(Reading time: 19 - 37 minutes)

“ம்ம் கங்ராட்ஸ் அவனை பத்திரமா பாத்துக்கோ”, என அவள் சோகமாய் செல்ல,இதுவேறயா என நொந்தவள் அவனை தேடி வெளியே காளியாய் உருவெடுத்துச் சென்றாள்..

“என்ன நடக்குது இங்க???என்ன வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா???”

“அம்மா தாயே இப்போ நீயா..இந்த பொண்ணுங்க கிட்ட மாட்டிட்டு நா முழிக்குறேன்..ரகு நீ பாவம்டா..”

அவள் இன்னும் முறைத்தவாறே நிற்க,அந்த கடுப்பிலும் அவள் தன்னை மிரட்டுவதை ரசித்தான்..அவனிடம் அவன் அன்னைக்கு பிறகு கடுமையை காட்டும்முதல் பெண்..அவன் பார்வையின் ரசனையை உணர்ந்தவள் சட்டென அவனது பக்கவாட்டில் அமர்ந்துவிட்டாள்..

“ரேகா என்ன லவ் பண்றதா சொன்னா நா டீஸெண்டா அவாய்ட் பண்ணிட்டே இருந்தேன் பட் அவ நா சும்மா விளையாடுறதா நினைச்சு கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டா..அதான் வேற வழியில்லாம நாம லவ் பண்றோம்நு சொல்லிட்டேன்..அவ உன்கிட் ட கேக்க மாட்டானு தைரியமா அடிச்சு விட்டேன்..உள்ளே வரும்போதே அவ உன் பக்கத்துல வர்றத பாத்துட்டேன்.நல்ல வேளை நீ என்ன பாத்த தேங்க் காட்..”,என தலையில் கைவைத்தவனை பார்த்தவளுக்கு அவளையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது..

“என்ன பாத்தா உனக்கு சிரிப்பா இருக்கா????”

“இல்ல உங்களையும் ஒருத்தி பயப்பட வசச்சுருக்கான்னா பெரிய விஷயம்தான்..”

“பயம்தான் ஆனா என்னால அவ லைப் அபெக்ட் ஆகிட கூடாதேநு பயம்..அப்பறம் எனக்கு எதாவது சாபம் குடுத்து நீ என்ன அக்செப்ட் பண்ணாம போய்டேனா????”

உன்னையெல்லம் திருத்த முடியாது எனும்போக்கில் அவள் பார்க்க,”மேனுபேக்சரிங் டிபெக்ட் டா..ஒண்ணும் பண்ண முடியாது..”

“என்னவோ பண்ணித் தொலைங்க ஆனா இன்னொரு தடவை அவ என்கிட்ட எதாவது கேட்டா நீங்க காலி சொல்லிட்டேன்..”

“ஏ இதெல்லாம் அநியாயம் அவ பண்றதுக்கு நா எப்படி பொறுப்பாக முடீயும்???”

“எல்லாத்தையும் மன்னிச்சுருவேன் கடைசியா அவ என்கிட்ட அவன பத்திரமா பாத்துக்கோநு சொல்லிட்டு போறா நீங்க என்ன பேபியா உங்கள கையிலவச்சு பத்திரமா பாத்துக்க???”

“ம்ம் அவளுக்கு தெரியுது என் வருங்கால பொண்டாட்டி ஒரு மண்ணும் புரியாத தத்தியா இருக்கு எல்லாம் நேரம்..”,என சோகமாய் கூற..

சட்டென அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது..”அப்போ அவளையே ஏத்துக்க வேண்டிதுதான..நானா உங்களை என்னை லவ் பண்ணுங்கநு கேட்டேன்..??? “,என கண்ணீரை மறைக்க மறுபுறம் திரும்பிக் கொண்டாள்..

“ஹே ஹணி சும்மா விளையாட்டுக்கு தான சொன்னேன்..இதெல்லாம் சீரியஸா எடுத்துப்பாங்களா??சாரி இனி அப்படி சொல்லல..”,என அவன் கெஞ்ச..

“ப்ச் சாரி லா ஒண்ணும் வேண்டாம் “,என்றவளுக்கு தங்கள் உரையாடல் செல்லும் திசையை  எண்ணி ஒரூ நொடி இதயமே நின்றுவிட்டிருந்தது…அவள் முகத்தின் கன்றலிலேயே அவள் எண்ணவோட்டத்தை உணர்ந்தானோ என்னவோ அவளை மேலும் குழப்பால் பேச்சை மாற்றினான்..

