(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 06 - ஸ்ரீ

en kadhalin kadhali

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ

வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ

ஏனோஏனோ…. ஏனோஏனோ

 

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ

புடவை அடிகடி நழுவும் அது ஏனோ

ஏனோஏனோஏனோஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ,”

ன்னும் நான்கு நாட்களில் ஆண்டு விழா நாள் வர அன்று அனைவரையும் ரிகர்சலுக்காக அழைத்திருந்தனர் ப்ரின்சிபலும் கரஸ்பாண்டட்டும்..ரகு ஏதோ வேலையாய் சென்றிருக்க அவன் வருவதற்குள் ஹரிணி ஆடி முடித்திருந்தாள்..ஒவ்வொரு பெர்பாமன்ஸாய் பார்த்து அவர்கள் தங்களுக்கு தோன்றிய நிறை குறைகளை கூறினர்..

ஓரளவு அனைத்துமே திருப்தியாய் இருக்க கடைசியாய் டேப்ளோ எனப்படும் நிலைக்காட்சி பற்றி அதன் பொறுப்பு ஆசிரியரிடம் கேட்க ஆண்டாள் ரங்கநாதர் சயனம் காட்சி ஏற்பாடு செய்துவிட்டதாகவும் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஆண்டாளாக செலெக்ட் செய்திருந்த பெண் ஏதோ உடல்நல குறைவால் வரவில்லை என்று கூறினார்..

“திடீர்நு இப்படி ஆயிடுச்சு சார்.. நா புதுசா யாரையாவது ஏற்பாடு பண்றேன்..”

“வேண்டாம் இன்னும் நாலு நாள் தான் இருக்கு புதுசா ஆளையெடுத்து அவளுக்கு காஸ்டீயூம்லா ஹீகும் சரி வராது எதாவது சொதப்பிட்டா ரொம்ப கஷ்டம்..”,என்றவாறே கண்ணை சுழற்றியவர்,

“ம்ம் இந்த பரத நாட்டியம் ஆடுற பொண்ணையே போடுங்களேன்..ஏன்மா நீ வேற எதாவது பெர்பார்ம் பண்றியா???”

“இல்ல சார்..ஒண்ணு மட்டும் தான்..”

“அப்பறம் என்ன அந்த காஸ்டியூம் ஜீவ்ல்ஸ்கூட எக்ஸ்ட்ரா தேவையானதை மட்டும் போட்டு ரெடி பண்ணிடுங்க…என்ன ரகு சரியா வரும்ல???”

“ம்ம் எஸ் சார் “,என்றவனின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் தெரிந்ததாய் தோன்றியது ஹரிணிக்கு..ஆனால் அதன் காரணம் தெரியவில்லை…சற்று நேரத்தில் அதை மறந்தும் விட்டாள்.அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த நாளும் வந்துவிட்டிருந்தது..நான்கு மணியளவில் விழா ஆரம்பமாக விருந்தினர் உரை பரிசு வழங்குதல் அனைத்தும் முடிந்து கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது..

ரகு மேடையில் உள்புறமே நிற்க வேண்டியிருந்ததால் தன் நண்பணிடம் அவள் நடனத்தை ரெக்கார்ட் செய்ய சொல்லிருந்தான்..சலங்கை ஒலி கேட்டு திரும்ப நினைத்தவனுக்கு மனம் தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது..எப்படி இருப்பாள் ஆட வேறு போகிறாள் எங்கேயாவது போய்விடலாம் என்று பார்த்தால் அடுத்து அவன் ப்ரோகிராம் தான் என்பதால் நகரவும் முடியாது..அவன் இம்சையை அறியாதவள் அவனருகிலேயே வந்து நின்றாள்..இருட்டில் முகம் பார்க்காமல் அவள் நிற்க தலையை திருப்பாமல்,

“ஆல் த பெஸ்ட் ஹணிம்மா..நல்லா பண்ணு “,என அவள் காதருகில் உரைத்தான்..அத்தனை ஆரவார சத்தத்திலும் அவன் குரலின் மென்மை அவள் மனதை ஆட்டிப் பார்க்கத்தான் செய்தது..

தேங்க்ஸ் நந்தா என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..அதற்குள் மேடை திரையிடப்பட்டு அவளை ஆசிரியர் அழைக்க இடையில் இரு கைகளையும் மடித்தவாறு பார்வையாளர்களுக்கு முதுகுகாட்டி நின்றாள்..திரை விலக விளக்குககளின் ஒளி கண்கூசுமளவில் அவள்மீது விழ முன்னே திரும்பியவளை கண்டவன் மூச்சு விடுவதே பாரம் எனுமளவிற்கு அவளுள் லயித்திருந்தான்..

அழகான அடர்நீல புடவையில் இரத்த நிற பார்டரோடு கூடிய பரத நாட்டிய உடையும் தலை முதல் இடை வரை அதற்கேற்ற டெம்பிள் செட் நகைகளும் கண்ணுக்கு அடர்த்தியாய் தீட்டியிருந்த மையும் உதட்டில் ரத்த சிவப்பு நிற உதட்டுச் சாயமும் அவளுதட்டை அசைக்கும் போதெல்லாம் அதை தொட்டுச் செல்லும் அவளின் வெள்ளை கல் பதித்த புல்லாக்கும் மொத்தமாய் அவனை அவளிடம் சேர்த்திருந்தன..

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

 

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால்-அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.