(Reading time: 20 - 40 minutes)

“நந்தா எல்லாம் ஓ.கே தான??செம டென்ஷனா இருக்கு..லாட் மட்டும் பர்ஸ்ட் நம்பர் வந்துர கூடாது..என்ன நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் ஹலோ”, என கையசைக்க அவள் வளையல்களின் ஓசையில் தன்னிலை பெற்றவன்..

“யூ ஆர் லுக்கிங் சிம்பிளி க்ரேட் ஹணி” என உணர்ந்து கூற இருந்த பயத்தில் அவன் அழைப்பை கவனிக்காதவள் வழக்கமான தன் புன்னகையோடு,” தேங்க்ஸ் நந்தா..சரி நா போய்ட்டு சாங் செக் பண்ணி வைக்குறேன்”, என்றவாறு கையசைத்துச் சென்றாள்..

ரகுவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாய் எகிறியது..அவள் கண்களில் இருந்த மையால் அவள் கண் பேசிய பாஷைகள்கூட அழகிய கவிதையாய் தோன்றியது அவனுக்கு..அவ்வளவு வேலையையும் விட்டுவிட்டு அவள் ஆடுவதை பார்த்தே தீரவேண்டும் என உறுதி கொண்டவன் தன் கேண்டிகேமோடு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்..அவனை மேலும் சோதிக்காது இரண்டாவதாய் மேடை ஏறினாள் அவனவள்..ஆட ஆரம்பித்த அந்த நொடியிலிருந்து கை கேமாராவில் நடனத்தை பதிவு செய்து கொண்டிருந்தாலும் கண் அவனின் மனதில் பதிவு செய்து கொண்டிருந்தது..

போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!

போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!

கங்காதர சங்கர கருணாகர 

மாமவ பவ சாஹர தாரக.   (போ).

நிர்குண பரம்ப்ரம்ஹ ஸ்வரூப 

கமா கம பூத பிரபஞ்ச்ச ரஹித

நிஜ குஹ நிஹித நிதாந்த்த

ஆனந்த்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க.   (போ).

திமித, திமித, திமி, திமி, கிட, தக, தோம் 

தோம், தோம், தரிகிட, தரிகிட, கிட, தோம் 

மதங்க முனிவர வந்தித ஈசா 

சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 

நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 

ஈசா!  சபேசா!   சர்வேசா!!! “

அங்கு பெண்ணவள் பிடித்த ஒவ்வொரு அடவிற்கும் ரகுவின் மனம் அதன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தது..இறுதியாய் சிவனின் கோபத்தை கண்களில் கொடுத்து அவள் கொடுத்த போஸில் மொத்த ஆடிட்டோரியமும் கைதட்டலில் அதிர்ந்தது..அவன் மனநிலை புரியாமல் அகிலும் விக்கியும் அவனின் போட்டிக்காக இழுத்துச் சென்றனர்..மைம் அண்ட் சோலோ சிங்கிங்கை முடித்து வந்தவன் ஆடிடோரியத்தில் சென்று தன்னவளை தேட கூட்டத்தின் நடுவிலிருந்து கையசைத்து அவனை தன்புறம் வரச் சொன்னாள்..

“நந்தா என் ஈவண்ட்பாத்தீங்களா??எப்படியிருந்தது??நல்லாதான் பண்ணேன்..இருந்தாலும் கொஞ்சம் டென்ஷனா இருக்கு..”

“ஹணி..”

அப்பொழுதுதான் அவன் அழைப்பை உணர்ந்தவள் அவனைப் பார்க்க,

“ஐ அஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ..ஷல் ஐ???”,என நாற்காலியின் பிடியிலிருந்த அவள் கையை பிடிக்க,ஒரு நொடி அதிர்ந்தவள் ஒன்றும் கூறாமல் கையை விடுவித்துக் கொண்டாள்..அதற்குள் ஆன் ஸ்பாட் ஈவண்ட்டிற்காக இவர்கள் கல்லூரி சார்பில் ரகுவின் பெயரை அழைக்க தான் செய்த காரியம் அப்போதுதான் அவனுக்கு உரைத்தது..

ஐயோ என்ன பண்ணி வச்சுருக்கேன்..ஓ நோ..ச்சச்ச..சரி வந்து பேசிக்கலாம் என்றவன் ஸ்டேஜ் ஏற ஹரிணிக்கு அவன் தொட்ட கைகளில் இன்னும் நடுக்கம் குறையவில்லை..அதற்குள் அங்கு பாட்டு போட ஆரம்பிக்க ரகு ஆட ஆரம்பித்திருந்தான்..சூழ்நிலைக்கு ஏற்ற பாடலை போட்ட அந்த முகம் தெரியாதவருக்கு நன்றி கூறியவன் ஹரிணியை வீட்டு கண்களை அங்கிங்கு அகற்றவில்லை..

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு

அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்

தைய தைய தைக்க தைய தைய தையா தையா

ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்

சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்

உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்

நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்

ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ

முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....

ஒவ்வொரு வரியும் தனக்காய் தன்னவளுக்காய் இந்த நொடி பாடப்படுவதாய் தோன்றியது ரகுவிற்கு..அவன் மேடையை விட்டு இறங்கும் நேரம் மத்த கல்லூரி பட்டாம்பூச்சிகளின் ஆரவாரம் காதை கிழித்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.