(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 05 - ஸ்ரீ

en kadhalin kadhali

இந்த காதல் என்ன வெரும் பாரமா

இது பேறு காலம் இல்லா கற்ப்பமா

.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்

என்னுயிர் செத்துபோகும் இல்லையா

காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்

காதலே செத்து போகும் இல்லையா

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா

தினம் தேய்கிறேனே இது தேவையா

கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி

கோவிலை தேடி நடக்கின்றேன்

கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து

கோரிக்கை வைக்க மறக்கின்றேன்?..”

னதில் ஏதேதோ எண்ணங்கள் வட்டமிட்ட யாரிடமும் சொல்வும் முடியாமல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறியாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்..அதைவிட பெரிய வலியாய் இருந்தது வீட்டில் யாரும் அவள் முக வாட்டத்தை வைத்து எதையும் கண்டுபிடித்து விட கூடாதே என்பதுதான்..தாயிடமும் தந்தையிடமும் மறைக்க முடிந்தவளால் தமையனிடம் மறைக்க முடிவில்லை..

அவன் வந்ததிலிருந்தே தங்கையை கவனித்திருந்தான் இருந்தும் ஒன்றும் கேட்காமல் அமைதி காத்தவன் அம்மாவும் அப்பாவும் உறங்கச் சென்றபின் அவளை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான்..

“ஹரிணிம்மா என்னாச்சு???காலேஜ்ல எதுவும் பிரச்சனையா??உன் முகமே சரியில்லையே??”

“அண்ணா அதெல்லாம் ஒண்ணுமில்ல லேசா தலைவலி அவ்ளோதான்..”

“ஹரிணி என்ன பாத்து பேசு??என்கிட்ட தைரியமா சொல்லுடா??”,என தலையை வருட அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய் அவன் தோள் சாய்ந்து கண்ணீரை பதித்தாள்..

“ஹே லூசு என்ன எதுக்கு அழற???”

“வந்து என் ப்ரெண்ட் ஒருத்தர் பேரு நந்தா.”,.என ஆரம்பித்தவள் மேலோட்டமாய் அவன் ப்ரபோஸ் செய்தது வரை கூறி முடித்தாள்..

“நீ என்ன சொன்ன???”

“நம்ம அப்பாவ பத்தி தெரிஞ்சும் நா வேற என்ன அண்ணா சொல்லுவேன் முதல்ல எனக்கு அப்படி ஒரு தாட்டே இல்ல..அவருக்குதான் புரிய மாட்டேங்குது..”

“சரி சரி நீ சொல்ல வேண்டியத சொல்லிட்ட அவரும் டீசெண்டா விட்டுடாரு அப்பறமும் எதுக்கு அதையே போட்டு யோசிச்சுட்டு இருக்க..அவர பேஸ் பண்ண பயப்படுறியா??இத்தனை நாள் ஒரு நல்ல ப்ரெண்டா இருந்துக்காருநு சொல்ற அப்பறம் என்ன அதை தாண்டி அவரு உன்னை கஷ்டப்படுத்துவாறா சொல்லு..நீ எப்பவும் போல காலேஜ்க்கு போ..அவரோட இயல்பா பேசு..எல்லாம் சரியாகிடும்..ம்ம் கண்ணைத் துடைச்சுட்டு போய் தூங்கு..”

“தேங்க்ஸ் அண்ணா..மனசே லேசான மாதிரி இருக்கு..எங்க அப்பாக்கு தெரிஞ்சு ப்ரச்சனை ஆகுமோனு பயந்துட்டேயீருந்தேன்..தேங்க் யு சோ மச்..”

“நமக்குள்ள என்ன இதெல்லாம்..போ போய் நிம்மதியா தூங்கு..”,என்றவன் தனக்கான வேலையை மனதில் குறித்துக் கொண்டான்..மறுநாள் சற்று சீக்கிரமாகவே அவளை கல்லூரியில் விட்டுவிட்டு அவள் உள்ளே சென்றதும் வாசலில் ரகுவிற்காக காத்திருந்தான்..வாட்ச் மேனிடம் அவன் வந்தால் தன்னை அழைக்குமாறு சொல்ல அவன் பைக்கில் நுழைந்ததும் இவனை அழைத்தார்..

“ஹாய் ரகுநந்தன்..”

குரல்வந்த திசையில் பார்த்தவன் தன் முன் சிநேகப் புன்னகையோடு நிற்பவனை பார்த்து கேள்வியாய் நோக்க,

“ஐ அம் ஹர்ஷா..”

“ஹ..ர்..ஹரிணியோட அண்ணாவா நீங்க???”,என வேகமாய் கைக்குலுக்கினான்..

“பரவால்லையே என்னைப்பத்தி கூட சொல்லிருக்காளா உங்களோட நா கொஞ்சம் பேசணுமே இங்க வேண்டாம் பக்கத்துல காபி ஷாப் போலாமா???”

கண்டிப்பா வாங்க போலாம்..என்றவாறு அருகிலிருந்த காபி ஷாப்பில் சென்று அமர்ந்தனர்..ஹர்ஷா எதிரிலிருந்தவனை கண்களால் அளந்தான்..ஒல்லியான உடல் தேகம் ஜிம்மிற்கு சென்று ஆர்ம்ஸ் ஏற்றிருந்தான்..மாநிறம் ஆறடி உயரம் ஏசி காற்றிற்கேற்ப அசைந்தாடும் கேசம்…க்ளீன் ஷேவ் செய்த முகம் கூர்மையான பார்வை ஆனால் அதில் துளிகூட பயமோ பதட்டமோ இருக்கவில்லை..அவனோடு இயல்பாய் பேச ஆரம்பித்தான்..

“சொல்லுங்க ஏதோ பேசனும்னு சொன்னீங்களே??உங்க தங்கச்சி என்னை மிரட்டிட்டு வர சொன்னாளா??”,என சிரிக்க

பதிலுக்கு சிரித்தவன் இடவலமாய் தலையசைத்து,” அவளுக்கு நா உங்கள பாக்க வர்றதே தெரியாது..அக்சுவலா நீங்க என்ன ஐடியால இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமேனு வந்தேன்..”

“அப்படினா??எனக்கு புரில??”

“இல்ல என்ன ஐடியால அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிங்கனு கேட்டேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.