(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ

en kadhalin kadhali

அம்மாடி உன் அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்

புயல் காத்துல பொறி ஆகுறேன்

 

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்

ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு

உன்ன கண்டா போதும் திருநாளு

ரெக்க கட்டி பறந்த ஆளு

பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை

சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை

பூக்குர என தாக்குற

கரின் மைய பகுதியில் அமைந்திருந்த அந்த மண்டபமே மலர்களாலும் வண்ண வண்ண விளக்குகளாலும் மிளிர்ந்து கொண்டிருந்து..நேரம் மாலை ஆறு மணியை தொட்டிருக்க ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தனர்.உள்ளே ரகு தயாராகி முதல் தளத்திற்கு போட்டோ ஷீட்டிற்காக சென்றான்..

அழகிய கருப்பு நிற ஷெர்வானி குர்தாவும் சந்தன நிற பேண்டும் அதற்கேற்ற பனாரஸி ஷாலுமாய் நின்றவன் ராஜ பரம்பரை என்பது போன்ற கம்பீரத்தோடு காட்சிளித்தான்…அவனின் தனி ஸ்டில்ஸை முடித்தவுடன் ஹரிணியை அழைத்து வர சொல்ல வெகுவாய் ஆர்வம் மின்னும் பார்வையோடு படிகளிலேயே கண்களை பதித்திருந்தான்..

பத்து நிமிடங்களில் வந்தவளை பார்த்தவனுக்கு கர்வம் தலைக்கேறியது அவள் என்னவள் என..அழகிய ரத்தநிற டிசைனர் புடவை முழுவதும் வெள்ளை கற்களால் ஜொலிக்க அதற்கேற்றாற் போல அதிக வேலைப்பாடோடு கூடிய ப்ளவுஸ் அணிந்திருந்தாள்..வடகத்திய முறைப்படி வலதுபுறமாய் சேலையணிந்து பெரிது பெரிதான ஹெவி வொர்க்கோடு கூடிய நகைகள்அவள் அழகுக்கு பாந்தமாய் இருக்க அழகிய அவளின் நீண்ட கூந்தலை முன் தலையில் மட்டும் அலங்காரம் செய்து இடைவரை விரித்து விடப்பட்டிருந்தது..எதுவென்றே தெரியாமல் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு அவளை தேவலோக ரதியாகவே காட்டியது..

அவள் அருகில் வரும் வரை கூட பொறுக்கமாட்டாதவன் படியருகிலேயேசென்று கை நீட்ட புடவையின் கனத்தால் மறுக்காமல் அவன் விழி நோக்கி தன் கைக் கோர்த்தாள்..அஞ்சலி நமட்டு சிரிப்போடு அவர்களை தொடர எதையும் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை..

“ஹணி..என் அழகான ராட்சசி டீ நீ..”

தலை உயர்த்தி அவனை கண்டவள் அவன் விழி கூறும் மொழி புரிந்து இதழோர சிரிப்போடு தலை தாழ்த்திக் கொண்டாள்…

ஹணி எதாவது பேசு இன்னுமாய் குரல் குழைந்திருந்தது அவனிடத்தில்..

“நந்தா எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க..”

“ஐ டோண்ட் கேர்..லவ் யூ மேட்லி மை ஹணி..”, பற்றியிருந்த அவன் கரம் இன்னுமாய் பிடியை இறுக்கியது..

லவ் யூ டூ நந்தா மெதுவாய் அவள் பதிலுரைக்க கள்ளச் சிரிப்போடு ஏதோ கூற வந்தவனை போட்டோகிராபரின் பேச்சு நடப்பிற்கு அழைத்து வந்தது..போட்டோ ஷீட் முடியும் வரையுமே தன் இடப்புறத்தில் நின்றவளின் இடையோடு மென்மையாய் அணைத்தவாறே நின்றிருந்தான்..உக்கார்ந்து நின்று என எத்தனை போட்டோ எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் தயங்காமல் அவள் புடவையை கீழே குனிந்து சரி செய்துவிட்டான்.அவளுக்குத்தான் கூச்சமாய் இருந்ததே ஒழிய அவன் எதையும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..

ஏழு மணியளவில் மணமக்களை மேடைக்கு அழைக்க அவள் கைக் கோர்த்தவாறே கீழே இறங்கினான்..அவள் ஒவ்வொரு படியாய் மெதுவாய் இறங்க சிறிதும் தயக்கமின்றி அவளோடு பொறுமையாய் இறங்கினான்..மேடையை அடைந்ததுதான் தாமதம் என்பதாய் அனைவரும் மணமக்களை தங்கள் மொபைலில் புகைப்படமெடுக்க இடைகோர்த்து இன்முகமாய் நிற்பவனை பார்த்தவளுக்கு சந்தோஷம் தலைக்கேறியது..

இருவரின் பெற்றோருமே பிள்ளைகளின் திருமண களையில் மனம் நிறைந்துதான் போனார்கள்..கூட்டம் நிரம்பி வழிய ஒவ்வொருவரிடமும் வாயில் கிளிப் போட்டவாறு புன்னகை மாறாமல் பரிசுகளை வாங்கி வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து டயர்டாகிவிட ஹரிணிக்கோ கால் இரண்டும் மறத்தே போனது..

“எதாவது வேணுமா ஹணி..”

“இல்லப்பா கால் வலிக்குது..”

“ரிலாக்ஸ்டா..கொஞ்சமா தண்ணியாவது சாப்டு”, என அவன் அன்னையை அழைக்க அவர் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க மறுக்கத் தோன்றாமல் வாங்கி சாப்பீட்டு முடித்தாள்..

“உங்களுக்கு நந்தா??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.