(Reading time: 7 - 13 minutes)

“சைத்து.. அப்பு முழிச்சு இருக்கானா? எப்படி அவனுக்கு நியாபகம் வந்துச்சு.. இப்போ உள்ளே போய் நாங்க பாக்கலாமா?”

“குட்டா கொஞ்சம் பொறுமையா கேளு டா.. அவன் நல்லா இருக்கான்.. இப்போ தூங்கிட்டு இருக்கான்.. ஆனா இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்’ல இருக்கட்டும்.. நீங்க தாராளமா போய் பார்க்கலாம்” என சைத்துவிடம் இவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டே வந்தார்.. அம்மருத்துவமனை தலைமை மருத்துவரான ராஜ்குமார்.. இவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல என்றும் கூறலாம்..

“சாரதா.. எப்படி இருக்க மா.. ?”என்று வாஞ்சையாக கேட்டார்..

“நான் இருக்கேன் அண்ணா..”என்றவரின் கண்களின் தவிப்பை கண்டுக் கொண்டவர்..

“நீ உள்ளே போய் பாரு மா.. க்ருஷ் கூட்டிட்டு போ.. நான் சைத்து அப்புறம் வரோம்..” என்று அவர்களுக்கு தனிமை தந்து விலகிப் போனார்..

அந்த கண்ணாடி தடுப்பை சத்தம் செய்யாமல் மெதுவாக திறந்தவன் அன்னை முதலில் செல்ல காத்திருந்தான். சாரதாம்மா கால்கள் பிண்ண உள்ளே நுழைந்தார்.. ஏனோ பயமாக இருந்தது அவருக்கு.. என்றும் இல்லாமல் இச்சமயத்தில் அவருக்கு அவர் கணவரின் தேவை மிக அதிகமாக தேவைப்பட்டது..

அங்கு அப்பு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.. அவன் அருகில் சென்றவர் அவன் முகத்தை தன் நடுங்கும் கரங்களால் தடவ அவரது கண்களின் கண்ணீரோ நின்றபாடில்லை..

எப்படி இருந்த பையன்.. ஓர் நிமிடம் அவருக்கு அவரின் பழைய அப்பு கண்முன் தோன்றி மறைந்தான்..

அவனின் மிடுக்கான புன்னகையாலே எவரையும் கவர்ந்திழுக்க கூடியவன்.. அவனுக்கு நிகர் அவனே.. எவரிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என நன்கு தெரிந்தவன்.. அதனால் தான் அவனது சிறிய வயதில் கூட அவனால் சாதிக்க முடிந்ததோ என்னவோ..

இப்போது அவன் இப்படி ஓய்ந்துப் போய் இருந்தது.. அன்னையாய் அவரின் நெஞ்சை உருக்கியது.. ஆனால் தான் அவனை காணாமல் இருந்தது தவறோ என்று இப்போது அவருக்கு நிரம்ப உறுத்தியது..

க்ருஷிற்கு அவனது அன்னை மீது வருத்தம் இருந்தாலும் அவரது வேதனையை நேரில் கண்டதால் அதுவும் அவரது ப்ரார்த்தனையால் தான் அப்பு நல்ல படியாக திரும்ப கிடைத்தான் என்பதை திடமாக நம்பினான்.. ஆதலால் அவனின் வருத்தம் கூட பின்னடைந்தது..

இனி அவனை எப்பொழுது வீட்டிற்கு அழைத்து செல்லலாம் மேலும் அவனது உடல் நிலையை தெளிவாக அங்கிளிடம் கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டு, தன் அன்னை அப்புவோடு இருக்கட்டும் என அவர்கள் இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வெளியே வந்தவன் ஓர் பெண்ணின் மேல் மோதிக் கொண்டான்..

யாரு டா இது என்று நிமிர்ந்தவன் அவளை பார்த்தால் ‘இந்த பொண்ணு அன்னைக்கு மால்’ல பார்த்தோமே.. இவ ஏன் எப்போ பாரு முழிச்சுட்டே இருக்கா’ என யோசித்தவன்.. நிற்காமல் ராஜ் குமாரின் அறை நோக்கி சென்றான்.. கடைசியாக ஏதோ உந்த அவளை திரும்பிப் பார்த்தவன் கண்களில் நீர் வழிய அந்த ஐஸியு வாசலில் நின்று கொண்டிருந்தவளின் பிம்பமே அவன் கண்களுக்கு தென்பட்டது.. அவன் மனம் ஏதோ உள்ளது.. இந்த பெண் யார் என்று அறிய வேண்டும் என வேகமாக கணக்கிட்டது.!!!

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1161}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.