(Reading time: 3 - 6 minutes)

தொடர்கதை - தாரிகை - 03 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : தூங்கா நகரம் மதுரை..

 

ஜிகிர்தண்டா கடையில் தனது மாமனின் கவனம் தன்னிடம் இல்லை என்பதறிந்த தரண் வெற்றியின் பார்வை சென்ற திசையை நோக்கி நோட்டமிட்டான்..

மொழியையும் சமுவையும் அங்கு எதிர்பாராத தரண்யன் அவர்களிடம் சென்றான்..

“அக்கா..”

தங்களது உலகத்தில் மூழ்கியிருந்த மொழிக்கும் சமுவிற்கும் தரண்யனின் மெல்லிய குரல் எட்டவில்லை..

“அக்கா.. உங்களைத் தான்..”, இப்பொழுது கொஞ்சம் சத்தமாக வெளிவந்தது..

நம்மளை யாரடா இவ்ளோ மரியாதை கூப்பிடறது என்று பார்த்த மொழி தரண்யனைக் கண்டு,“என்னப்பா வேண்டும்..??”,எனக் கேட்டாள்..

சமுவோ மிகுந்த பதற்றத்துடனும் பயத்துடனும் காணப்பட்டாள் இவன் நாவிலிருந்து அன்று புறப்பட்ட சொல்லம்புகளை நினைத்து..

“நான் இவங்க கிட்ட பேசணும்..”,என்றான் சமுவைக் காட்டி..

தன் பின்னே ஒளிந்த சமுவை ஒரு பார்வை பார்த்தபடி,”இவக்கிட்ட என்ன பேசணும்..??”,என்று கேட்டாள் மொழி..

“மன்னிப்பு கேட்க வேண்டும்..”,என்றான் கூனி குறுகியபடி..

“மன்னிப்பா..?? எதற்கு..??”

“அவங்களுக்குத் தெரியும்..”,என்றான் தலைகுனிந்தபடி..

அவன் மன்னிப்பு என்றவுடன் நிமிர்ந்து பார்த்த சமூ அவன் முகத்தில் என்ன கண்டாலோ,”அதெல்லாம் நான் மறந்துட்டேன்..”,என்றாள்..

“சாரி அக்கா.. என்ன இருந்தாலும் நான் உங்களை அப்படி பேசியிருக்கக் கூடாது..”,என்று அவளது முகத்தை நேராக பார்த்துச் சொன்னவன் விடுவிடுவென வெற்றியிடம் சென்று அவனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு இடத்தை காலி செய்தான்..

அவனது நடையைக் கண்டு சிரிப்பு மூண்டாலும் சமுவின் சீரியஸான முகத்தைக் கண்டு,“இது யாரு சமூ புதுசா..??”,எனக் கேட்டாள்..

“கல்கட்டா ட்ரைன்ல.. நான் சொன்னேன்ல அந்தப் பையன்..”, என்றாள் எங்கோ பார்த்தபடி..

“அவனைப் பார்த்தா உண்மையா மன்னிப்புக் கேட்ட மாதிரி இருக்கு..”

“எனக்கும் அப்படித் தான் தோனுது மொழி.. சின்னப் பையன்.. தெரியாமத் தானே பேசியிருப்பான்..”,என்றாள் புன்னகையுடன்..

“தட்ஸ் மை கேர்ள்..”,என்று சமுவின் தோள் தட்டினாள் மொழி..

புல்லெட்டில் தன் பின்னே அமர்ந்த தரண்யனின் அமைதியைக் கண்டு தன்னுள்ளே சிரித்துக்கொண்ட வெற்றி எதுவாக இருந்தாலும் அவனாகவே ஆரம்பிக்கட்டும் என காத்திருந்தான்..

வெற்றி எதிர்பார்த்தது போலவே சிறிது தூரம் சென்ற பிறகு,”மாமா..”,என்று தயக்கமாக அழைத்தான் தரண்யன்..

“சொல்லு தரண்..”

“நான் அவங்ககிட்ட சாரி கேட்டேன்..”

“நல்ல விஷயம் தானே..”

“நீ அதை பற்றி ஏன் எதுவும் கேட்கல..??”

“நீ பண்ணது தப்புன்னு உணர்ந்து அதற்கு மன்னிப்பும் கேட்டாச்சு.. இனி நீ இந்த மாதிரி பண்ணமாட்டீன்னு நம்பிக்கை எனக்கு வந்திருச்சு.. இதோட அந்த விஷயமும் முடிஞ்சு போச்சு..”,என்றான் சமாதானமாக..

“ஹ்ம்.. கண்டிப்பா  பண்ணமாட்டேன்..”,என்றான் உறுதியாக..

இந்த உறுதி தகருமா..?? பொறுத்திருப்போம்..

வணக்கம் நண்பர்களே..

இந்த சிறிய ud க்கு மன்னிச்சு.. நிறைய பக்கங்கள் கொடுக்க எனக்கும் ஆசை தான்..

உடல்நிலை இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பதால் வீட்டில் லேப் எடுக்க தடா விதித்திருக்கின்றனர்..

இந்த ஒரு ud யை  மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்..

நன்றி..

உருவெடுப்பாள்..

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.