(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 03 - ஆர்த்தி N

maraveno ninnai

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் ஷைலு அவர்கள் வீட்டின் பின் அமைந்திருந்த சிறிய தோட்டத்திலிருந்தாள். அவளொன்றும் தினமும் இதுப் போல் வருபவள் அல்ல…

நேரம் கிடைக்கும் பொழுது அல்லது குழப்பமான மனநிலையில் இருந்தால் அவள் தஞ்சமடைவது அங்கையே.. ஏனோ அங்கு இருந்தால் அவள் மனம் சிறிது அமைதிப்படும்..

அங்கு போடப்பட்டிருந்த நாற்காளியில் அமர்ந்து நேற்று இரவு நடந்ததையே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு தெரிந்து அவள் தன் தமக்கையிடமிருந்து மறைத்த முதல் விஷயம், தன்னவனைப் பற்றி…

இரவு உணவு முடித்து தங்களது அறைக்கு வந்தப் பொழுது..” ஏன் ஷைலு உனக்கு கல்யாணம் வேண்டாமா இல்ல கிஷோர் வேண்டாமா?”

இருவரும் எப்பொழுதும் ஒரே அறையை தான் பயன்படுத்துவர் ரிந்துவின் திருமணத்திற்கு பின்பும் அவள் வந்தால் ஷைலுவோடு தான் இருப்பாள். அவள் வந்து இருப்பதால் தன் அக்கா படுக்கவாகாக படுக்கையை சரி செய்துக் கொண்டிருந்தாள்..

தமக்கையின் கேள்வியில் வெடுக்கென திரும்பி தமக்கையின் முகத்தை ஆராய்ந்தவள்.. “அப்படி எல்லாம் இல்லை க்கா.. எனக்கு இப்போ பண்ணிக்க தோனல.. அதான்..” தன் மனதை மறைத்து பொய் உறைத்தாள்.

ரிந்து அவளது விதிர்விதிர்பை குறித்து வைத்துக்கொண்டாள்..

“சரி டா நீ தூங்கு.. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு.. நாளைக்கு பேசிக்கலாம்”

ஷைலுவிற்கு கஷ்டமாக இருந்தது தன் தமக்கையிடம் மறைப்பது.. இரவு முழுதும் சரியாக உறக்கம் வராமல் இதோ இப்பொழுது இங்கு வந்து அமர்ந்திருக்கிறாள்..

‘உனக்கே அவன் எங்க இருக்கான்னு தெரியல ஷைலு அப்புறம் எங்க அக்கா கிட்ட சொல்லுவ..’என அவள் மனசாட்சி திடுமென உறைக்க..

‘ஆமா அதான் நான் சொல்ல’ல இல்லனா இதுல மறைக்க ஒன்னும் இல்ல..’

‘ஹையோ ரொம்ப தைரியமான ஆள் தான் நீங்க..’என அவளுடைய minimi(mini mind) எள்ளிநகையாடியது

‘ஆமா இல்லையா பின்ன..தைரியம் இல்லாமையா எங்க இருக்கான்னு கூட தெரியாம அவன நெனச்சிட்டு இருப்பேன்’

‘இது அசட்டு தைரியம் டா செல்லம்.. கொஞ்சம் யோசி.. இதெல்லாம் நெஜத்துல நடக்காதக் காரியம்.. அவங்க வருவங்கலாம் லவ் சொல்லுவாங்கலாம் அப்புறம் வரவே மாட்டாங்கலாம்.. இந்த தாட்ஸ் எல்லாம் தூக்கிப் போட்டுட்டு ஆகற வேலைய பாரு ஷைலு’ என அவளது minimi எடுத்துறைக்க..

என்ன தான் அவளது மனம் எதார்தத்தை முன் வைத்தாலும் அவளது ஆழ் மனம் நம்பியது அவன் அவளுக்காக இருப்பான் என.. ஏன்னென்றால் அவள் அவனது அன்பை நேரில் கண்டிருக்கிறாள்.. அவளுக்கு புதிராக இருப்பது இவ்வளவு வருடம் அவனின் தலைமறைவு..

‘ஆமா அவன் கொள்ளக்கூட்டம் தலைவன் பாரு தலைமறைவா இருக்க? என்ன மா நீங்க இப்படி யோசிக்கறீங்களேமா?’என அவளது minimi கரக்டாக ஆஜராக..

‘என்ன மொக்க பண்ணனும்னா உடனே வந்துருவீங்களே.. ஆமா அவன் கொள்ளக்காரன் தான்.. அவன் திருடினது என் மனச தான..’என ஷைலு ஓர் அரத பழசான டையலாகை எடுத்து விட..

‘தப்பு தான் நான் சொன்னது.. என்ன விட்ரு மா.. இனி நீயா கேட்டா மட்டும் தான் ஏதச்சு சொல்லுவேன்..’ என அவளது மனசாட்சி பேக் அடித்தது..

“ஷைலு ஷைலூஊஊஊ.. எங்க டி இருக்க..”

“ஷைலூஊஊ” என அக்குரல் ஓவராக சௌண்ட் விட..

‘வந்துட்டா டா இம்ச.. அதுக்குள்ள 8 மணி அயிர்ச்சா’.. “இதோ வரேன் டீ.. எதுக்கு இந்த கத்து கத்தற..”என ஹாலுக்கு விரைந்தாள்..

ரித்திக்கா அங்கு சங்கீ அத்தையிடம் காஃபி வாங்கி குடித்துக்கொண்டே அவரிடம் தன் அரட்டையை தொடங்கியிருந்தாள்..

“எதுக்கு டி இந்த கத்தல் காலங்காத்தால.. “என ஷைலு அவளது உயிர் தோழி ஆன ரித்திக்காவின் கையைப் பிடித்து திருகினாள்..

“ஆஆ வலிக்குதுடி.. உன் ரூம்க்கு போய் பார்த்தா அக்கா மட்டும் தான் தூங்கிட்டு இருந்தாங்க.. வீட்டுக்கு வந்திருக்கறப் பொன்னுக்கு ஒரு காஃபி போட்டு தரக் கூட ஆள் இல்ல.. அதான் கத்துன.. நீ ஆடி அசைஞ்சு வரத்துக்குள்ள ஆன்ட்டி ஏ வந்துட்டாங்க..” என அவளை பொய்யாக முறைத்துக் கொண்டே கூறினாள்..

“அது சரி என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க.. அத்த இவளுக்கு எதுக்கு காஃபி எல்லாம்..” என ஷைலு வம்பிழுக்க..

“ஏய் என்ன லொல்லா.. இன்னைக்கு வெளிய போனும்னு நீ தான வர சொன்ன..

“அதுக்குன்னு இப்போவேவா போக முடியும்.. அத்த இனிக்கி நானும் ரித்துவும் கோவிலுக்கு போய்ட்டு அப்படியே மால் பொய்ட்டு வரோம்.. அக்கா வரலனு சொல்லிட்டாங்க.. சோ நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்..”

“என்ன அதிசயம் எங்கிட்ட சொல்ல எல்லாம் செய்யற.. இத்தன நேரம் பின்னாடி என்ன பண்ணிட்டு இருந்த ”என சங்கீ அத்த போலியாக ஆச்சரியப் பட்டுக் கொண்டே கேட்க.. அவருக்கு அவள் கோவில் போக போறதாக சொன்னதில் அவ்வளவு மகிழ்ச்சி.. ஆதலால் அவள் காலை வேளையில் தோட்டத்தில் ஏன் என்றும் இல்லாமல் இன்று இருந்தாள் என அவ்வளவு துருவவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.