(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 06 - ஆர்த்தி N

maraveno ninnai

க்ருஷின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்..”அங்கிள் உண்மையாவா சொல்றீங்க.. அப்புக்கு நினைவு வந்துருச்சா..? எப்படி அங்கிள்!?!?..நான் போய் முதல்ல அம்மாவ கூப்பிடிட்டு வறேன்..” என உற்சாகமாக அலைப்பேசியில் பேசி வைத்தான்..

பின்னே இருக்காதா எங்கே தனது சகோதரனை இழந்து விடுவானோ என்று அவன் பட்ட துன்பம் அவனுக்கல்லவா தெரியும்.. கூடவே அவன் அன்னை அடைந்த வேதனையும்.. இரண்டு வருடங்கள் அவனும் அவன் அன்னையும் அப்பு இல்லாமல் தனிமையில் இருந்தது.. கூடவே அவனது நிலையும்..

அனைத்தும் ஓர் முடிவுக்கு வந்துவிடும் என அவன் மனம் மிகவும் சந்தோஷத்தில் திளைத்தது..

அன்று அலுவலகத்தில் போர்ட் மீட்டிங் என்பதால் நேரமாக வந்திருந்தான்.. உடனே அனைத்து மீட்டிங்கும் கேன்ஸல் செய்துவிட்டு தனது காரில் வேகமாக வீடு நோக்கி சென்றான்..இல்லை இல்லை பறந்தான்..

சாரதாம்மா ஹாலில் அமர்ந்து ஸ்லோக புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.. அவருக்கு மன அமைதி கிட்டுவது இதனால் தான்.. ஏனோ கடவுளிடம் சரணடைவதுப் போல ஓர் உணர்வு அவருக்கு.. காலையில் இருந்து அவரது உள்ளுணர்வு ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டே இருந்தது.. அது என்னவென்று ஆராயாமல் நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு காலம் அவரை தள்ளியிருந்தது..

வாசலில் வேகமாக க்ருஷின் கார் சடன் ப்ரேக்கின் சத்தத்துடன் நிற்கவும் என்னவோ ஏதோவோ என்று வெளியில் வேகமாக சென்று பார்த்தார்.. காரிலிருந்து வேகமாக இறங்கியவனிடம்

“டேய் ஏன்டா இவளோ வேகமா வர? உன்ன வேகமா போக கூடாதுனு சொல்லியிருக்கேன்ல..” என அவர் முறைக்கவும்..

“அம்ம்மாஆஆஆஆஅ…..” என அவர் பேசக் கூட விடாமல் அவரை கட்டிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான்..

“க்ருஷ் விடு டா.. என்ன ஆச்சு இப்படி இருக்க?.. தலை சுத்துதுக் கண்ணா..” என அவர் அலற..

“அம்மா.. நம்ம அப்புக்கு நினைவு வந்துருச்சு மா.. திரும்பி நம்ம கிட்ட வரப் போறான் மா பழைய மாதிரி.. பழைய அப்புவா..” என அவர் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு கண்கள் மின்ன அவன் உறைக்க..

குரல் தடுமாற, கண்கள் குளம் கட்ட..”நிஜம்மா வா கண்ணா சொல்லற..”என உணர்ச்சி பெருக்குடன் கேட்டுவிட்டு.. க்ருஷையும் இழுத்துக் கொண்டு பூஜை அறையில் கண்மூடி கடவுளுக்கு நன்றி உறைத்தார்..

அவர் கண்கள் மூடியிருந்தாலும் அவர் கண்களின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.. அது தன் மகன் முழுதாக திரும்ப கிடைத்துவிட்டான் என்ற நிம்மதியில் வந்த ஆன்ந்தக் கண்ணீர்.

“அம்மா வாங்க நம்ம உடனே ஹாஸ்பிட்டல் போகனும்.. அங்கிள் கிட்ட சொல்லியிருக்கேன்” என இருவரும் வேகமாக கிளம்பினர்..

சூர்யா அந்த பிரபல  மருத்துவமனையில் தனது காரை நிறுத்திவிட்டு..”நீங்க இறங்கி முன்னாடி போங்க.. நான் போய் கார் பார்க் பண்ணிட்டு வரேன்..” என அவர்கள் இறங்க வசதியாக நிறுத்தினான்..

ரிந்து கொஞ்சம் டென்ஷனாக இருக்க.. ஷைலு அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு..”அக்கா ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.. பாசிட்டிவ் ரிசல்ட் தான் வரும்.. இப்போ எங்க சிரி பாக்கலாம்..” என ரிந்துவின் வாயை இவள் பிடித்து இழுக்க..

“ஏய் வாலு அதெல்லாம் ஒன்னும் இல்லை..அக்கா நல்லா தான் இருக்கேன்..” என ரிந்து கூறவும் இவர்கள் காண வேண்டிய டாக்டரின் அறை வரவும் சரியாக இருந்தது.. இருவரும் சூர்யா வருவதற்காக வெளியே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து காத்திருந்தனர்..

சூர்யா வரவும் இவர்களை அங்குள்ள நர்ஸ் அழைத்தார்.. மூவரும் உள்ளே செல்ல.. அந்த லேடி டாக்டரிடம் காலையில் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்ததால் ரிந்துவை அழைத்துச் சென்று தனியாக பரிசோதித்தார்.. பின்பு சில டெஸ்ட் எழுதி தந்து எடுக்க சொல்லிவிட்டு முடிவுக்காக ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னார்..

இவர்கள் உள்ளே சென்ற நேரம் க்ருஷ் மற்றும் சாரதாம்மா வேகமாக வந்தனர்.. ஆம் அங்கு தான் அப்புவும் அனுமதிக்கப்பட்டுள்ளான்.. சாரதாம்மாவின் நெஞ்சு படபடப்பு எகிறிக் கொண்டே இருந்தது.. முழுதாக இரண்டு வருடங்கள் கழித்து தனது மகனை காணப் போகிறார்.. இந்த இரண்டு வருடங்கள் அவர் நாடியது கடவுளை மட்டும் தான்.. அவருக்கு எப்போதும் துருதுருவென இருக்கும் மகனை இந்நிலையில் காண சக்தியில்லை..

அது ஓர் விதத்தில் சுயநலமாக கூட அவருக்கு தோன்றியதுண்டு.. அப்போதெல்லாம் அவர் மனம் படும்பாடிற்கு அளவில்லை.. இருப்பினும் தன் மகன் திரும்ப கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கையிலையே காலத்தை தள்ளினார்..அவரது காத்திருப்புக்கு முடிவும் இதோ வந்துவிட்டது..

வேகமாக அப்பு இருந்த அறை நோக்கி செல்லும் போது வெளியவே சைத்தன்யா இவர்களுக்காக காத்திருந்தாள்.. அவள் இங்கு தான் ப்ராக்டீஸ் செய்துக் கொண்டிருந்தாள்..

“க்ருஷ் வா டா.. உனக்கு தான் காத்திட்டு இருந்தோம்..” என்றவளின் பேச்சு பாதியில் நின்றது சாரதாம்மாவை கண்டு.. சைத்தன்யாவிற்கு அவர் மேல் கொஞ்சம் வருத்தம்.. அவளுக்கு பயம் எங்கு மனம் புண்படும்படி பேசிவிடுவோமோ என.. ஆதலால் அமைதியாகிவிட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.