(Reading time: 17 - 33 minutes)

அவனுக்கு தனது ட்ரேட் மார்க் நக்கல் பார்வை ஒன்றை பரிசளித்தவள்,”எதுக்கு சார் கொடுத்தீங்க..??”,என்று கேட்டாள் மீதம் இருந்த ஜூஸை சப்புக்கொட்டியபடி..

அதில் கடுப்படைந்தவன்,”மூன்று பேரை இப்படி மிருகத்தனமா அடிச்சவங்களை கொண்டாடவா முடியும்..?? கம்ப்ளைன்ட் கொடுக்கத் தான் முடியும்..”,என்றான் அவனும் அவளுக்கு போட்டியாக..

“ஓ..எப்படி எப்படி..?? வீட்ல தனியா இருக்க பொண்ணுக்கிட்ட கலாட்டா பண்ண இவங்கள நான் அடிச்சதைப் பார்த்துட்டு உங்களுக்கு கோபம் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்க..?? அப்படித்தானே..??”

“ஒரு பெண்ணை கலாட்டா செய்தார்களா..??”,என்று மனதில் நினைத்தபடி முழித்தவனைக் கண்டவள்,”என்ன சார் சீனுக்குள்ள லாஸ்ட் என்டரி போல..??”, ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி..

“இதுக்கிட்ட எல்லாம் என்ன சார் நிதானமா பேசிட்டு இருக்கீங்க..?? ஜெயில்ல தூக்கிப் போடுங்க..”,அந்தக் காவலரையே எகிறியபடி சொன்னாள் இராட்சசியிடம் அடிவாங்கிய அப்பெண்மணி..

“ம்மா.. கொஞ்சம் சும்மா இரும்மா.. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல..??”,அப்பெண்ணை அடக்கிய காவலர் இராட்சசியிடம் திரும்பி,”இங்க பாரு.. நீ என்ன இருந்தாலும் அந்த மூன்று பேரையும் அடிச்சது தப்பு.. தோ அந்த பையன் உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்.. முரண்டு பிடிக்காம வந்து ஜீப்ல ஏறு..”,என்றார் சற்றே பொறுமையாக..

அவருக்கு அவரது கடமையை செய்தாக வேண்டுமே.. அதனால் பொறுமை காக்க முயன்றார்..

 “கம்ப்ளைன்ட்..”, என்று முணுமுணுத்த இதழ்கள்,”இப்போ என்ன என்னை அரெஸ்ட் பண்ணனும் அவ்ளோ தானே..”,என்றுவிட்டு நிஷாவிடம் திரும்பி,”இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் அம்மா வந்திருவாங்க..அதுவரைக்கும் ஜாக்கரதையா இரு..”,என்று விட்டு அமைதியாக ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்..

தீஸ்.. சூடா ஒரு கப் டீ வாங்கிட்டு வாய்யா..”,ஸ்டேஷனுக்குள் நுழையும் பொழுதே கட்டளையிட்டபடி நுழைந்தார் இராட்சசியை கைது செய்த காவலர்..

ஒரு டேபிளில் சாவகாசமாக அமர்ந்தவர் தன் முன்னே நின்றவளை ஏளனமாக மேலிருந்து கீழ் வரை எடை போட்டு விட்டு,“ஏய் உன் பேரென்ன..??”,என்று கேட்டார் அலட்சியமாக..

“செல்வி..”

“என்ன வேலை செய்யற..??”

“கலக்டெர் ஆபிஸ்ல..”,என்று ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்தவர்,”ஓ..அந்த குப்ப அள்ளிட்டு போற கூட்டமா நீ..??”,இப்பொழுது படு கேவலாமாக..

அவரிடம் பதில் ஏதும் சொல்லாமல் அவரை அழுத்தமாக பார்த்து வைத்தாள் அவள்..

“என்ன பாக்கற..?? போ போயி அப்படி உட்கார்..”,என்றார் கைதிகள் அமரும் இடத்தைக் காட்டி..

அவரிடம் வாதாடாமல் அவள் அந்த இருக்கையில் அமரப்போனாள்..

“ஏய்.. அந்த பெஞ்ச் மேல கீது உட்கார்ந்தராத.. அப்படியே ஓரமா உட்கார்ந்து தொலை.. நீ அங்க உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தால் எவனும் அங்க உட்காரமாட்டான்..”

அவர் அவளை அவ்வாறு கூறியபோதும் மறுப்பேதும் சொல்லாமல் அவர் குறிப்பிட்ட இடத்தில் சம்மணம் இட்டு அமர்ந்தாள்..

அவளது அமைதி சுனாமிக்கு முன் கடந்து போன அலைகளின் பேரமைதியோ..??

உருவெடுப்பாள்..

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.