(Reading time: 20 - 40 minutes)

அவளின் நட்பை அதைவிட அவளையே அதிகமாய் விரும்புவதாய் தோன்றியது அவனுக்கு…அன்று ஏஞ்சல் விக்கியோடு வெளியே செல்வதாய் கூற அகிலும் வேலையிருப்பதாய் கிளம்பிவிட ரகு ஹரிணியோடு தனிமையில் பேச நேரம் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டான்..

அவள்பாட்டுக்கு சாப்பிட அவனும் தன் தட்டை எடுத்து வந்தமர்ந்தான்..எதார்த்தமாய் அவன் தட்டிலிருந்த அப்பளத்தை எடுத்து வாயில் வைத்தவள் புளியோதரை சாப்பிடுறீங்களா??என தன் பாக்ஸை நீட்ட புன்னகையோடு கொஞ்சமாய் எடுத்துக் கொண்டான்..

“ஆமா புடவை எங்கம்மா குடுத்ததாவா சொன்ன???”

“ம்ம் ஏன் எங்கப்பா பொட்டியோட என்ன உங்க வீட்டுக்கு அனுப்புறதுக்கா என அவனை விளையாட்டாய் முறைத்தவள் ஏஞ்சல் வீட்ல குடுத்ததா தான் சொன்னேன்…”

“ம்ம் ஒரு இரண்டு மணி நேரத்துக்கே இப்படியா??இதுல எங்கம்மா உன்னையும் ஏஞ்சலையும் அடிக்கடி வீட்டுக்கு வர சொன்னாங்க..”

ம்ம் என தலையசைத்தவள்,”என் மனசுல பட்ட ஒரு விஷயத்தை சொல்லடுமா??தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??”

“ப்ரெண்ட்ஸ் ஆகி இரண்டு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு நீ எப்போ தான் இப்படி பார்மலா பேசுறத நிறுத்துவியோ சரி சொல்லு என்ன விஷயம்???”

“அக்சுவலா உங்க வீட்டுக்குள்ள வந்தவுடனே ஒரு மாதிரி பயமா இருந்துச்சு அங்கிருந்த ஒவ்வொரு பொருளோட ஆடம்பரமும் ரொம்பவே அந்நியமா பட்டுது எனக்கு..பட் நீங்களும் உங்க அம்மாவும் அவ்ளோ கேஷுவலா பேசும் போது மத்ததெல்லாம் பெருசா தெரில..கரஸ் பையன்னு தெரிஞ்சுருந்தாலும் இங்க எல்லாரோடையும் பாக்கும் போது டிவ்ரன்ஸ் தெரில பட் என் டிபார்ட்மெண்ட் சீனியர்ஸ் ஏன் டென்ஷன் ஆனாங்கனு இப்போ புரியுது..”,என அவனை பார்க்க,

ரகு ஆண் நண்பர்களை தான் உரிமையோடு வீட்டிற்கு அழைத்துச் செல்வான்..பெண் தோழிகளிடம் எப்போதுமே ஒரு எல்லையிருக்கும் அதற்கு காரணம் அவன் தந்தையாக கூட இருக்கலாம் ப்ரொஃபர்ஸர்ஸ் யாராவது தந்தையிடம் தப்பாய் எதுவும் கூறிவிட்டால் தர்ம சங்கடமாய் இருக்கும் என்பதால் அவ்வளவாய் பேச மாட்டான்..

அப்படி அவன் அழைத்து வரும் நண்பர்களே இவன் வீட்டை பார்த்து அதன் அழகைதான் ரசிப்பார்களே ஒழிய இந்தமாதிரி கூறியதில்லை..இவ என்னை மொத்தமா பைத்தியம் ஆக்காம போகமாட்டா போலயிருக்கே என்றவன் அதை தொடர்ந்து அவள் கூறியதிற்கு தலை மட்டுமே அசைத்துக் கொண்டிருந்தான்..ஆனால் அவள் எதாவது திருப்பி கேட்டாலென்றால் ஒன்றும் சொல்லமுடியாது ஏனெனில் காதில் அவள் வாயசைப்புக்கு ஏற்ப இளையராஜாவின் ஹார்மோனிய சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது…

நாட்கள் அதன்போக்கில் அழகாய் கடந்திருக்க ஹரிணி ரகுவின் நட்பும் ஆலமரமாய் வளர்ந்திருந்தது…பெண்களுக்கு எப்போதுமே தன் முதல் ஆண் நட்பு கொஞ்சம் சிறப்புதான்..அதுபோலவே ஹரிணிக்கு ரகு ஆகினான்..ஆனால் ரகுவிற்கோ இது நட்பையும் மீறிய ஒன்றாய் தோன்றியது..பெரும் குழப்பத்திலேயே இருந்தான்..அவளோடு இருக்கும் நொடிகளை ரசித்து மகிழ்ந்தான்..அவள் அருகாமையை விரும்பினான்.இருந்தும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.ஹரிணிக்கு அவனிடம் சில வித்யாசம் தெரிந்தாலும் அவன் குணமே இலகுவாய் பழகுவது தான் என விட்டுவிட்டாள்…

ஹர்ஷா வழக்கம்போல் வேலைக்குச் சென்று வர மாதமிரண்டு முறையோ மூன்று முறையோ அஞ்சலியிடம் போனில்  பேசிவந்தான்..

“டேய் ஹர்ஷா அப்பறம் என் அத்தை பொண்ணு என்ன சொல்றா???”

“ஏண்டி உனக்கு இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா??”

“ஐயோ பாவமே என்ன நடக்குதுநு கேப்போமேநு கேட்டேன் சொல்ல வேண்டாம்னா விடு..”

சோர்வாய் அவளருகில் அமர்ந்தவன்,”என்னத்த சொல்ல ஹரிணிம்மா அவ பேசும்போதெல்லாம் ஒரே அழுகை..எப்போவாவது தான் பேசுறீங்க உண்மையாவே என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா என்னை எப்போ பாக்க வருவீங்கனு.ரொம்ப கஷ்டமா இருக்கு..”

ஆதரவாய் தமையனின் தோள் பற்றியவள்,”கவலபடாத அண்ணா,நா அவகிட்ட பேசுறேன்..பேசாம அத்தைகிட்ட சொல்லி கல்யாண பேச்சை எடுக்க வேண்டியதுதான???”

“உனக்கு கல்யாணம் பண்ணாம எப்படிடா ஹரிணி..”

“அடேய் பாவி உனக்கு நல்லது பண்ண நினைக்குற என்னையே பாழங்கிணத்துல தள்ள பாக்குறியே நல்லாயிருப்பியா”

“ஏய் இப்போதானடி அண்ணானு பாசமா கூப்ட??”

“இதோ பாரு உன் ஆள கல்யாணம் பண்ணோமா டூயட் பாடினோமானு வேலையை பாரு நா இப்போலா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..இரண்டு வருஷமாவது வேலை பாத்துட்டுதான் கல்யாணம் எல்லாம்..”

“இத போய் நம்ம கேப்டன் பிரபாகர்ட்ட பேசுடீ ஒரு அப்பாவி பையனை பிடிச்சு கத்துற போய் வேலையப் பாரு போ..”என கடுப்பாய் சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.