(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 05 - ஆர்த்தி N

maraveno ninnai

திகாலை கதிரவன் தனது செங்கதிர்களை பூமியில் பரவ செய்து அனைத்து உயிரினங்களுக்கும் தங்களது வாழ்வில் ஒர் புதிய அத்தியாயத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்கிட  வழி செய்து கொடுக்கிறான்.. வாழ்க்கை என்றும் ஒன்றுப் போல இருப்பதில்லை.. மகிழ்ச்சி துக்கம் இரண்டுமே நிரந்தரமில்லை என நினைப்பவன் மட்டுமே ஒவ்வொரு விடியலையும் ஆழ்ந்து அனுபவித்து மேலும் மேலும் அவனது புதிய தேடலுக்கான விடையை எதிர் நோக்குவான்..

சங்கீ அத்தை சமையலறையை அமளி துமளி செய்துக் கொண்டிருந்தார்.. கூடவே ஷைலுவும்.. பின்ன.. நேற்று இரவு ரிந்து அப்படிப் பட்ட செய்தி அல்லவா சொல்லியிருக்கிறாள்.. அவர்கள் இல்லத்திற்கே ஓர் ஒளி வந்ததுப் போல் இருந்தது.. ஐவரும் இரவு வெளியில் ஷைலுவின் ப்ளேன் படி டின்னர் முடித்துவிட்டு படம் பார்க்க சென்றனர்.. சிறிய படம் ஆதலால் சீக்கிரமே முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் பன்னிரண்டு மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் முன்ன.. “அத்தாஆஅன்ன்ன் ஸ்டாப் த கார்.. அப்படியே டிக்கி ஓபன் பண்ணுங்க” என கத்த.. எல்லாரும் என்னமோ ஏதோவென பயந்துப் போக..

“ஹே எல்லாரும் கீழே இறங்குங்க.. சீக்கிரம்.” என ஷைலு மற்றும் ரித்து அவசரப் படுத்த..

நால்வரும் திரு திரு வென முழித்துக் கொண்டே இறங்கினர்.. சங்கீ அத்தை மட்டும்..”ஷைலு நட்ட நடு ராத்திரில இது என்ன விளையாட்டு..” என அவளை முறைக்க..

“அத்த ப்ளீஸ் ஜஸ்ட் ஒரு 5 மினிட்ஸ்.. செல்ல அத்த’ல கோச்சுக்காதீங்க..” என செல்லம் கொஞ்சி அவரை சரிகட்ட..

கடைசியாக இறங்கிய ஷைலு மற்றும் ரித்து கார் டிக்கியில் இருந்து எடுத்த கேக்குடன் “இனியப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்காஆஆ” என அந்த இரவில் ஆழ் அரவமற்ற மரங்கள் மட்டுமே சூழ்ந்திருந்த அச்சாலையில் கத்திக் கொண்டே ஒர் அழகிய கேக்குடன் முன் வர..

அனைவரின் முகத்திலும் ஏகப்பட்ட சிரிப்பு.. ரிந்து தனது பிறந்த நாளையே மறந்திருந்தாள்.. தன் தங்கையின் பாசத்தை எண்ணி அவளுக்கு லேசாக கண்கள் கலங்கியது.. இருந்தும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்..

சூர்யாவிற்கு ஷைலு தனது மனைவியின் பிறந்த தினத்திற்கு தான் ஏதோ அடிப் போடுகிறாள் என்று ஓர் எண்ணம் இருந்தது..

சேகர் சங்கீத்தாவின் எண்ணம் இதுவே இவர்கள் இருவரும் என்றும் எக்குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென..

“அக்கா வாங்க கேக் கட் பண்ணுங்க.. அத்தான் நீங்களும் கூட நில்லுங்க.” என இருவரையும் இழுக்க.. மற்றவர் கை தட்ட இருவரும் சேர்ந்தே வெட்டினர்.. ரித்து அனைத்தையும் புகைபடமாக எடுத்துத் தள்ள..ஒருவருக்கொருவர் கேக் துண்டுகளை ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.. அப்பொழுது ரிந்து லேசாக தடுமாறி விழப் போக.. சரியாக சூர்யா அவளை தாங்கிப் பிடித்துவிட்டான் தான்.. இருந்தும் அனைவரும் பதறி விட்டனர்..

“ரிந்து என்னமா ஆச்சு.. ஷைலு கார் ல இருக்கற தண்ணி பாட்டில் எடுத்துட்டு வா..” என சூர்யா உறைக்க..

வேகமாக வந்து தனது அக்காவை தண்ணீர் அருந்தச் செய்தாள்..

சங்கீ அத்தைக்கும் சந்தேகமாக இருந்தது காலையிலிருந்து அவள் சோர்வாக இருக்கு என கூறிக் கொண்டேயிருந்த்தால்.. ஆதலால் பொதுவாக ரிந்துவிற்கு புரியும் படி..

“ஏன் ரிந்து அப்படியா?” என கண்கள் மின்ன கேட்க.. ரிந்துவின் கண்ணங்கள் சிவந்தன.. அதுவே சங்கீ அத்தைக்கு ஊர்ஜிதப்படுத்தியது..

“என் தங்கம் டி மா.. எவளோ நல்ல செய்தி சொல்லியிருக்க..” என அவளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொள்ள.. சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை..

“ஹாஹா என்ன எல்லோரும் முழிக்கறீங்க நம்ம வீட்டுக்கு ஒரு புது ஆள் என்ட்ரி தரப் போறாங்க..” எனக் கூறியது தான் தாமதம்..

சூர்யா அது ரோடு எனக் கூட பார்க்காமல்..”யாஹூ.. ஐயம் சோ ஹேப்பி..” என ரிந்துவை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

“அத்தான் போதும் இது ரோடு.. வீட்டுக்கு போய் பாத்துக்கலாம் வாங்க..” என முகம் கொள்ளா சிரிப்புடன் அவள் சொல்லியப் படி ரிந்துவை அ..

“சோ வாட் டா அருந்த வாலு..” என அவளின் தலையை தட்ட..

அனைவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.. சூர்யாவின் மகிழ்ச்கிக்கு அளவே இல்லை.. அவன் இவ்வளவு ஆன்ந்தமாக இதற்கு முன் இருந்ததே இல்லை.. தம்பதி இருவருக்கும் தனிமை தந்து அனைவரும் தங்களின் அறைக்கு சென்றனர்.. ரித்துவும் ஷைலுவுடனே தங்கிக் கொண்டாள்..

அங்கு சமையலறையில் ஷைலு அவள் தான் சமைப்பேன் என அக்கப் போர் பண்ணிக்கொண்டிருந்தாள்..

“ஷைலு அலும்பு பண்ணாதடி.. போய் அக்கா கூட இரு.. ரிந்து மாமனார் மாமியார் வறாங்க ஏதாச்சு சொதப்பி வெச்சுராத.. நான் பார்த்துக்கறேன்” என அவளை விரட்டாத குறையாய் வெளியேத் தள்ள..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.