“சரி விடு ஹரிணி இனி அவ உன்கிட்ட பேசாம நா பாத்துக்குறேன்..நீங்க பண்ண அக்கப்போர்ல எனக்கு பசி உயிர் போகுது..அய்யோ மணி 11 தான் ஆகுதா 12 க்கு தான லஞ்ச் ரெடி ஆகும்..இவனுங்க வேற எங்க போய் தொலைஞ்சானுங்கனு தெரில..ஆஊனா எதாவது புதர்க்குள்ள போய் தலைய விட்டுருவானுங்க.”,.என அவன் போக்கில் புலம்ப

ஒன்றும் பேசாமல் தன் பையிலிருந்த பாக்ஸை எடுத்து அவனிடம் நீட்டினாள்..

“அடடா எட்டுமாச பழக்கத்துல இப்போவாவது ஒருத்தனுக்கு சாப்பாடு குடுக்கனும்னு தோணிச்சே குட் ப்ரெண்ட்ஷிப்”, என்றவாறு பாக்ஸை திறந்தவன் சாப்பிட ஆரம்பித்திருந்தான்..அவன்போக்கில் அவளிடம் பேசிவாறு சாப்பிட பெண்ணவளுக்கோ ஆச்சரியமாய் இருந்தது..எந்தவித அலட்டலும் இல்லாமல் அவள் உணவை அவன் சாப்பிடுவது ஏனோ மனதிற்கு இதமாய் இருந்தது…

“நீ சமைப்பியா ஹணி?? “பதிலுக்கு அவள் முறைக்க

“சரி சரி ஹஹஹரிரிரிணிணிணி”, என அழுத்தமாய் கூறினான்..

“ம்ம் சமைப்பேன் ஓரளவு..எப்பவாவது எனக்கா தோணிணா ஹர்ஷாவ பழிவாங்குறதுக்காக..”என்றாள் மென்குரலில்..

“அடீப்பாவி ஏன் அப்படி????”

“இல்ல நா கேட்டு அவன் எதாவது பண்ணலனா இல்ல என்கிட்ட வம்பு பண்ணிணா மறுநாள் நா சமைக்குறதா சொல்லி அப்பா அம்மாக்கு ஒழுங்கா சமைச்சுருவேன் அவனுக்கு தனியா எடுத்துவச்சு உப்பு காரம் எல்லாம் அதிகமா போட்ருவேன்..அப்பா முன்னாடி எதாவது சொன்னா என்னை திட்டுவாறு அதனால அமைதியா சாப்டு போய் ரூம்ல வயித்தை பிடிச்சுட்டு கத்துவான் நா பின்னாடியே இனிப்பு எதாவது எடுத்துட்டு போய் குடுப்பேன் “,என்றாள் வெட்கம் கலந்த சிரிப்போடு..

“கொலைகாரி..ஒரு அப்பாவியை ஈப்படியா பண்ணுவ..அதுவே ஒரு வாயில்லா பூச்சி..”

“ம்ம் ஏதோ அவனோட பேசிப் பார்த்த மாதிரியே சொல்றீங்க??”

அதான் டெய்லி பேசுறனே என மனதில் நினைத்தவன்..,”இல்ல நீ சொல்றத வச்சு பாத்தாலே தெரியுதே அதை சொன்னேன்..தேங்க்ஸ் பார் யுவர் லஞ்ச்..மத்தியானம் நீ கேன்டீன்ல என்ன வேணுமோ வாங்கிக்கோ என் ட்ரீட்..”

“அதெல்லாம் வேண்டாம் நா பணம் வச்சுருக்கேன்..”

சொன்னா சொன்னதுதான் சரி வெளில வேலையிருக்கு லஞ்ச்ல மீட் பண்ணுவோம்..பை டா என்று அவன் நகர ஹரிணிக்கோ மனம் பெரிதாய் குழம்பியிருந்தது..ரேகாவின் பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை..அவன் தன்னை வருங்கால மனைவி என்று குறிப்பிட்டதற்கு கோபம் வராமல் அவளோடு இணைத்து பேசிதற்கு அழுகை வந்தது..

அதற்கு அவன் தன்னிடம் மன்னிப்பு கோரும் போது அவன் தன்னிடம் கெஞ்சுவது பிடிக்கவில்லை..இவையனைத்திற்கும் அர்த்தம்…என அவள் மனது விடையை நெருங்கும் நேரம் எங்கோ யாரோ கிருஷ்ணா என அழைக்க சட்டென அவள் மனக்கண்ணில் தோன்றிய தந்தை முகம் அனைத்தையும் தொலைதூரத்திற்கு தூக்கி எறிந்திருந்தது..

மக்களே காலேஜ் கலாட்டாக்கள் எப்படி இருக்கு..அடுத்தவாரம் இன்னும் சூப்பர் கலாட்டாவோடு சந்திப்போம்.. smilesmile

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.