(Reading time: 20 - 40 minutes)

“சரி சரி அழாத ஹரிணி வா போலாம் “,என அவளை அழைத்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்குச் சென்றாள்..

வழக்கம்போல் லஷ்மி மட்டும்தான் இருப்பார் என நினைத்து உள்ளே சென்றவளை வரவேற்றது கண்ணன்தான்..

“வாடா ஏஞ்சல் எப்படியிருக்க???என்ன திடீர்நு வீட்டுக்கு வந்துருக்க??ஆமா யாரு இது உன் ப்ரெண்டா???”

“ஆமா அங்கிள் பேரு ஹரிணி நேத்துகூட பேசினீங்களே???”

“ஓ அந்த பரதநாட்டியம் ஆடின பொண்ணா அந்த வீடியோ பாத்தேன் ரொம்ப நல்லா ஆடியிருந்தம்மா..காலேஜ் டேயிலும் நீதான் ஆடனும்..”

“ஓஓ. ஓ.கே சார்..”

“வாடா ஹரிணி எப்படியிருக்க”, என்றவாறு லஷ்மி வர,

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி நீங்க எப்படியிருக்கீங்க???”

“எனக்கென்ன நல்லாயிருக்கேன்டா..”

“ஆன்ட்டி அண்ணாக்கு இப்போ எப்படியிருக்கு??பாத்துட்டு போலாமேநு வந்தோம்..”

ம்ம் மாடில தான் இருக்கான் போய் பாருங்க என அனுப்பிவைத்தார்..அவனறையை தட்டிவட்டு உள்ளே செல்ல சோர்வாய் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்..அவளை கண்டதும் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை ஏஞ்சலுமே கவனித்தாள்..பொதுவாய் விசாரித்துவிட்டு போன் வந்திருப்பதாய் கூறி அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தாள்..

“சாரி நந்தா  எப்படியிருக்கீங்க???”

“பெட்டர் ஹரிணி..நீ எதுக்கு சாரி சொல்ற/????”

“இல்ல என்னால தான உங்களுக்கு…நா அப்படி பேசியிருக்க கூடாது..”

“ஹணி ப்ளீஸ் கண்ணை தொட..ஒன் மந்த்தா செம வொர்க் ப்ளஸ் அலைச்ல் அதான் ப்வீவர் வந்துடுச்சு இதுக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல..ரிலாக்ஸ்..”

“இல்ல ரொம்ப ஹர்ட்  பண்ணிணட்டேனோனு தோணிச்சு நா சொன்ன விஷயத்துல எந்த மாற்றமும் இல்ல ஆனா அத இன்னமும் பக்குவமா பேசியிருக்கலாமோநு தோணுது..டாக்டர் கிட்ட போனீங்களா???”

“ம்ம் நேத்துபோய்ட்டு வந்தேன் வைரல் பீவர்தான் இரண்டு நாள்ல சரி ஆய்டும்னு சொன்னாரு பட் இப்போ உன்னை பாத்ததுல இப்போவே சூப்பரா ஆய்ட்டேன்னு தோணுது..”

“நீங்க இப்படியே பேசுறதாயிருந்தா நா கிளம்புறேன்..”

“சரி சரி டென்ஷன் ஆகாத…பர்ஸ்ட் டைம் என் ரூம்க்கு வந்துருக்க இட் ஷூட் பி வெரி ஸ்பெஷல் பார் மி எதாவது பேசி மூட் அவுட் பண்ணிடாத..”

அப்போதுதான் அது அவனறை என்பதை உணர்ந்தவள் சட்டென எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அவளை நிறுத்த வேகமாய் எழுந்தவன் ஒழுங்காக சாப்பிடாத காரணத்தால் தடுமாறி விழப் போக அவன்குரல்கேட்டுத் திரும்பியவள் அவனை தாங்கிப் பிடிக்க அவனின் எடை தாங்காமல் கைகளுக்கு அடியில் பிடி கொடுத்து பிடித்தாள்..

அவன் நிதானமான பிறகே தான் நிற்கும் கோலத்தை பார்க்க கிட்டதட்ட அவனை அணைத்தவாறே நின்றிருந்தாள்..விலகப் போனவளை தன்புறம் இழுத்தவன்,

”தேங்க்ஸ் பார் தி ஹக் ஹணி..பீவருக்கு இத விட பெஸ்ட் டேப்லெட் கிடையாது”, என அவள் மூக்கை தன் விரலால் தட்டியவன் அவளை விடுவிக்க சர்வமும் அடங்கிப் போய்  நின்றிருந்தாள் பெண்ணவள்..அனைத்துமே சில நொடிகள் தான் எனினும் அவனின் அருகாமையும் அந்த கிசுகிசுப்பான குரலும் அவளை பையத்தியமாக்கி விட்டிருந்தது..சொல்லாமல் கொள்ளாமல் அறைவாசலை எட்டியிருந்தவளை பார்த்தவன்,

“ஓய் இது வேண்டாமா”, என கேட்க திரும்பியவளிடம் அவன் கையில் வைத்திருந்த அவளின் துப்பட்டாவை காட்டி என்னவென்பதாய் புருவமுயர்த்த மெதுவாய் முன்னே சென்று இடைவெளி விட்டு தன் கையை நீட்டினாள்..ஒரு முனை அவள் கையில் படுமாறு அதை தூக்கிப்போட அதை பெற்றவள் தன்புறமாய் அதையிழுத்தாள்..மறுமுனை அவன் கையிலிருந்து நழுவும் நேரம் அதை இறுக்கமாய் பிடித்தவன்,

“லவ் யூ ஹணி உன் மனசு மார்ற வர நான் காத்துட்டு இருப்பேன்..தேங்க்ஸ் பார் கம்மிங்”, என கண்ணடித்து விடுவிக்க அதை பெற்றவள் திரும்பிகூட பார்க்கால் ஓடிவிட்டாள்..அவள் நினைவில் கரைந்தவன் கட்டிலில் விழ அங்கு ஹரிணியோ தன் கட்டிலில் கண்ணீரை மறைத்துக் கொண்டிருந்தாள்..

ப்ரெண்ட்ஸ் எப்படியிருந்தது ரகுவோட ப்ரபோசல்..ஹரிணி பாவம் என்ன பண்ண போறாங்கனு பக்கலாம்.. smilesmile

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.