(Reading time: 14 - 27 minutes)

“இல்லடா வேண்டாம் அப்பறம் பாத்துக்குறேன்..நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ பேபி நாளைக்கு சேர்த்துவச்சு காலைப் பிடீச்சு விடுறேன் “,என பிறரறியாமல் கண்சிமிட்டி சிரிக்க முகச்சிவப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள்..

மேடையை விட்டு அவர்கள் இறங்கும்போது இரவு மணி 11 ஐ கடந்திருக்க நேராய் சாப்பிட அனுப்பி வைக்கப்பட்டனர்..அத்தனை களைப்பிலும் அவளுக்கு பார்த்து பார்த்து உணவு பரிமாற வைத்தான்..

“நந்தா நீங்க பர்ஸ்ட் சாப்டுங்க ரொம்பவே டயர்டா தெரியுறீங்க..”

“ம்ம் நீ பக்கத்துல இப்படி இருக்கும்போது சாப்பிடதோணல ஹணி..பேசாம நாம வீட்டுக்கு போய்டலாமா??”

“நந்தா..”

“பீல் லைக் கிஸ்ஸிங் யூ டீ பொண்டாட்டி..”

ஹரிணிக்கோ முகம் செவ்வானமாய் மாறியது…அதில் இன்னுமாய் தன்னை தொலைத்தவன் தன் இடப்புறம் அமர்ந்திருந்தவளை முகம் மொத்தமாய் திருப்பி பார்க்க அவள் வலப்புறமாய் புடவை கட்டியிருந்ததால்  சேலை மடிப்பின் நடுவில் லேசாய் அவளின் மெல்லிடை தெரிய ஒரு நொடி மயங்கித்தான் போனான்..அதற்குமேல் அவனால் சாதாரணமாக இருக்க முடியுமென தோன்றாமல் போக சட்டென இலையை மூடி எழுந்துவிட்டான்..

பதட்டமாய் அவனை ஏறிட்டவள் எழப்போக தன் தவறு புரிந்து மெதுவாய் அமர்ந்தவன்,

“இல்ல ஒண்ணுமில்ல ஹணி நீ சாப்டு எனக்கு போதும்..”

“ஏன் நந்தா என்னாச்சு???ஆர்யூ ஓ.கே???”

“ஹணி ஹணி..உண்மைய சொல்லணும்னா ஐ அம் நாட் ஓ.கே..இப்படி பக்கத்துல உக்காந்து அவஸ்தயா இருக்கு டீ..ப்ளீஸ் என்ன விட்றேன்..அப்பறம் உனக்குதான் கஷ்டம்”, என அவள்புறமாய் தலைசாய்த்து காதருகில் கூற அடுத்தநொடி இலையை மூடி அவளும் எழுந்துவிட்டாள்..

“ஹணி..”

“இல்லப்பா போலாம் போதும்..”

“சாரி டீ..”

“ப்ச்ச் எதுக்கு இப்போ சாரி சொல்றீங்க..வாங்க போலாம்..”

“நீ சாப்டலயே சரியா??”

ம்ம் நீங்க பேசுறதே வயிறு நிறைஞ்சுடுச்சு என்றவள் முகத்தை அவனிடமிருந்து திருப்பி கை அலம்ப செல்ல. கண்கள் சிரிப்பில் மின்ன அவளை பின் தொடர்ந்தான்..

அதன்பின் அவரவர் அறைக்குச் செல்ல இருந்த களைப்பில் உறங்கியும் போனார்கள்..ஹரிணி ஆழ்ந்த உறக்கத்தில் எங்கோ தூரத்தில் தன் தாயின் குரல் கேட்பதாய் தோன்ற லேசாய் அசைந்து படுத்தாள்..

“அடடா இந்த பொண்ணு என்ன இப்படி தூங்குறா எழுந்துரு ஹரிணி டைம் ஆச்சு உனக்கு தான் கல்யாணம் நியாபகம் இருக்கா???”

“ம்மா..அதுகுள்ள விடிஞ்சுருச்சா என மணியை பார்த்தவள் மொத்த தூக்கமும் போய் தெளிந்தமர்ந்தாள்..ம்மா..3 மணி தானம்மா ஆகுது..”

“அத்தை நீங்க போங்க நா பாத்துக்குறேன் என்றவாறு உள் நுழைந்த அஞ்சலி,இப்போ குளிச்சு கொஞ்சம் தலையை காய வச்சாதான் சரியா இருக்கும் ஹரிணி போ குளிச்சுட்டு வா..”

“ம்ம் இன்னும் 5 மினிட்ஸ்..ப்ளீஸ்..”

அவளை பார்த்தவள் சட்டென சிரித்துவிட,ஏன் அஞ்சலி சிரிக்குற???

“இல்ல அண்ணா என்னடானா உன்னை இப்போவே தூக்கிட்டு போக ரெடியா இருக்காங்க நீ என்னடானா கொஞ்சமும் கவல இல்லாம தூங்கிட்டு இருக்க..அண்ணா அப்போவே எழுந்தாச்சு நீதான் லேட்”, என மீண்டும் சிரிக்க,

அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அவளிடமிருந்து டவலையும் தன் உடையையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்..

நேரம் அதன் கடமையை சரியாய் செய்ய முகூர்த்த நேரமும் வந்தது..அழகாய் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் ரகு மேடையில் அமர்ந்திருக்க, மணமேடை ஏறியவளின் மீது அனைவரின் கவனமும் திரும்ப ரகுவும் அங்கு தன் கண்களை பதித்தான்..

அவன் தேர்வு செய்த அந்த பச்சையில் பிங்க் வண்ண பட்டுப்புடவை கல் வேலைப்பாடுகளோடு அழகாய் அவள் உடலை தழுவியிருக்க தலை முதல் இடைவரை முத்துக்களால் ஆன நகைகள் இன்னுமாய் பாந்தமாய் இருந்தன..கழுத்தை தழுவும் மாலையோடு அடிமேல் அடி வைத்து குனிந்த தலையை நிமிரால் அவனருகில் அமர்ந்தவளை அவன் ஓரப்பார்வை பார்க்க அதை உணர்ந்துவிட்டாள் என்பதை அவளின் கன்னச் சிவப்பு அவனுக்கு உணர்த்தியது..

மென்னகையோடு மந்திரங்களை அவன் மீண்டும் கூறத் தொடங்க அடுத்த சில நிமிடங்களில் கெட்டிமேளச் சத்தம் முழங்க அட்சதைகள் அவர்கள் தலை தொட ரகு ஹரிணியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்..

நெற்றி வகிட்டில் அவன் குங்குமம் வைக்க மெதுவாய் அவனை ஏறிட்டவளின் கண்களில் வழிந்த காதலில் கரைந்துதான் போனான்..அதன்பின் அக்னி வலம் வந்து அம்மி மிதித்து அவன் கையில் மெட்டியை கொடுக்க அவள் காலை நகர்த்துவதற்குள் தன் கைகளில் ஏந்தியவன் அதை அம்மியின் மீது வைத்து மெட்டியை அணிவித்தான்..அவன் விழிகளுக்குள் அவள் கலந்திட அவனோ தன்னவளின் உரிமைப் பார்வையில் திக்கு முக்காடிப் போனான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.