(Reading time: 20 - 40 minutes)

வந்தவன் எதையும் காதில் வாங்காது அவளை தேடிச் செல்ல அவள் அங்கு இல்லை..அதன்பின் தேடுவதற்கு அவனுக்கு நேரமில்லை..அடுத்தடுத்து க்ருப் பெர்பாமன்ஸ் ஸ்கிட் என அவன் கலந்துகொள்ள பரிசு அறிவிக்கும் நேரத்தில் தான் அவளை கண்டான்..முகமே சரியில்லை பார்த்தவனுக்கோ ஒருமாதிரி ஆகிவிட்டது..தான் இதுவரை யாரிடமும் விளையாட்டிற்கு கூட இப்படி பேசியதில்லை..அப்படியிருக்க எந்த உரிமையில் அவளிடம் அப்படி கேட்டோம் என தன்னை தானே நொந்து கொண்டான்..பரதத்தில் அவளுக்குத்தான் முதல் பரிசு அந்த சந்தோஷம்கூட அவள் முகத்தில் இல்லை..ஆனால் ஓவரால் ட்ராஃவி வாங்கியபோது அனைவரின் உற்சாகமும் சந்தோஷமும் அவளிடம் ஒட்டிக் கொள்ளே லேசாய் சிரித்து மகிழ்ந்தாள்..

எப்படியும் தன்னோடு தான் வர போகிறாள் அப்போது பேசி புரிய வைத்துவிட வேண்டும் என்றெண்ணியவாறு காரின் அருகிலேயே காத்திருந்தான்..இரவு மணி ஏழைத் தொட்டிருக்க,ஏஞ்சல் விக்கியோடு செல்வதாய் கூற அகில் இன்னொரு காலேஜில் இருந்து வந்திருந்த தன் நடண்பனோடு போவதாய் கூறினான்..ஹரிணி என்ன செய்வதென புரியாமல் அவன் காரின் அருகே வந்தாள்..

“ஹணி அம் சாரி..”

கண்களில் நீர் வழிந்தது அவளிடம்..,”ஏன் அப்படி பேசினீங்க நந்தா???”

ரியலி ரியலி சாரிடா..என அவள் கைப்பிடிக்கச் செல்ல சட்டென கையை எடுத்துக் கொண்டாள்..

“ஹணி..”

“முதல்ல என் பேரை ஒழுங்கா கூப்டுங்க..”

“சரி இனி அப்படி கூப்டல பட் நா சொல்ல வர்றத கொஞ்சம் பொறுமையா கேளு ப்ளீஸ்..”

சற்றே நிதானமானவள் சுற்றும் முற்றும் பார்த்தவாறு அவனை ஏறிட்டாள்..

“ஐ அம் இன் லவ் வித் யூ ஹணி..சாரி..ஹரிணி..எப்போ இருந்துநு தெரில பட் ரொம்ப நாளாவே..நீ எனக்கு வெறும் ப்ரெண்ட் மட்டும் இல்லயோனு தோணும் ஆனா அதோட அர்த்தம் எனக்கு புரில பட் இன்னைக்கு காலைல உன்னை பாத்தப்போ சத்தியமா ஃபலட் ஆய்ட்டேன்..நா ஏன் அப்படி கேட்டேன்னு கூட எனக்கு லேட்டா தான் புரிஞ்சுது..நா ஜாலி டைப்தான் பட் ப்ளே பாய் கிடையாது ஐ நோ மை லிமிட்ஸ்..பட் அதையும் மீறி தான் உன்கிட்ட நா இப்படி பேசிட்டேன்..நீ என்கூட லைப் புல்லா என் ஃவைப்பா ப்ரெண்டா  இருந்தா என் லைவ் சந்தோஷமா இருக்கும்னு தோணுது..”

“ஆனா என் லைப்???”

“ஹரிணி???”

