(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 09 - ஸ்ரீ

en kadhalin kadhali

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

சொன்னால் பொய் பொய்தானே

பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை

சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே

இந்த கனவுக்குள் பிழை இல்லையே

பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உணர்வுக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள

யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல ?

திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் இல்ல

போராட காலம் இல்லையே

எங்கையே போ நான் தொலைந்தேனோ தெரியாதே

இப்போ அங்கே நீ நான் போக முடியாதே

தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

மாலை வேலை முடிந்து கீழே வந்தவள் பேசியிருந்தபடியே ரகுவிற்காக பார்க்கிங்கில் வெயிட் செய்ய ஐந்து நிமிடத்தில் வந்தவன் பைக்கை எடுத்து அவள்முன் வந்து நின்றான்..

நந்தா பைக்கா???

“ம்ம் ஆமா ஹணி அதனாலதான் இன்னைக்கு உன்னை ட்ராப் பண்ற ப்ளான்க்கு வந்ததே”, என கண்ணடிக்க,கோபமாய் பார்க்க நினைத்து தோற்றவள் அவன் பின்தலையில் லேசாய் தட்டியவாறு ஏறி அமர்ந்தாள்..பேரூந்து நிறுத்ததில் அவளை இறக்கியவன் நின்று பேசிக் கொண்டிருக்க ஹரிணி என்றழைத்த கோபக்குரலில் இருவருமே திரும்பி பார்க்க,ஹரிணிக்கு மூச்சே நின்றுவிட்டிருந்தது..ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தது அவளின் அப்பாவே தான்..அவரை பார்த்து பைக்கை விட்டு கீழேயிறங்கியவன் என்ன பேசுவதென தெரியாமல் நிற்க தன் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கியவர்,

“என்ன இதெல்லாம் யாரு இவன்??”

எடுத்த எடுப்பிலேயே பேச்சு ஒருமையில் போக ஹரிணிக்கு கண்ணே கலங்கி விட்டிருந்தது..

அங்கிள் என் பேரு ரகு..நா….”என முடிப்பதற்குள் கிருஷ்ணணின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது..நடந்ததை உணர்ந்தவள் அப்பா வென அலறிவிட்டிருந்தாள்..

அடி வாங்கியவனின் கண்களோ அன்றிருந்த அதே பார்வை கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்துவது ஹரிணிக்கு நன்றாகவே புரிந்தது..

“ஒரு பொண்ணு ரோட்ல போய்ட கூடாதே எப்போடா வசதிநு வந்துர வேண்டியது..பாத்தா டீசெண்டா இருந்தா மட்டும் பத்தாது நடந்துக்குறதுலயும் அதே நாகரீகம் இருக்கணும்.போ போ இன்னொரு தடவை என் பொண்ணு பின்னாடி உன்னை பாத்தேன் என்ன நடக்கும்நு தெரியாது..நீ வா”, என அவளை தரதரவென இழுத்துச் சென்றார்..இரு ஆண்களுக்கும் நடுவில் செய்வதறியாது தவித்தவள் அவரிழுத்த வேகத்தில் அவரோடு சென்றாள்..

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி உள்ளே ஓடியவள் அன்னையை தேடிச் சென்று கதறினாள்..தேம்பி தேம்பி விஷயத்தை அவள் கூறி முடிக்க அவள் அன்னை கோபமாய் தன் கணவனை தேடி ஹாலுக்குச் சென்றார்..

“ஏங்க..ஏன் நீங்க இப்படியிருக்கீங்க??அப்படி என்ன கோபம் உங்களுக்கு???”

“ஏன்டி பொண்ணோட முன்ன பின்ன தெரியாதவன் நின்னு பேசிட்டு இருக்கான் கோபபடாம அவனை கட்டிதழுவி கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்றியா???”

“முன்னபின்ன தெரியாதுநு ஹரிணி சொன்னாளா???”

“என்ன சொல்ற மதுரா??”, என்றவரின் கோபம் மனைவியிடம் திரும்ப,

“ஆமா ஹரிணிக்கு அந்த பையனை தெரியும் ரெண்டு பேரும் விரும்புறாங்க..ஹர்ஷாக்கும் எனக்கும் தெரியும்..”

“ஓ நல்லது அப்போ என்னத்துக்கு குடும்பதலைவன் நா இருக்கனும் நீங்களே குடும்பத்தை ரொம்ப நல்லா நடத்துவீங்க..உன் புள்ளயும் பெரிய மனுஷன் ஆய்ட்டான் இனி நா தேவையில்ல உங்க யாருக்கும் அப்படிதான???”

“அப்படிநு இங்க யாரும் சொல்லல நீங்க சொல்லலனாலும் நம்ம புள்ளைங்க பெரியவங்களா ஆனத இல்லனு சொல்ல முடியாதுதான??ஹர்ஷாவுக்கும் கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்தாச்சு இன்னும் அவன் உங்க பேச்சை கேட்டே சுத்தனும்னு சொல்றீங்களா????சரி இப்போ எதுக்கு இந்த பேச்சு..எதுக்கு அந்த பையன் மேலை கை வச்சீங்க???”

“ம்ம் யாரோநு நினைச்சுதான் அடிச்சதோட விட்டேன் லவ் கிவ்நு நீ சொல்றதெல்லாம் தெரிஞ்சுருந்தா அங்கேயே வெட்டி பொதச்சுருப்பேன்..”

“ம்ம் ரொம்ப நல்லாயிருக்குங்க..பேரன் பேத்தி எடுக்குற வயசுல பேச வேண்டிய பேச்சா இது???நீங்க பண்ணின காரியத்தால நாளைக்கு இவ வாழ்க்கை என்னாகும்னு கவல இருக்கா கொஞ்சமாவது???”

“ஓ அவனுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுப்பேன்னு வேற நினைச்சியா???அதுக்கு ஒரு முழம் கயித்த வாங்கி தொங்கிடலாம்.”

“வேண்டாம்ப்பா அதுக்கு பதிலா என்ன கொன்னுடுங்க நிம்மதியா சந்தோஷமா போய்டுவேன்”, என அவள் மீண்டும்அழ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.