(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 04 - ஆர்த்தி N

maraveno ninnai

வாகன நெரிசலை சமாளித்து ரித்து மற்றும் ஷைலு எவ்வாறோ வீடு வந்து சேர்ந்தனர். வரும் வழி யாவும் ஷைலு அமைதியாகவே வரவும் ரித்துவிற்கு பொறுக்கவில்லை..

“ஷைலு என்னடி ஆச்சு.. நான் தான் நீ கிழ விழுக வெச்சதுக்கு கோச்சுக்கலையே அப்புறம் ஏன் சோகமா இருக்க???” என அவள் நிலைமை தெரியாமல் கடுப்பேற்ற..

“ஐய்ய நீ கோச்சுக்கிட்டாலும் நான் லா கண்டுக்கமாட்டேன்.. அதான் உனக்கு லஞ்சமா ஐஸ்க்ரீம் வாங்கி தந்தேன் ல.. சோ சரியாப் போச்சு..” என சிறுப் பிள்ளைப் போல சொல்ல..

“எனக்கு தேவை தான்.. ஒரு ஐஸ்க்ரீம்’கு ஆசைப் பட்டு என் மானத்தை நானே வாங்கிட்டேன்..”என ரித்து பொலம்ப.. “நீ என்ன சொன்னாலும் போகும் போது இருந்த சந்தோஷம் இப்போ உங்கிட்ட மிஸ்ஸிங்க் ஷைலு” என மற்றவளை ஆராய்ந்தாள்..

ஆம் அவளுக்கு மாலில் க்ருஷைப் பார்த்து குழப்பமாக இருந்தது.. அவளால் உறுதியாக கூற முடியவில்லை.. அதுவும் அவனது ஒட்டாத பார்வை மேலும் குழப்பியது.. ஒருவேளை அது வேற யாரோவாக இருந்தால்.. இருந்தாலும் அவளது ஆழ்மனம் அடித்துக் கூறியது அது அவளவன் இல்லை என.. சீக்கிரமே இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என எண்ணினாள்..

“என்ன மேடம் பதிலையே கானோம்..” என ரித்து அவள் முன் சொடக்கிட..

“போடி அதெல்லாம் ஒன்னும் இல்லை.. வெயில்ல சுத்துனது டைய்ர்டா இருக்கு.. அது விடு.. நாளைக்கு அக்கா பெர்த்டே வேற.. அவளுக்கு நியாபகம் இருக்கற மாதிரிக் கூட தெரியல.. மாமாவும் இன்னைக்கு வருவாங்கனு அக்கா சொன்னா.. நைட் வெளிய போவோம் அப்போ நீயும் வந்துரு.. ஆன்ட்டி கிட்ட நா பேசிக்கறேன்…” என பேச்சை மாற்றினாள்..

இருவரும் பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைய..சேகர் மாலை நேரம் தேனீர் அருந்த காத்துக்கொண்டிருந்தார்.

“எவ்வளவு நேரம் சங்கீ வெய்ட் பண்ணறது.. சீக்கிரம் வா..”என சமையலறை நோக்கி சத்தமிட..

“மாமா கொஞ்சம் பொறுமை அவசியம்.. பாவம் எங்க அத்தை எப்படி தான் உங்கள சமாளிக்கறாங்களோ..” என கூறிக் கொண்டே ஷைலு அவர் அருகில் அமர.. ரித்து அவர்கள் எதிரில் அமர்ந்துக் கொண்டே.. “உன்னை சமாளிக்கிறது தான் கஷ்டம் டி.. அங்கிள் பாவம் பச்சை மண்ணு..” என அவர் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைக்க.. சேகர் குளிர்ந்து தான் போனார்..

ரித்துவின் காதைப் பிடித்து திருகிக்கொண்டே.”ஏன்டிமா உன் கிட்ட இருந்து தான் இந்த சேம் சைட் கோல் போட கத்துக்கனும்.. உங்களால பொறுமையா இருக்க முடியாதா.. ஷைலு நீ ஆல்வேஸ் கரக்ட் டா..” என ஒரே சமயத்தில் அனைவருக்கும் பதில் தர.. மூவரும் பக்கென சிரித்துவிட்டனர்..