தப்பா எடுத்துக்காதீங்க நந்தா..என் பேமிலி பத்தி உங்களுக்கே தெரியும் நீங்க சொல்றது நடந்தா கண்டிப்பா எங்க வீட்டை விட்டு நா தூரமாதான் இருக்கனும்..எங்கப்பா பொண்ணே இல்லனு தலை முழுகிடுவாரு..எல்லாத்துக்கும் மேல உங்க வீட்டோட ஆடம்பரம் எப்பவுமே எனக்கு பயத்தை தான் குடுக்கும்..ஒரு அரைமணி நேரத்துக்கே மூச்சு முட்ற இடத்துல என்னால எப்பபடி வாழ்க்கை புல்லா இருக்க முடியும்..சோஇந்தபேச்சை இப்படியே விட்டுருங்க நந்தா..

என் அப்பா அண்ணாக்கு அப்பறம் எனக்கு கிடைச்ச ஒரு அழகான ஆண் அறிமுகம் நீங்க அதை அழகான கவிதையா மனசுல வச்சுருக்கனும்னு நினைக்குறேன்..கசக்கி குப்பைல போட வச்சுறாதீங்க ப்ளீஸ்..இப்பவும் நந்தா என்னோட ஒரு நல்ல ப்ரெண்ட்னு நா நம்புறேன் அப்பறம் உங்க இஷ்டம்..என அவனை பார்க்க பக்கவாட்டில் நின்றிருந்தவன் போலாம் என்பதாய் கையசைத்து காரினுள் செல்ல ஒன்றும் கூறாமல் அமர்ந்து கொண்டாள்..அவள் வீட்டு தெரு கோடியில் காரை நிறுத்தியவன் அவளை ஏறிட பை நந்தா நாளைக்கு பாக்கலாம் என்றவாறு நடந்து சென்றாள்..

றுநாள் கல்லூரியே ஆரவாரமாய் இருந்தது..ட்ராஃபி வாங்கிய சந்தோஷத்தோடு கரஸ்பாண்டண்டை சந்திக்க இருபத்தைந்து பேரும் செல்ல முதன் முறையாய் கண்ணனை அவள் சந்தித்தாள்..ஒவ்வொருவரிடமும் தனித்தனியே முந்தைய நாளின் அனுபவத்தை பற்றி விசாரித்து ஊக்குவித்து நண்பரைபோல் பேசியவரை பார்த்தவளுக்கு நந்தாவின் குணம் சிறிது அவன் தந்தை போன்றது என தோன்றியது..

அப்போது தான் அவனை வந்ததிலிருந்து பார்க்கவில்லை என்பது உரைக்க விசாரித்ததில் யாருக்கும் தெரியவில்லை..ஏனோ மனம் கஷ்டமாய் இருக்க இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அன்றைய பொழுதை கழித்தாள்..மறுநாளும் அவன் வராமல் போக ஏஞ்சல் அவனுக்கு உடம்பு சரியில்லாததால் வரவில்லை என்று கூறினாள்..

மனம் நிலைகொள்ளாமல் தவிக்க ஏஞ்சலிடம் சென்று அவனைப் பார்க்க வேண்டும் என்று கூற அவளே ஆச்சரிமாய் பார்த்தாள்..பின் அன்று அவன் தன்னிடம் ப்ரப்போஸ் செய்ததையும் தான் அதற்கு பேசியதையும் கூறியவளுக்கு அடக்க மாட்டாமல் அழுகை வந்தது..

“ஹே ஹரிணி அழாத ஒண்ணுமில்ல சாதாரண பீவர் தான் அதுக்கு ஏன் இவ்ளோ வருத்தப்படுற..பட் அண்ணா சொன்னத நீ ஏன் யோசிச்சு பாக்க கூடாது???”

“ஏஞ்சல் நீயும் இப்படி பேசுறியே..அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாரு…இப்போகூட என்னால தான் அவருக்கு உடம்பு முடிலயோங்கிற குற்றவுணர்ச்சில தான் பாத்துட்டு வரலாமாநு கேட்டேன் மத்தபடி எதுவுமில்ல..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.