(Reading time: 14 - 28 minutes)

“இப்போ போ மை ஏஞ்சல்”,என எழுந்து நின்றவனை கைகோர்த்து தன்னோடு அழைத்துச் சென்றாள்..

அனைத்தையும் பார்த்திருந்த கிருஷ்ணண் முதல் முறையாய் அவனிடம் வாய் திறந்தார்..

“எப்படி இருக்கீங்க மாப்ள??”

அனைவருமே ஆச்சரியம் தாளாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,”ஆங்..ம்ம் நல்லாயிருக்கேன்..வாங்க எல்லாரும் டிபன் சாப்டுங்க என பொதுவாய் கூறி அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்..

அடுத்து வந்த நான்கைந்து மணி நேரமும் கண்சிமிட்ட நேரமில்லாமல் கழிய அவர்கள் வீட்டை அடையும் போது நேரம்  நடுராத்திரியை தொட்டிருந்தது..அறைக்கு வந்தவள் அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்துவிட்டாள்..

“ஹணி ரொம்ப டயர்டா இருக்கா??”

“ஆமாப்பா..வாயெல்லாம் வலிக்குது எப்படிதான் எல்லாரும் கல்யாணத்துல இப்படி சிரிச்சுட்டே இருக்காங்களோ தெரில” என வாயை இடவலமாய் அசைத்து சரி செய்ய,

தன் டையை தளர்த்தியவாறே கட்டிலில் அமர்ந்து கால் நீட்டி அமர்ந்தவனின் முகமுமே வாடிதான் இருந்தது..அதை கவனித்தவள் மெதுவாய் எழுந்து அவனின் ஒரு காலில் வலிக்காதவாறு அமர கண் விழித்தவன் குறும்பாய்,

“இப்போ தான டயர்டா இருக்குநு சொன்ன அப்பறம் ஏண்டி என்ன சீண்டுற??”என்று சிரிக்க,

அழகாய் வெட்கத்தோடு தலை கவிழ்ந்தவள் அவன் நெற்றியை பற்றி அழுத்தமாய் இதழ்பதித்து இரு கைகளால் இதமாய் பிடித்து விட ஆரம்பித்தாள்..

இரு நிமிடங்களுக்கு ஒன்றும் கூறாமல் அமைதியாய் அதை அனுபவித்தவன் பின் மெதுவாய் அவள் கைப்பற்றி தன்முன் அமர வைத்தான்..

தேங்க்ஸ் ஹணி நவ் பெட்டர்..என்றவாறு அவள் தலையிலிருந்த கீரிடத்தை கழட்டி வைத்தான்..அவள் சிகை அலங்காரத்தை அவளுக்கு நோகாதவாறு கலைத்துவிட்டு கழுத்திலிருந்த நெக்லெஸையும் கழற்றி உதவினான்..மென்மையாய் அவள் தோள்களைப் பிடித்து விட்டு கழுத்து வளைவில் அழுத்தமாய் இதழ் பதித்தான்..

போ ஹணி ட்ரெஸ் மாத்திட்டு வா..என அவள் முதுகில் தட்ட ஒன்றும் கூறாமல் இதழோர புன்னகையோடு சென்று உடைமாற்றி வந்தாள்..

தன்னவனின் கையணைப்பில் படுத்திருந்தவள் அன்றைய நிகழ்வை பற்றி அவனோடு சில நிமிடம் உரையாட அப்படியே உறங்கியும் போனாள்…தன்னவளை பார்த்தவனுக்கு அவள் மீதான மரியாதை இன்னுமாய் அதிகரித்தது.நிச்சயம் அவள் தந்தையிடம் இன்று தான் ஒழுங்காக பேசாததது அவளுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும் இருந்தும் ஒரு வார்த்தை அதைப் பற்றி  கேட்காமல் இருக்க எப்படி இவளால் முடிகிறது என நினைக்கும் போதே அவன் அணைப்பு இறுக,தூக்கத்தில் இன்னுமாய் தன்னவனோடு ஒட்டிக் கொண்டாள்..

இருந்த களைப்பில் அவனும் அப்படியே உறங்கிவிட காலையில் இருவருமே  ஒரே சமயத்தில் விழிக்க அரைகுறையாய் கண்திறந்தவள் அவனைப் பார்த்துசிரித்தவாறே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

“குட் மார்னிங் நந்தா..”

“குட் மாமார்னிங் ஹணி..மத்தியானம் ப்ளைட் நியாபகம் இருக்குல??”

“ம்ம் எஎல்லாம் இருக்கு இருக்கு என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க,

“அதுக்காக தான் நேத்து உனக்கு ரெஸ்ட் குடுத்தது புரியுதா”என்று சிரித்தான்..

“ஐயோ போதும் காலைலேயே ஆரம்பிக்காதீங்க..நா போறேன்”என எழுந்தவளை விடாமல் தன்புறம் எழுந்தவன்,

“ஏன் ஹணி நீ இப்படியிருக்க??”

“எப்படி??” என புரியாமல் முழித்தவளை இன்னுமாய் ரசித்தவன்..

“ம்ம் பொழைக்க தெரியாதவளா.”

“ஏய்.”

“பின்ன நேத்து உங்கப்பாவே வந்து என்கிட்ட பேசியும் நா ஒழுங்கா பேசலையே..அதபத்தி கேக்கணும்னு தோணவேயில்லையா உனக்கு??”

“ம்ம் நீங்க தான் பொழைக்க தெரியாத புருஷனா இருக்கீங்க..நானே கேக்காத விஷயத்தை நீங்க ஏன் நியாபக படுத்துறீங்க???”என மென்னகைக்க,

“அப்படி இல்ல ஹணி நேத்து நைட் நீ இதப்பத்தி என்கிட்ட கேட்டுருந்தா கண்டிப்பா நா இன்னைக்கு முதல் வேலையா உங்கப்பாவ தேடிதான் போய்ருப்பேன்..”

“ம்ம் அது எனக்கு தேவையில்லையே நந்தா..உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ நீங்களே பேச போறீங்க..இந்த புருஷனை முந்தானைல முடியுற வேலையெல்லாம் எனக்கு வேணாம்..ஆல்ரெடி நீங்க என் முந்தானையை பிடிச்சு தான் சுத்துறீங்க,என்று சிரித்தவள்

சற்று இடைவெளிக்குப் பின்,”இருந்தாலும் அதை என் காதலுக்கு கிடைச்ச மரியாதையா தான் எடுத்துக்கணுமே ஒழிய அதை யூஸ் பண்ணி எனக்கு தேவையானதை நடத்திக்க பாக்க கூடாது..அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது..என அவன் கன்னத்தை தட்டி எழுந்தவளை விடாமல் இழுத்து இதழோடு இதழ் பதித்திருந்தான்..

அய்யே என்னதிது பல்கூட தேய்க்காம விடுங்க என எழுந்தவள் தலையணையை அவன் மேல் வீசியெறிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

ஹாய் ப்ரெண்ட்ஸ் எபி எப்படியிருந்தது.அடுத்த எபியோட கதை முடியுது மக்களே..நிறை குறைகளை கண்டிப்பா சொல்லுங்க..அதை வீட முக்கயமா நம்ம Annie sharon sis க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க பாக்கலாம்.  

Wish you a very happy birthday Annie sis.stay blessed with good helath and wealth..have a excellent year ahead smilesmile 

 

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.