“சங்கீ டார்லிங்க் நீ அல்டிமேட் பீஸ் டா.. எப்படி இப்படி இருக்கியோ.. மூச்சு வாங்கிக்கோ” என தன் மனைவியை கிண்டலடிக்க அவருக்கு பூரிக் கட்டையில் அடி நிச்சயம் என தன் முறைப்பால் தெரிவித்தார் அவரது தரம் பத்தினி.

“ஹாஹா அங்கிள் ஹை ஃபை தாங்க.. நானும் அதே தான் நெனச்சேன்..” என ரித்து சேகருடன் சேர்ந்துக்கொள்ள.. இவள் மாமவை அடி வாங்க வைக்காமல் கிளம்ப மாட்டாள் என புரிய..

“ஹே என்ன ரெண்டுப் பேருமா சேர்ந்துட்டு எங்க அத்தைய ஓட்டறீங்க.. எங்க அத்தை மல்டிடாஸ்கிங்க்.. அத பார்த்து உங்களுக்கு பொறாமை..” என அவள் தன் அத்தையை குளிர்விக்க..

“டேய் ஷைலு மா அத்தை கிட்ட ஏதாச்சு சொல்லனுமா.. இல்ல என்ன கலாட்டா பண்ண முதல் ஆளா நீ தான் வருவ. அதான் கேட்டேன்.. “ என கூற..

“உங்களுக்கு சப்போர்ட் பண்ணேன்’ல எனக்கு தேவ தான்.. சரி மொக்க போடாதிங்க எல்லாரும்.. அக்கா எங்க கானோம்..?” என கிழ விழுந்தாலும் தலையில்( ஹிஹி அவளுக்கு நோ மீசை ல.. அதான்) மண் ஒட்டாத ரேஞ்சிற்கு பேசலானாள்..

“அசிங்கப் பட்டா ஒடனே பேச்ச மாத்திருவியே..” என அத்தைக் கூறவும்.. அவளின் முறைப்பை பார்த்து.. “சரி சரி.. அவளுக்கு கொஞ்சம் முடியல.. மேல படுத்திருக்கா.. போய் பாரு..” என கூறினார்..

“என்ன ஆச்சு.. காலை’ல நல்லா தான இருந்தா.. நான் போய் பாக்கறேன்.. ரித்து அம்மா கிட்ட சொல்லிட்டு இங்க வந்துரு..” என சொல்லிட்டு மேலே விரைந்தாள்..

மாடி தனது அறையை நோக்கி சென்றவள்..”அக்கா அக்கா..என்ன ஆச்சு உனக்கு..?” என கட்டிலில் சோர்ந்துப் போய் படுத்து இருந்தவளின் அருகே அமர்ந்து கேட்டாள்..

தங்கை வரும் அரவம் கேட்ட உடனேயே தன் கண்களையை துடைத்தவள்..

“தலை வலி ஆ இருந்துச்சு டா.. அதான் வந்து படுத்துட்டேன்..” என அவள் முகம் பார்க்காமல் பதில் உறைத்தாள் ரிந்து..

“எங்க என்னை பார்த்து சொல்லு..” என வலுக்கட்டாயமாக அவள் முகம் பார்க்க.. கண்கள் சிவப்பாக இருந்தது.. “அச்சோ அக்கா என்ன ஆச்சு.. ஏன் அழுத.. யாரு என்ன சொன்னாங்க..?”

“இல்ல டா மா.. யாரும் அதுவும் சொல்ல’ல.. எனக்கு தான் அம்மா நியாபகம் வந்துருச்சு.”என சொல்ல அவளது கண்கள் நிறைந்தது..

“நான் ஒரு லூசு.. நீ வரலை சொன்ன உடனே தனியா விட்டுட்டு போயிருக்க்க் கூடாது.. சரி இங்க வா..” என தன் தமக்கையை தாயாய் தன் மடி தாங்கினாள்.. அவளது முடி கோதிவிட்டு உறங்க செய்தாள்.. ரிந்துவிற்கு அவள் கன்சீவாக இருக்கிறாளோ’வென சந்தேகமாக இருந்தது.. அதான் அவளது மனம் தனது அன்னையை மிகவும் நாடியது.. உறுதிப் படுத்தாமல் வெளியே சொல்ல வேண்டாமென சொல்லாமல் தவிர்த்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.