(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - தாரிகை - 02 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : தூங்கா நகரம் மதுரை..

ரவு மணி பத்தை கடந்த போதும் அந்நகரம் விழித்தே கிடந்தது சுறுசுறுப்பாக..மதுரை மல்லியின் வாசம் ஒருபுறமும் இட்லி மீன் குழம்பின் வாசம் மறுபுறமும் மனதை மயக்கியது..

சென்னை டூ மதுரை பாயின்ட் டூ பாயின்ட் பஸ்ஸில் இருந்து இறங்கிய மொழிக்கு இவையெல்லாம் வியப்பை அளித்ததென்றால் சமுத்திராவிற்கு தாய் மடி சேர்ந்த உணர்வு..

மீன் குழம்பின் வாசம் மொழியை சுண்டி இழுக்க சமுத்திராவின் கையை சுரண்டியவள்,”சமூ..ரொம்ப பசிக்குது..”,என்றாள் தனது நாக்கை சப்புக்கொட்டியபடி..

அவளைப் பார்த்து சிரித்த சமுத்திரா,”பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் மொழி..அங்க டிபன் சூப்பரா இருக்கும்..சின்ன வயசுல எங்க அப்பா அந்தக் கடையிலிருந்து தான் வாங்கிட்டு வருவாங்க..”,என்றவள் மொழியின் கை பிடித்து அங்கு அழைத்துச் சென்றாள்..

ஒரு ஐந்து தள்ளு வண்டி கடைகள் வரிசைக்கட்டி நிற்க,”அந்த நாலாவது கடையில தான் டேஸ்ட் நல்லா இருக்கும்..பாருங்க மணி பதினொன்னு ஆகப்போவுது..இன்னும் கூட்டம் குறையாம இருக்கு..”,என்றவள் ஆட்கள் இல்லாத ஒரு பகுதியில் நின்ற படி,”அண்ணே..இரண்டு ப்ளேட்..”,என்று குரல் கொடுத்தாள்..

அவளது குரல் கடைக்காரரை எட்டியதோ இல்லையோ அவர்களது தோற்றம் சுற்றியிருந்த அனைவரையும் ஓரடி அவர்களிடமிருந்து தள்ளி நிற்க செய்து அனைவரையும் அமைதியாக்கியது..

“என்னடா இது..?? இவ்ளோ அமைதி ஆயிட்டாங்க..”,என்று மனதில் நினைத்த கடைக்காரர் இட்லியை தட்டில் எடுத்து வைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து மொழியையும் சமுத்திராவையும் பார்த்து விட்டு மனதில்,”ஐயோ..இன்னைக்கு நம்ம வியாபாரம் அவ்வளவு தான் போலவே..”,என பொலம்பினார் மனதில்..

அவரது பார்வை புரியாது உற்சாக குரலில்,”அண்ணே..இரண்டு ப்ளேட் கொடுங்க..”,என்றாள் சமூ..

“காசு இருக்கா..??”,என்று வெறுப்பாக கேட்ட கடைக்காரரிடம்,”காசில்லாமையா கடைக்கு வருவாங்க..??”, எதிர் கேள்வி கேட்டாள் மொழி..

அவளிடம் பதில் உரைக்காதவர் தட்டில் இட்லியை போட்டு மீன் கொழம்பு நிறைய ஊற்றி இருவரிடமும் அவசர அவசரமாக நீட்டி,”இந்தா அப்படி ஓரமா நின்னு சாப்பிட்டு போங்க..”,என்றார் ஒரு குப்பைத் தொட்டியன் மிக அருகே இருந்த ஒரு வெற்றிடத்தைக் சுட்டிக் காட்டி..

அவரில் செயலில் கோபமுற்ற மொழி இட்லியுடன் சேர்த்து குழம்பையும் அந்தக் கடைக்காரரின் தலையில் கொட்டிவிட்டு அந்த உணவுக்கான காசை அவரது முகத்தில் முகத்தில் விசிறி அடித்து திகைத்துப் போய் நின்றிருந்த சமுத்திராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்கத் துவங்கினாள்..

மொழியின் தொடிகையில் சுதாரித்த சமுத்திரா அந்த கடையை சுற்றியிருந்தவர்கள் தங்களையே பார்ப்பதைக் கண்டு,”ஏன் மொழி நம்மை எல்லாரும் இப்படி ஒரு மாதிரி கேவலமாவும் அருவருப்பாகவும் பார்க்கறாங்க..?? நம்ம அவ்ளோ கேவலமானவங்களா..??”,என்று கேட்டாள் கண்களில் நீருடன்..

அவளது கண்ணீரைக் கண்டு கடுப்படைந்த மொழி,”முதலில் இப்படி பொசுக்கு பொசுக்குக்குன்னு அழறத நிறுத்து சமூ.. இந்த அழுகை உன்னை ரொம்ப பலவீனப்படுத்தும்..”,என்று கடிந்தவள் சமுத்திராவின் கண்ணீர் இப்பொழுது கன்னங்களில் இறங்குவது கண்டு அவளைத் தோளோடு அணைத்து,”அவங்க கண்ணுக்கு நம்ம மனுஷங்களா தெரியல..வேறென்ன சொல்ல..”,என்றாள் சற்றே விரக்தியாக..

சில நிமிடங்கள் அங்கே பஸ்களின் சவுண்டும் மக்களின் சிரிப்பு சத்தமும் கூச்சலும் இருவருக்கும் நடுவில் ஆட்சி புரிந்தது..

“ரிலாக்ஸ் சமூ..மணி ஆகுது பாரு..உங்க அம்மாவும் அப்பாவும் தூங்கி இருக்க போறாங்க..சீக்கிரம் கிளம்பலாம்..”,என்றாள் மொழி..

“ஆமா மொழி..லேட் ஆகுது..ஒரு ஆட்டோல போயரலாம்..இங்கிருந்து பதினைந்து நிமிஷம் தான்..”,என்று உற்சாகமாக மொழியிடம் மொழிந்தவள் எதிரே எம்டியாக வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி அமர்ந்தாள் மொழியுடன்..

போகும் வழியெல்லாம் அந்ததந்த இடத்தைப் பற்றிக் கதை சொல்லிக் கொண்டு வந்த சமூ ஒரு பிள்ளையார் கோவில் வந்தவுடன்,”அண்ணே..இங்க தான் நிறுத்துங்க..”,என்று பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கிக்கொண்டாள் மொழியுடன்..

ஆழ் மூச்சொன்றை எடுத்து விட்டவள்,”இந்த கோவில்ல இருந்து விபூதியும் சந்தனமும் கலந்து வரும் மனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் மொழி.. இந்த மனம் நாசிக்குள் நுழைந்தாலே ஒரு மயக்கம் ஏற்படும்..”,என்றாள் லயித்து..

அவளது குழந்தைத் தனத்தை ரசித்த மொழி,”பொறுமையா நாளைக்கு வந்து அனுபவி இதையெல்லாம்..இப்போ வீட்டுக்கு போகலாம்.. ஆமா, உங்க வீடு எங்கடா இருக்கு சமுத்திரா..??”

“தோ..இந்த தெருவுல கடைசி வீடு..வாங்க போகலாம்..”,என்று துள்ளியபடி மொழியை இழுத்துக்கொண்டு சென்றாள் (ஓடினாள்)..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.