(Reading time: 19 - 37 minutes)

“ஓ.கே ஓ.கே கூல்..நா இந்த போட்டோவ எடுத்துரேன்..விடு நீ இவ்ளோ நல்ல பொண்ணா பேசாத அப்பறம் என் ஹார்ட் மறுபடியும் உன்னைத் தேடிதான் ஓடி வரும்..சத்தியமா இவ்ளோ பொறுப்பா இவ்ளோ ஆர்த்தோடாக்ஸான ஒரு பொண்ணை என் லைவ்ல பர்ஸ்ட் டைம் பாக்குறேன்..அதனாலேயே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது வாட் டு டூ..ஓ.கே முறைக்காத உண்மைய சொன்னா ப்ரச்சனையா இருக்கு”, என்றவாறு பேச்சை மாற்றினான்..

அடுத்து வந்த ஓரிரு நாளில் அவனும் பழையபடி பேச ஹரீணியும் ஓரளவு இயல்பிற்கு வந்தீருந்தாள்..அன்று மதிய உணவை முடித்து அமர்ந்திருந்தவளை தேடி ப்யூன் வர என்னவென விசாரித்தலில் கரஸ்பாண்டட் அவளை கூப்பிடுவதாய் கூற அப்பட்டமான பயத்தோடு அவனைப் பார்க்க,”ஹே நா எதுவும் பண்ணல..”,என்பதாய் அவளை பார்த்தான்..

ப்யூனை அனுப்பிவிட்டு ,”எதுக்கெடுத்தாலும் இப்படி கண்ணை உருட்டாத..வா போய் பாத்தா தான என்னனு தெரியும் நானும் வரேன் வா..”

“வேண்டாம் சேர்ந்து போனா என்ன சொல்லுவாங்களோ??”

ஒண்ணும் சொல்ல மாட்டாங்க வா..என அவளோடு தன் தந்தையின் அறையை அடைந்தவன் அவரை தவிர யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவரருகில் டேபிளில் அமர்ந்தான்..

“டேட் இவள கூப்டுருந்தீங்களா??”,என டேபிள் வெயிட்டை உருட்ட,

“ஆமா ஆனா உன்னை கூப்டலையே??”,என்றார் குறும்பாய்..

“டேட் நாங்க இப்போதான் லஞ்ச் முடிச்சோம் சரி அப்படியே என்ன சீக்ரெட்னு கேட்டு போலாம்நு வந்தேன்..”

அவன் காலைத் தட்டியவாறே ஹரிணியிடம்,

“வாட்ஸ் யுவர் நேம்??...ஹா ஹரிணி..நெக்ஸ்ட் மந்த் பர்ஸ்ட் வீக்ல காலேஜ் டே இருக்கு சோ வெல்கம் சாங் க்ளாசிக்கல் நீதான் பண்ணணும்..இந்த தடவை கொஞ்சம் ஸ்பெஷல் ஏன்னா சீவ் கெஸ்ட் நம்ம கலெக்டர் வராரரு..அதான் ஒவ்வொருத்தரையும் இன்டிவியூஷுவலா நானே மீட் பண்ணி பேசுறேன்..ஒன் வீக் பிபோர் ரிகர்சல் பாக்குறமாதிரி ரெடி ஆய்டு சரியா???”

“ஓ.கே சார் கண்டிப்பா..நா ப்ரிப்பேர் பண்ணிட்றேன்..”

“ம்ம் உனக்கு இன்சார்ஜ் உங்க டிபார்ட்மெண்ட் ஜோதி மேம் தான்..சோ என்னென்ன வேணும்ங்கிற டீடெயில் அவங்ககிட்ட குடுத்துட்டா அவங்க அரேண்ஜ் பண்ணிடுவாங்க..சரியா நீ போலாம்..”

ஓ.கே சார்..தேங்க் யூ..அவள் கிளம்பும் போதே நீ போ என்பதாய் அவன் கண்ணிமைக்க நிற்காமல் சென்றுவிட்டாள்..

மறுநாளிலிருந்தே ப்ராக்டிஸ் டைம் ப்ரிப்பரேஷன் என அனைவரையும் உற்சாகம் ஒட்டிக் கொண்டது..ரகு குரூப் டான்ஸிலும் சோலோ சிங்கிங்கிலும் கலந்திருந்தான்..ஹரிணி சோலோ தான் என்பதால் கல்லூரியில் ப்ராக்டிஸ் செய்வதில்லை எனினும் ஓபி எல்லோருக்கும் சேர்த்து வாங்கியிருப்பதால் அந்த நேரங்களில் மற்றவர்களோடு அவர்களின் ப்ராக்டிஸை பார்த்துக் கொண்டிருப்பாள்..அவர்களுக்கு எதுவும் உதவி தேவைப்பட்டால் செய்து கொடுப்பாள்..

 அப்படி இருக்கும் நேரங்களில் அவளறியாமல் ரகுவை தான் அவ்வப்போது பார்த்திருப்பாள்..பெண்கள் அவனோடு தானாக சென்று பேசினால் கூட சிரித்தவாறே அப்படியே நகர்ந்து விடுவான்..அவன் உயரத்திற்கு அவன் ஆடும்போது அத்தனை ஆளுமை இருந்தது..மேன்லினெஸ் தெரிந்தது..தன் எண்ணத்தை நினைத்து தன்னை தானே கடிந்தவள் மனதை கஷ்டப்பட்டு திசைமாற்றினாள்..

இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க அந்த இரு நாட்களும் ,ஒவ்வொரு முறை ஆடி முடித்ததும் அவளருகில் வந்து அமர்ந்து கொண்டு எதாவது பேச்சு கொடுத்துக் கொண்டேயிருந்தான்..ஹரிணிக்கோ ஒரே குழப்பமாய் இருந்தது..எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லாம இப்படி பேசுறாரு..என குழம்பியவள் பொறுக்க மாட்டாமல் மூன்றாவது நாள் கேட்க,ஒண்ணுமில்ல ஹரிணி சும்மா தான் எனும்போதே அவனை வெளியில் யாரோ அழைக்க அவன் சென்ற அடுத்த நொடி குரூப் டான்ஸிலிருந்த ரேகா வந்து அவளருகில் அமர்ந்தாள்..அவளும் எம்பிஏ தான் ஆனால் முதலாம் ஆண்டு..சீனியர் என்ற முறையில் சிநேகமாய் சிரித்து வைத்தாள் அவளை பார்த்து..

“ஹரிணி..”

“ம்ம் சொல்லுங்க அக்கா..”

“இல்ல வந்து ரகு சொன்னது உண்மையா???”

“அவரு என்ன சொன்னாரு???”

“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றதா சொன்னான்..அது உண்மையா??”

கோபமாய் அவளிடம் ஏதோ கூற வாயெடுத்த நேரம் அவளுக்கு பின் கதவருகே நின்று ஏதோ செய்கையால் கூறி குதித்துக் கொண்டிருந்தான் ரகு..

என்னவென கண்ணால் கேட்க ஆமா சொல்லு ஆமா சொல்லு என தலையசைக்க பல்லை கடித்தவள்

“ம்ம் ஆமாக்கா..”

“எவ்ளோ நாளா???”

அது வந்து..அவன் அங்கிருந்து மூணு மூணு என கை காட்ட,

மனதினுள் தன் தலையில் அடித்துக் கொண்டவள்,

“மூணு மாசமாதான் அக்கா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.