(Reading time: 14 - 28 minutes)

ஐயோ அம்மா என்னா கனம் என போலியாய் முகத்தை சுளித்தவாறே அவன் எழ எத்தனிக்க மீண்டும் அவனை தள்ளியவள் தலையணையை எடுத்து சில பல அடிகளை வைத்தாள்..

லாவகமாய் அவள் கைப்பிடித்து தடுத்து தன் தோளில் வைத்தவன்,”ஹணி”

“ம்ம்ம்”

“சாரி”

“எதுக்கு நந்தா???”

“நானும் ட்ரை பண்றேன்டீ  ஏனோ அவர்ட்ட பேசவே வர மாட்டேங்குது..”

“ம்ம்”

“இதுக்கு என்ன அர்த்தம் ஹணி??”

“தெரில நந்தா..நீங்க ரெண்டு பேருமே இப்போ ஒரே நிலைமைல தான் இருக்கீங்க..அவரு பண்ண தப்பை அவரு உணர்ந்துட்டாரு..ஆனா அதை உங்ககிட்ட ஒத்துக்க மாட்டேங்குறாரு..உங்களுக்கு அவரு நிலைமை புரியுது ஆனா அதை நீங்களா அவர்கிட்ட சொல்ல தயங்குறீங்க..இதுல யாரையுமே தப்பு சொல்ல முடியாது நந்தா..விடுங்க எல்லா காயத்துக்கும் காலப்போக்கில் ஒரு மருந்து இருக்கும் கண்டிப்பா..சரி சரி வாங்க சாப்பிட போலாம்..” என கைப்பிடித்து கீழே அழைத்துச் சென்றாள்..

அன்றைய பொழுது அப்படி இப்படியாய் கிளம்ப இருவரையும் இரவு தங்கிவிட்டு போகுமாறு மதுரா கூற ரகு முடியவே முடியாது என மறுத்துவிட்டான்..அவன் மனம் அறிந்தவளும் ஒன்றும் கூறாமல் அவனோடு கிளம்பி விட்டாள்..

அடுத்த இரு தினங்களில் கண்ணன் தன் பிஸினஸ் வட்டாரத்திற்கான ரிசெப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார்..இருவரின் பெற்றோர் தவிர அனைவருமே தொழில் சம்மந்தட்டவர்கள் தான்.அன்று காலை தான் ஹரிணிக்கு நினைவே வந்தது ரகு ஏதோ உடை ஆர்டர் செய்வதாய் கூறியிருந்தது..

“நந்தா!!”

“சொல்லு ஹணி டியர் என்றவாறு தன் மடிக்கணிணியில் பார்வை பதித்திருந்தான்..

“ஈவ்னிங் ரிசெப்ஷனுக்கு என்ன ட்ரெஸ் எடுத்துருக்கீங்க???நா மறந்தே போய்ட்டேன்..”

“ இப்போவாவது கேக்கணும்னு தோணிச்சே..கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க ஹணி நீ”

“போதும் போதும் சொல்லுங்க ட்ரெஸ் எங்கயிருக்கு???”

“ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் ஹணி டியர்..”

“என்னது இனி தான் வருமா??என்ன விளையாடுறீங்களா???”

“அடடா ஈவ்னிங் நீ ஸ்டேஜ் ஏற்றதுக்கு முன்னாடி கிடைச்சா போதாதா..ரிலாக்ஸ் ஹணி..சரி இப்போ அத்தானை கொஞ்சம் கவனிச்சுட்டு போ பாக்கலாம்..”என கண்சிமிட்ட

“ ம்ம் அத்தை இதோ வந்துட்டேன்” என போலியாய் கத்திவிட்டு கீழே ஓடிவிட்டாள்..

மதியம் மூன்று மணியளவில் அனைவருமாய் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்திருக்க,ஹரிணி தனக்கான அறைக்குள் நுழைந்தாள்..உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த உடையை கண்டு ஒரு நொடி மயங்கிதான் போனாள்..வேகமாய் ரகுவின் அறைக்குச் சென்றவள் அவனை கண்கொள்ளா காதலோடு பார்க்க,

அவளை அங்கு எதிர்பார்த்தவன் அவள் காதல் பார்வையை எதிர்பார்க்கவில்லை போலும் ஆச்சரியமாய் அவளை பார்த்து நின்றிருந்தான்..சட்டென அவனருகில் சென்று இறுக கட்டிக் கொண்டவள்,

“நந்தா லவ் யூ சோ மச்..”

“என்னடி செம சர்ப்ரைஸ்லா தர்ற..இப்படினு தெரிஞ்சுருந்தா இந்த ட்ரெஸை நம்ம ப்ரஸ்ட் நைட்க்கு ஆர்டர் பண்ணிருப்பேன் என அவளை தன்னோடு இறுக்க,

“அடச்சே பேச்சை பாரு..இல்ல நந்தா எப்பவுமே எனக்கான ட்ரெஸ் நாதான் எடுத்துப்பேன்..ப்ர்ஸ்ட் டைம் எனக்காக பாத்து பாத்துடிசைன் பண்ணிருக்க ட்ரெஸை பாத்தவுடனே ரொம்ப ஸ்பெஷலா பீல் பண்றேன்..தேங்க் யூ சோ மைச்..

“எனிதிங் பார் யூ டீ பொண்டாட்டி..எப்போவோ ஒரு தடவை ஏதோ போட்டோல இந்த ட்ரெஸை பாத்த நியாபகம் அப்போவே டிசைட் பண்ணிட்டேன் நம்ம ரிசெப்ஷனுக்கு நீ இத தான் போட்டுக்கனும்னு.. சரி போய் ரெடி ஆகுற ஐடியா இருக்கா இல்ல இப்படியே வீட்டுக்கு போய்டலாமா என அவள் இடையை கிள்ள,துள்ளி நகர்ந்தவள்,

“தேங்க் யூ மை புருஷா” என அவன் கன்னத்தில் இதழ்பதித்துச் சென்றாள்..

அடுத்து வந்த இரண்டு மணி நேரமும் அலங்காரம் ஒப்பனை என குதிரை வேகத்தில் பறக்க ஹரிணி குடும்பத்தினர் உள்ளே நுழையவும் அவர்கள் இருவரும் வெளியே வரவும் சரியாய் இருந்தது..

கருப்பு நிற கோர்ட் சூட்டில் ரகு கம்பீரத்தின் இலக்கணமாய் இருக்க,அழகிய பேபி பிங்க் நிற வெட்டிங் ப்ராக்கில் கழுத்தை ஒட்டிய சின்ன சின்ன கற்கள் பதித்த நெக்லஸும் காதில் அதன் துணையாய் சிறிய கம்மலும் தலையை லேசாய் குவித்தவாறு கீழே விரித்துவிடப்பட்டிருக்க,சின்னதாய் ஒரு கீரீடம் அதில் அம்சமாய் வீற்றிருந்தது..

அவளை கண்ட லஷ்மி கன்னம் கிள்ளி தன்னோடு அணைத்துக் கொள்ள முகம் கொள்ளா பூரிப்போடு நின்றிருந்த மகளை பார்த்தவர்களுக்கு மனம் குளிர்ந்து போனது..அவர்களை அப்போதுதான் கவனித்தவள் வேகமாய் இரண்டடி எடுத்து வைக்க.அங்கிருந்த சேரில் அவள் ப்ராக் மாட்டி கீழே விழப் போனவளை சட்டென பிடித்து நிறுத்தியவன் அவள் காலடியில் அமர்ந்து சேரில் மாட்டியிருந்ததை எடுத்துவிட உதவினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.