(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 04 - ஸ்ரீ

en kadhalin kadhali

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதை காதில் கேட்டு

புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ...

 

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே

நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே

ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்

அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

 

இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது

இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது.....

ஞ்சலின் வீட்டிலிருந்து வர சிறிது தாமதமாக கிருஷ்ணன் அவளை ஒரு வழியாக்கிவிட்டார்..ஹர்ஷாவும் மதுராவும் எவ்வளவு கூறியும் அவர் நிறுத்துவதாய் இல்லை..தனதறைக்குச் சென்றவள் விடாமல் அழுது கொண்டிருக்க தாயும் தமையனும் தேற்றும் வழி தெரியாது அமர்ந்திருந்தனர்..

“அனுப்ப இஷ்டமில்லனா அவகிட்டேயே சொல்லிருக்கலாம்தான அம்மா..அதவிட்டு என்னை இப்படி வறுத்தெடுக்குறாரு..ப்ரெண்ட் கூட வெளில போறது ஒரு தப்பா??ஏன்ம்மா அப்பா புரிஞ்சுக்கவே மாட்ராரு??”,என தேம்பி தேம்பி பேச,

“ஹரிணிம்மா உனக்குதான் அவரபத்தி தெரியுமே அழதாடா..இந்தஊர் வாழ்க்கைக்கு அவரு பழக டைம் எடுக்கும்..நீ வீணா போட்டு மனச குழப்பிக்காத..”

“இல்லடா அவருக்கு எப்பவுமே என்ன பிடிக்காது நா எது பண்ணிணாலுமே தப்பு தான் கண்டுபிடிக்குறாரு..அவருக்கு உன்னதான் பிடிக்கும்..”

“அடச்சே லூசு மாதிரி ஏன் பேசுற ஹரிணிம்மா..பேசாம போய் தூங்கு காலைல அவரே உன்கிட்ட வந்து பேசதான் போறாரு போ போய் படு”,என மதுரா அவளை தூங்க சொல்லிவிட்டு வந்தார்..

பெண்ணுக்கு சமாதனம் கூறினாலும் அவருக்கே வருத்தமாகத்தான் இருந்தது அவளின் நிலையை நினைத்து.. புருஷனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் ஒன்றும் கூற முடியாதவராய் நின்றார் அந்த அப்பாவி குடும்பத்தலைவி..

மறுநாள் அவள் கல்லூரிக்குச் செல்லவில்லை..ஹர்ஷா எவ்வளவோ கூறியும் மறுத்துவிட்டு உடம்பு முடிவில்லையென கூறி தனதறையிலேயே இருந்தாள்..

தனிமை தந்த ஆறுதலில் தேர்ந்தவள் மறுநாள் சீக்கிரமாகவே கிளம்பி கல்லூரிக்குச் சென்றாள்..அவளுக்காக காத்திருந்து அவளை காணாமல் ஏஞ்சலோடு கேன்டீனிற்குச் சென்றவன் அங்கு ஓர் ஓரமாய் அமர்ந்து ஏதோ சிந்தனையில் காபி அருந்திக் கொண்டிருந்தவளை கண்டான்..இருவருமாய் சென்று அவளெதிரில் அமர,சின்னதாய் புன்னகைத்து ஹாயென கையசைத்தாள்..

“ஏண்டீ நேத்து வரல முதல்ல ஒரு போன் வாங்கித் தொலையேன் கான்டாக்ட் பண்ணவும் முடில பாக்கவும் முடில”, என ஏஞ்சல் பொரிந்து தள்ள அவள் சலனமில்லாமல் அவள் வேலையை தொடர்ந்தாள்..

அதை உணர்ந்து ஏஞ்சலை அமைதி காக்கச் சொன்னவன் அவளிடம்,

“என்னாச்சு ஹரிணி எதாவது ப்ராப்ளமா??”என கேட்க,

“புதுசா எதுவும் இல்ல நந்தா..வழக்கம்போல அப்பா தான் அன்னைக்கு வீட்டுக்கு போக கொஞ்சம் லேட் ஆய்டுச்சுல பத்தாததுக்கு கைல ஆன்ட்டி குடுத்த புடவை வேற ஆரம்பிச்சுட்டார்..”

ஏஞ்சலின் முகம் வாடிவிட்டது..”சாரி ஹரிணி என்னாலதான் உனக்கு கஷ்டம்..”

“ஹே விடு ஏஞ்சல் அதெல்லாம் ஒண்ணுமில்ல..எனக்கு இது பழகிப்போன ஒரு விஷயம்தான்..இருந்தாலும் இரண்டு நாளாவது தேவைபடுது அதை ஏத்துப் பழகிக்க..அதான் நேத்து வரல..”

ரகுவும் ஏஞ்சலும் என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்க அவளே வாய் திறந்தாள்..

“ஹே உங்களை பாத்தா என் மனசு மாறும்னு பாத்தா நீங்க எனக்கு மேல வயலின் வாசிக்குறீங்க???”

“உன் அப்பா எப்பவுமே இப்படிதானா??”ஏஞ்சல்

“ம்ம் ஆமா எனக்கு தெரிஞ்சு அவரு எங்களோட சிரிச்சு பேசி ஒரு நாள் கூட இருந்ததில்ல..ஆனா அவருக்கு குடும்பத்தை தவிர வேற நினைப்பே கிடையாது..நாங்க தான் அவரோட உலகம்..15 வயசுலயிருந்து ஒரு தகப்பன் ஸ்தானத்துல இருந்து தம்பி தங்கையை ஆளாக்கி அவருக்கான வாழ்க்கையை அவரே தேர்ந்தெடுத்து பசங்களை படிக்க வச்சுனு அத்தனையும் பண்ணிண ஒருத்தருக்கு கோபம் வர்றதுல தப்பு இல்லதான ஏஞ்சல்??என்ன நம்ம வயசுக்கு என்னால அதை அந்த சமயத்துல ஏத்துக்க முடில..”,என மென்சிரிப்பு சிரிக்க

ரகுவிற்கோ ஆச்சரியமாய் இருந்தது..இவ்வளவு நேரமும் தன்னை திட்டியதை நினைத்து வருந்தியவள் இப்போது அவருக்காக பரிந்து பேசுகிறாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.