(Reading time: 20 - 40 minutes)

ன்று காலேஜில் லஞ்சிற்கு அமர்ந்தவர்கள்,ஏஞ்சலும் ஹரிணியும் பேசாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்..

“அடடா என்ன ஒரு அதிசயம் உயிர்தோழிங்க ரெண்டுபேரும் பேசாம இருக்கீங்க???”அகில்

“டேய் தடிமாடு வேணாம் ஏற்கனவே கடுப்புல இருக்கேன்..”

“மண்ணெண்ணை வேப்பெண்ண விளக்கென்ன நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன”, என அவன் போக்கில் சாப்பிட ஆம்பிக்,

ரகு ஹரிணியிடம் என்னவென செய்கையால் கேட்க,”எல்லாம் இவளால தான் நந்தா  இன்டர் காலேஜ் மீட்ல டான்ஸ்க்கு என் பேரை குடுத்து வச்சுருக்கா..”

“இது நல்ல விஷயம்தான நாகூட பார்ட்டிசிபேட் பண்ண போறேனே..”

“ஐயோ எங்கப்பாவ பத்தி தெரிஞ்சும் இப்டி சொல்றீங்களே..”

“ஐய்யய்யே உங்கப்பா ப்ரச்சனை பெரும் ப்ரச்சனையா இருக்கே தூக்கிரலாமாநு சொல்லு..”அகில்

“அண்ணா..”

“சரிரி ரைட்டு விடு…”

“அவரு நம்ம காலேஜ்ல ஆடுறேன்னு சொன்னாலே தையா தக்காநு குதிப்பாரு இதுல இன்டர் காலேஜ் நடக்குற காரியமா????”

“சரி உனக்கு அப்பா ஓ.கே சொன்னா ஓ.கேதான??நா பாத்துக்குறேன் விடு”, என அகில் கூற,

“என்ன அண்ணா பண்ணபோறீங்க???”

“வெயிட் அண்ட் வாட்ச் டேய் மச்சான் இந்த திருட்டு வேலைக்கு எல்லாம் நீதான் சரி வருவ”, என விக்கியிடம் கூற,

“தெரியுமே பொண்ணு குடுக்குறீங்கன்ற ஒரே காரணத்துனால உன் இம்சையெல்லாம் தாங்கிக்க வேண்டியிருக்கு..பண்ணித் தொலையுரேன்..உங்கப்பா நம்பர் சொல்லு”, என ஹரீணியை கடுப்பாய் பார்த்தான் விக்கீ..

“எதுக்கு அவர் நம்பர் என்ன கேக்க போறீங்க???”

“ம்ம்ம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமாநு கேக்க போறேன்..ஏன்ம்மா நீ வேற குடு..”

நம்பரை வாங்கியவன் டயல்செய்து அவர் அழைப்பை ஏற்க காத்திருந்தான்..அழைப்பை அவர் ஏற்க,

“ஹலோ மிஸ்டர் கிருஷ்ணன்,ஐ அம் நாரயணன் உங்க பொண்ணு படிக்குற காலேஜ் ப்ரொபசர் பேசுறேன்..”

“………..”

“அடுத்த மாசம் எங்க காலேஜ்க்கு இன்டர்காலேஜ் மீட் இருக்கு உங்க பொண்ணு பரதநாட்டியம் தெரியும்நு சொன்னா அதான் அவ பேரையும் லிஸ்ட்ல சேத்துக்கிறதா உங்ககீட்ட இன்பார்ம் பண்ணிடுறோம்..”

“…..…….”

“நோ நோ இதுக்கு எங்க காலேஜ்க்கு ரொம்ப முக்கியமான காம்படீஷன் சோ அவ பர்பார்ம் பண்ணி தான் ஆகணும்..”

“………”

“ஓ.கே தேங்க் யு மிஸ்டார் கிருஷ்ணன்..”,என்றவன் போனை வைக்க ரகு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..ஹரிணியோ ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க என பாவமாய் கேட்டாள்..

“இதவிட்டா வேற வழி கிடையாது கல்சுரல்ஸ் இன்சார்ஜா நாங்க பொறுப்புல இருக்கப் போற கடைசி வருஷம் ட்ராஃவி அடிச்சே ஆகாணும்..சோ பர்ஸ்ட் க்ளாசிகல் சோலோ உன் பொறுப்பு”, என அகில் கூற சம்மதமாய் தலையசைத்தாள்..

மொத்தமாய் இருத்தி ஐந்து பேர் கலந்துகொள்ள ரகு கலைநிகழ்ச்சி கூட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பதில் வேலை சற்று அதிகமாகவே இருந்தது..அவன் ஏஞ்சல் போக நான்கு பேர் குழு நடனத்தில் இருக்க அகில் மற்றும் விக்கி இன்ஸ்ட்ருமெண்டல் கேட்டகிரியில் இருந்தனர்..அதுபோக மைம் சோலோ டான்ஸ் சிங்கிங் என அனைத்து கேட்டகிரியும் பிரித்து அதற்கானவர்களை சரியாய் பயிற்சி செய்ய கூறி அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து என ஒருமாதமும் ரெக்கை கட்டி பறந்தது..

னைவரும் ஆவலாய் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது..ஹரிணி வழக்கம்போல் ஹர்ஷாவோடு கல்லூரியை அடைந்துவிட அங்கிருந்து காரில் ரகுவோடு செல்வதாய் ஏற்பாடு..போட்டி நடைபெறவிருக்கும் காலேஜை அடைந்தவர்கள் தங்கள் காலேஜை ரிஜிஸ்டர் செய்துவிட்டு மற்றவர்களின் வருகையை உறுதிபடுத்தி ஆடிட்டோரியத்தில் காத்திருக்க ஹரிணிக்கு தான் முதல் போட்டி என்பதால் ஏஞ்சல் அவளை அழைத்துக் கொண்டு ஒப்பனை செய்யச் சென்றாள்..

போட்டி ஆரம்பமாக இன்னும் நேரமிருக்க கூட்டம் வர ஆரம்பித்திருந்தது..ரகுவிற்கு பேக் டு பேக்போட்டிகள் இருப்பதால் ஹரிணியை அழைத்து ஆல் த பெஸ்ட் கூற எண்ணி ஏஞ்சலிற்கு அழைத்தான்..அவள் தாங்கள் இருக்கும் ப்ளாக் நேமை கூற மற்றவர்களிடம் கூறிவிட்டுச் சென்று அவள் அறையை விட்டு சற்று தள்ளி காத்திருந்தான்..

கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்பியவன் கண்ணிமைக்க மறந்து இதயம் வாய் வழி வந்துவிட்டதாய் உணர்ந்தான்..இலைப்பச்சை நிறத்தோடு கூடிய கருப்பு வண்ண பார்டர் கலந்த பரத நாட்டிய உடையும் அதற்கேற்றவாறு  சிகை அலங்காரமும் தலைநிறைய பூவும் வெண்கற்கள் பதித்த நகைகளும் அலங்கரிக்க காலில் சலங்கை ஒலியோடு தன்முன் வந்தவளை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.