“இதென்ன கேள்வி ஹர்ஷா..அப்படி கூப்டலாம் தானே??”
ஆமோதிப்பாய் தலையயசைத்தவன் அவன் பதிலுக்காக காத்திருந்தான்..
நீங்க நினைக்குறது புரியுது சும்மா கொஞ்ச நாளுக்கு அவ பின்னாடி சுத்திட்டு அப்பறம் பாரின் போய் செட்டில் ஆகுற ஐடியா சத்தியமா எனக்கு இல்ல..அவளை கல்யாணம் பண்ணிகிட்டு ஹண்ட்ரட் இயர்ஸ் ஹேப்பியா என் லவ்வை அவளுக்கு தெவிட்ட தெவிட்ட குடுக்கனும்..நா மட்டும் இல்ல என் பேரெண்ட்ஸூம் அவள நல்லா பாத்துப்பாங்க சொல்ல போனா அவ எங்க வீட்டு மகாராணி..
என் மனசுல என்னோட ராஜகுமாரி..அவளுக்கும் என்னை பிடிக்கும் பட் என் ஸ்டேடஸ் பாத்து பயப்படுறா சோ கண்டிப்பா அவளுக்காக காத்திருப்பேன்..நா எங்கேயிருந்தாலும் அவ எங்கிருந்தாலும் என் கவனம் அவ மேலதான் இருக்கும்..இப்போ எனக்கு மச்சானும் சப்போர்ட்னு நினைக்குறேன் என்றவனின் விழிகள் குறும்பு சிரிப்பு இருந்தது..
“ம்ம் ஆனாலும் ஓவர் கான்பிடன்ஸ் தான்..அதனால தான் ஹரிணி பயப்படுறா..நீங்க சொல்றதெல்லாம் கேக்க நல்லாதான் இருக்கு பட் ரியாலிட்டி எப்படியிருக்கும் உங்க பேரண்ட்ஸ் அவ்ளோ ஈஸியா ஒத்துக்குவாங்கனு நம்புறீங்களா???”
“நிச்சயமா..நா வீட்டுக்கு ஒரே பையன் என் சந்தோஷத்தை விட அவங்களுக்கு எதுவும் பெருசு கிடையாது ஐ நோ தட்..”
“பட் எங்க அப்பாவுக்கு தன் பிள்ளைங்க சந்தோஷத்தை விட அவரோட கட்டுப்பாடுகள் தான் முக்கியம்..என்னவானாலும் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு..ஹரிணியோட நிம்மதி சந்தோஷம் எல்லாமே போய்டும் அதுதான் உங்களுக்கு வேணுமா???”
“நீங்க சொல்ற எல்லாமே அவ உங்க வீட்டு பொண்ணா இருக்குற வர மட்டும்தான்..என் லவ்வ அக்ஸ்ப்ட் பண்ண அடுத்த செகண்ட்ல இருந்து அவ சந்தோஷத்தை மட்டும்தான் பேஸ் பண்ணுவா..உங்கப்பா அவளை கஷ்டப்படுத்தினாலும் அதுக்கான மருந்தா இருந்து நா அவள பாத்துப்பேன்..”
இவ்வளவு தெளிவாய் பேசுபவனிடம் அதற்குமேல் ஒன்றும் கூறமுடியவில்லை..ஆழ் மூச்செடுத்தவன்,
“சரி ரகு நீங்க பேசுறதுலயே உங்க மெச்சூரிட்டி தெரியுது..கண்டிப்பா இவ்வளவு பொறுப்பான பதில்களை நா உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கல..சோ இப்போதைக்கு உங்களுக்கு இருக்குற ஒரு ஆப்ஷன் அவளுக்காக வெயிட் பண்றது பட் அவளை டிஸ்டர்ப் பண்ணாம..ஒரு வேலை எதாவது ஒரு பாய்ண்ட்ல அவ உங்களை ஏத்துகிட்டா அப்பறம் நடக்க வேண்டியத பாப்போம்..பட் அதுவர..”
