(Reading time: 7 - 13 minutes)

அங்கு ஹாலில் அமர்ந்து சேகரிடம் பேசிக் கொண்டிருந்த வாலிபனைப் பார்த்து முறைத்துக் கொண்டே ரித்துவிடம் சென்றாள்.. அவள் அங்கு வெளியே அலங்காரத்திற்கு வைக்கப் பட்டிருந்த பூக்களை மாற்றிக் கொண்டிருந்தாள்..

“ரித்து இவன் எதுக்கு டி இங்க வந்திருக்கான்.. நேத்து அவன பார்த்து எவளோ சந்தோஷப் பட்டேன்.. எல்லாத்தையும் கெடுத்துட்டான்.. பாவி..” என பொறிந்துத் தள்ள..

ரித்துவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..”ஹாஹா அந்த குரங்கு கிட்ட என்ன சொல்லப்போற..” என சிரித்துக் கொண்டேக் கேட்க..

ஷைலு வெறியாகி அவளை அடி பிண்ணி எடுத்துவிட்டாள்..

“ஹே வானரம்ஸ் என்ன இப்படி அடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க..” என இருவரையும் அவ்வாலிபன் பிரித்து விட..

“ஹப்பா நீயாச்சு என்ன காப்பாத்துனியே.. நீ வாழ்க வளமுடன் என் உயிர் நண்பா..” என ரித்து மறுபடியும் சிரிக்க..

ஷைலு இருவரையும் முறைத்துவிட்டு ரிந்துவிடம் சென்றுவிட்டாள்..

அவ்வாலிபன் ஷைலு சென்ற திசையையேப் பார்த்துக் கொண்டிருக்க..

அவன் தலையில் ஓர் கொட்டு வைத்து “என்ன டா ஃபீலிங்க்ஸா.. இத சொல்லுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்..”

“ஹேய் ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன் நேத்து.. என்ன ஆனாலும் ஷீ இஸ் மை க்லோஸ் ஃப்ரண்ட்.”என சிரித்தான்..

ஹர்ஷா.. கடந்த இரு வருடங்களாக லண்டனில் பணிப் புரிந்து வருகிறான்.. ஷைலு மற்றும் ரித்துவின் சிறு வயது முதல் உயிர் தோழன்.. நேற்று தான் அவன் தாயகம் திரும்பி இருந்தான்.. இத்தனை வருடங்கள் தோனாது இந்த இரண்டு வருடங்களில் அவன் மனது ஷைலுவை மிகவும் தேடியது.. ஆதலால் அது காதல் தான் என நினைத்துக் கொண்டு ரித்துவிடம் கேட்டுக் கொண்டு அவர்கள் சென்றிருந்த உணவகத்திற்கு அவனும் சென்றான்..

ஷைலுவிற்கு அவனை கண்டதில் அவ்வளவு ஆனந்தம்.. அதை நொடியில் உடைத்துவிட்டான்.. கிளம்பும் போது அவளிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று அவன் மனதிலிருப்பதை சொன்னான்.. கூடவே அவளுக்கென அவன் வாங்கியிருந்த ஓர் அழகிய மோதிரம்.. ஷைலுவிற்கு உச்சக்கட்ட அதிர்ச்சி.. இதை அவள் துளிக் கூட எதிர்பார்க்கவில்லை.. அவள் அவனிடம் தெளிவாக சொல்லிவிட்டாள் அவன் அவளுக்கு வெறும் நண்பனாக மட்டும் தான் இருக்க முடியும் என..

அவளது பதில் அவன் எதிர்பார்த்ததுதான் ஆதலால் அவன் கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டான்.. என்ன ஆனாலும் அவன் அவளது நட்பை இழக்க தயாராக இல்லை.. அதனால் இனி இதுப் பற்றி அவளிடம் பேசக் கூடாதென முடிவெடுத்தான்..

ஓர் பெரு மூச்சுடன் ரித்துப் பக்கம் திரும்பி.. “வீட்ல அம்மா அப்பா எப்படி இருக்காங்க.. ஈவ்னிங்க் அவங்கள பார்க்க வரேன் டா.. இப்போ கிளம்பனும்.. சொல்லிட்டு கிளம்பறேன்.. வா” என உள்ளே சென்றான்..

“அக்கா அத்தான் கங்கிராட்ஸ்.. ஹேப்பி ஃபார் யு போத்.. ஹெல்த் பார்த்துக்கோங்க்க்கா.. நான் அப்புறமா வரேன். அங்கிள் ஆன்ட்டி பை.. ஷைலு பை டா” என அனைவரிடமும் விடைப் பெற்று கிளம்பினான்.. அவன் என்ன தான் திடமாக காட்டினாலும் அவனுக்கு ஷைலுவின் முகம் திருப்புதல் லேசாக வலிக்க தான் செய்தது.. அதான் சீக்கிரம் கிளம்பிவிட்டான்..

“சூர்யா நீங்க ரிந்துவ கூப்டிட்டு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திருங்க.. நான் உங்க வீட்ல வரதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணி வெக்கறேன்..”என சங்கீ அத்தை உள்ளே செல்ல.. ரித்துவும் பிறகு வருவதாக கிளம்பிவிட்டாள்..

சூர்யா தான்..”ஷைலு நீயும் எங்க கூட வா.. அக்காக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் டா..” என கூற.. மூவரும் கிளம்பினர் ஆனந்தத்துடன்!!!!..

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1161}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.