthy update tharan. Boring ah irukara madhiri irundhaa sollunga. I ll try to change the course of the story. Keep supporting !!!! smile

Thank you!

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1161}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.