“புரியுது ஹர்ஷா ஐ வில் ப்ராமிஸ் யூ இன்னும் டூ மந்த்ஸ்ல காலேஜ் முடியுது அண்ட் அல்ரெடி ஐ காட் ஆபர் சோ வேலைக்கு போய்டுவேன்..சோ நெக்ஸ்ட் ஒன் இயர் மினிமம் நா அவளை எந்த விதத்திலேயும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்..அவ்ளோ ஏன் அவ கான்டாக்ட்லயே இருக்க மாட்டேன்..இந்த பிரிவு நிச்சயம் என் காதலை அவளுக்கு புரிய வைக்கும்..அவ படிப்பு முடியுற வருஷம் முடியுற அடுத்த நாள் அவளை மீட் பண்றேன்.. அவ சம்மதத்தோட உங்க அப்பா முன்னாடி வந்து நிப்பேன்..நீங்க என்னை தாராளமா நம்பலாம்..நம்புவீங்களா???”
அவனைப் பார்த்து சிரித்தவன்,”நம்பாமலா இப்படி உக்காந்து பேசிட்டு இருக்கேன்..ஹரிணி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தங்கையையும் தாண்டி என் குழந்தை மாதிரி அவ வாழ்க்கையோட முக்கியமான விஷயம் கல்யாணம் அது அவ மனசுக்கு பிடிச்சமாதிரி சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்றேன்..ஒரு வேளை நீங்கதான் அவளுக்குனு இருந்தா அதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்..சரி டைம் ஆச்சு கிளம்புறேன் “,என எழப்போனவனை கைக்குலுக்கி விடுவித்தவன்,
“உங்க தங்கையைதான டிஸ்டர்ப் பண்ண கூடாது உங்க நம்பர் தரலாமே??”என கேட்க இருவரும் தங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டனர்..
அன்று மதியம் வழக்கம்போல் ஏஞ்சல் லஞ்சிற்கு அழைக்க வாரமாட்டேன் என அடம்பிடித்தாள் ஹரிணி..
“இங்க பாரு ஹரிணி அதுவேற இதுவேற அண்ணாவ நீ ரௌடி மாதிரி நினைக்குறியா அதுவும் போக அகில்க்கும் விக்கிக்கும் எதுவுமே தெரியாது நீ இப்போ வரலனா அவங்க என்ன நினைப்பாங்க இதெல்லாத்துக்கும் மேல மொத்த காலேஜ்க்கும் நம்ம நாலு பேர் மேலதான் கண்ணு இதுல நீ திடீர்நு விலகினா கண்டபடி பேசி அங்கிள் காதுக்கு போய்ச்சுனா வீணா எல்லாருக்குமே கஷ்டம் தானடா..ஜஸ்ட் ரெண்டே மாசம் அப்பறம் அவரு எங்கேயோ போகப் போறாரு நீ எங்கேயோ இருக்க போற ப்ளீஸ்டா “,என ஏதேதோ கூறி அழைத்துச் சென்றாள்..
தவிப்போடு அவள் அமர்ந்து தன் உணவை உண்ண ஆரம்பிக்க அவர்கள் மூவரையும் பார்த்து பொதுவாய் சிரித்தாள்..ரகுவோ மற்றவர்கள் அறியா வண்ணம் அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்க அதன்பின் தவறியும் அவன்புறம் திரும்பவில்லை..
ஏஞ்சல் வழக்கம்போல் விக்கியோடு நகர ஹரிணியும் வேலையிருப்பதாய் கூறி எழுந்தாள்.
“ஹணி ஒரு நிமிஷம்..”
“ப்ப்ச்ச் அப்படி கூப்டாதீங்ஙஙநு சொன்னேன்..”
“சரி சரி கூல்..டூ மினிட்ஸ் உன்னோட பேசனும் உக்காரு..ப்ளீஸ்..”,ஒன்றும் பேசாமல் அமர்ந்தாள்..