(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 14 - ஸ்ரீ

en kadhalin kadhali

ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     

என் காதில் காதல் சொல்லுவானா     

ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     

தள்ளாடும் என்னைத் தாங்குவானா     

வா என்று கட்டளை இட்டானா     

முத்தத்தில் கைவிலங்கிட்டானா     

கைதாகினால் தேவ சேனா      (நானா)

தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்     

மெய் தீரனா     

எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா     

வாலில் முனையில் எங்கெங்கோ      

முத்தம் வைத்திடும் அரக்கனா     

வாயின் முனையில் மாயங்கள் காட்டவா     

காவி நா……ன்……     

ஏகாந்த காலம் மாற்றினானா     

ஓஹோ ஹோ ஹோ      

தீப்போல் என் மீது பற்றினானா     

தீக்கோலமாய் வேக சேனா      

நானா நானா நானா நானா நானா

வணக்கம் மக்களே,

என் காதலின் காதலி அடுத்த வார சனிக்கிழமையோடு முடிவடைகிறது.

சில்சீயில் ஒவ்வொரு எபிசோடிற்கும் வரும் உங்களின் கமெண்ட்ஸ் பாத்து ரொம்பவே நிறைவா பீல் பண்ணிருக்கேன்.

சோ அந்த நிறைவை முத்திரையாய் பதிக்க எண்ணி இக்கதையின்

புத்தகத்தில் ஒரு சிறு முயற்சியா இறுதிப் பக்கத்தில் உங்களில் ஒருவரின் ரிவ்யூவை ப்ரிண்ட் பண்ணலாம் என்று நினைத்திருக்கிறேன்.பதிப்பகத்தாரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே உங்கள் பார்வையில் ரகுநந்தன்-ஹரிணி யை பற்றி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒரு ரிவ்யூ கொடுங்க..

சிறந்த ரிவ்யூ புத்தகத்தின் பின் அட்டையில் அவர்களின் பெயரோடு பதிவிடப்படும்.

தங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18..

உங்கள் பதிவுகளை இங்கே கமண்ட்டாகவோ, chillzee forum https://www.chillzee.in/forum/5-books/1167-sri-s-en-kadhalin-kadhali-series-discussion லோ பகிருங்கள்.  

தங்கள் பதிவுகளுக்காக ஆர்வமாய் காத்திருக்கிறேன் ப்ரெண்ட்ஸ்.. :) :)

ழகான அதிகாலைப் பொழுது ரம்மியமாய் ஆரம்பிக்க அறையின் ஏசி குளிரும்  தன்னவனின் அணைப்பு தந்த கதகதப்பும் அவளை எழ விடாமல் தடுக்க விழிப்பு வந்தும் அப்படியே படுத்திருந்தாள்..சில நிமிடங்கள் அப்படியே கழிய,ரகு லேசாய் அசைந்து படுத்தவன் இன்னுமாய் தன்னவளை இறுக்கிக் கொள்ள,

“குட் மார்னிங் நந்தா..”

“குட்மார்னிங் ஹணி டியர்..லவ் யூ..”

“விடிஞ்சுருச்சு..”

“அதான குட்மார்னிங் சொன்ன??”

“நா போனும்..”

போ ஹணி..என கண் திறக்காமலே உதட்டில் மென்னகை அரும்ப அவன் கூற,

“இப்படி என்ன பிடிச்சு வச்சுகிட்டா நா எப்படி போறதாம்???”

அது உன் சாமர்த்தியம் ஹணி..என மேலும் அவளோடு இழைய,அப்படியா என்றவள் தன் மேல் இருந்த அவன் கையில் அழுத்தமாய் கிள்ள ஆவென அவன் கத்துவதற்குள் வாயை தன் விரல்களால் மூடியிருந்தாள்..அப்படியே எழுந்து நகர்ந்தவள்,

“எப்படி என் சாமர்த்தியம் என்றவாறே குளியலறைக்குள் சென்று ஒழிந்து கொண்டாள்..

குளித்து தயாராகி வந்தவள் உடலில் சுற்றியிருந்த புடவையை ஒழுங்காக கட்ட ஆரம்பிக்க மெதுவாய் எழுந்தவன் அவளை பின்னிருந்து இறுக்கினான்…

நந்தா என்னதிது ஏற்கனவே லேட் விடுங்க என வாய் வார்த்தையாய் கூறினாலும் அவனுக்கு வளைந்து கொடுத்தே நின்றாள்..

கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தவன், “ஹே ஹணி என்ன நீ நேத்தவிட இன்னும் ரெட்டா இருக்க என்ன விஷயம்????”

“ம்ம் பண்றதெல்லாம் பண்ணிட்டூ பேச்சை பாரு..விடுங்க நா கீழே போறேன்..”

“ம்ம் நா என்ன ஹணி பண்ணேன் என பாவமாய் மீண்டும் அவளிடம் கேட்க,

“அச்சோ அப்படியே பச்சை குழந்தைநு நினைப்பு விடுங்கப்பா அஞ்சலி பாவம் என்ன பண்ணிட்டு இருக்காளோ..”

அப்போ லஞ்சம் வேணும் என கன்னத்தை காட்ட,அதை மனதுள் வெகுவாய் ரசித்தவள் வெளியே மறைக்க முயன்று தன்னவனின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்பதித்து கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்..

கீழே வந்தவளை பார்த்த லஷ்மி அஞ்சலி இருவருக்குமே நிறைவாய் இருந்தது..

“குட் மார்னிங் அத்தை..”

குட் மார்னிங் டா..இந்தா காபி எடுத்துக்கோ நீ சாப்ட்டு அவனுக்கும் குடுத்துரு என கன்னம் தட்டி அவர் வெளியே நகர,

“என்ன ஹரிணி பயங்கர கவனிப்பு போலயே??”என்றவாறு கண்சிமிட்ட,

“ஏய் “ என்றவள் வெட்க சிரிப்போடு காபியை அருந்த,

“ஆனாலும் ஹரிணி உங்க மாமியார் நம்ம அத்தை மாதிரியே செம ஸ்வீட்..பெரிய இடமே எப்படி இருப்பாங்களோனு நினைச்சேன்..கொஞ்சமும் அந்த தலைகணமே இல்ல டீ..நிம்மதியா இருக்கு எனக்கு.”

“ம்ம் உண்மைதான் அஞ்சலி..எப்பவுமே அவங்க சத்தமா பேசி கூட கேக்கல நா..”

“சரி சரி போ காபியை குடுத்துட்டு ரெடி ஆய்ட்டு வா டிபன் முடிச்சுட்டு நாம வீட்டுக்கு கிளம்பணும்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.