(Reading time: 14 - 28 minutes)

“அதெல்லாம் வேண்டாம் ஹர்ஷா அஞ்சலி பாவம் இங்க வந்து அவ மைண்டையும் ஸ்பாயில் பண்ணாத..நீ வர்றப்போ வா போதும்..”

“ம்ம் ரகுகிட்ட பேசினியா???”

“பேசினேன் நேத்து நைட் அவருக்கும் கோபம் இருக்கும்ல அண்ணா..ரோட்ல அத்தனை பேர் முன்னாடி..”

“சரி விடு ஹரிணிம்மா..நா அவர்ட்ட பேசிட்டு உனக்கு கூப்டுறேன்..”

அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவன் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்க அழைப்பு வரவில்லை..பத்தாவது நிமிடம் ரகுவே வந்தான்..

“ஹாய் ஹணி..ஏன் இங்கேயே உக்காந்துட்ட??”,அவன் குரலில் எந்த வித்யாசமும் இருக்கவில்லை ஆனால் அவள் மனம் அறிந்திருந்தது அவனின் வித்யாசத்தை..

“இல்ல நந்தா சும்மா தான்..”,கூறியவளின் முகம் அழுதழுது வீங்கி கண்கள் சிவந்து பார்த்தவனுக்கு மனம் இளகிவிட்டது..

“சரி எதுவும் சாப்டுறியா???”

வேண்டாம் என்பதாய் அவள் அவனிடமிருந்து விழியெடுக்காமல் தலையசைக்க,

“காலைல என்ன சாப்ட்ட??”

“அது..ஒண்ணும் சாப்டல..”தலை குனிந்தவளின் கண்ணில் நீர் துளிர்க்க,

“நேத்தே நா உன்னை அழாதநு சொன்னேன் ஹணி..”

பிறர் அறியாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்..

“நைட்டும் சாப்டாம இப்பவும் இப்படி பட்டினியா ஏன்டீ இப்டி பண்ற..என்ன பாக்குற ஹர்ஷா தான் சொன்னாரு..வெயிட் பண்ணு “,என எழுந்து சென்றவன் அவளுக்காக டிபன் வாங்கி வர மறுக்காமல் சாப்பிட்டாள்..

“ஆன்ட்டி எப்படியிருக்காங்க??அப்பறமா போன் பண்ணி பேசு பாவம் உன்னை நினைச்சு சாப்டாம இருக்க போறாங்க..”

“ம்ம் சரிப்பா..”

“ஹணி லவ்னா இப்படி ப்ரச்சனைங்க வரத்தான் செய்யும் அடுத்து என்ன பண்றதுநு யோசி அதவிட்டுட்டு இதையே யோசிச்சுட்டு இருக்காத..சரியா???”

“ம்ம்ம்”

“சரி நா சீட்டுக்கு போறேன்..நீயும் போய் வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ணு ஓ.கே யா அவ்டர்நூன் பாக்கலாம்..பை ஹணி”, என்றவன் எழுந்து சென்றுவிட்டான்..அவனை சமாதானப்படுத்தும் வழிதெரியாது பெண்ணவள் தவித்தாள்..இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் ஹர்ஷா ஊரிலிருந்து வந்துவிட மறுபடியும் ஒரு களேபரம் ஆரம்பமானது..

தந்தை வழக்கம்போல் அவர்போக்கில் கத்த ஹர்ஷா பொறுமையாய் அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்..இருந்தும் எந்த பலனும் இருப்பதாய் தெரியவில்லை..

“அப்பா இப்போ என்னதான் பண்ணணும்னு சொல்றீங்க???”

“உடனே ஹரிணிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணணும்னு சொல்றேன்..என் ப்ரெண்டோட பையனுக்கு கேட்டான் நா தான் நாளாகட்டும்னு சொல்லிருந்தேன்..இப்போ சம்மதம்னு சொல்ல போறேன்..”

“அப்பா??!!!”

“நீ அமைதியா இரு ஹரிணிம்மா..சரிப்பா நீங்க சொல்றமாதிரியே பண்ணலாம்..ஆனா நாளைக்கு கல்யாணத்துக்கு அப்பறம் இவ காதலை பத்தி அந்த பையனுக்கு தெரிய வந்தா இவ வாழ்க்கை என்னாகும்நு யோசிச்சீங்களா???”

“கேளு நல்லா கேளு ஹர்ஷா..அப்படி என்ன பிடிவாதமோ தெரில..உங்க ஆத்திரத்துல அவ வாழ்க்கைய அழச்சுறாதீங்க..”

“அப்பா ப்ளீஸ் இது அவ வாழ்க்கை மனசுக்கு பிடிக்காம பண்ணி வைக்குற கல்யாணத்துல அவளும் சந்தோஷமா இருக்க போறதில்ல நாமளும் நிம்மதியா இருக்க போறதில்ல..அப்பறம் எதுக்குப்பா கல்யாணம் ஊர் வாய அடைக்குறதுக்கா..ஒருநாள் வந்து போறவங்களுக்காக உங்க பொண்ணு வாழ்க்கையை விட போறீங்களாப்பா..”

ஒன்றும் கூறவில்லை அவர்..யாரையும் பார்க்க தோன்றாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டார்..ஒரு வாரத்தில் பாதியாய் இளைத்திருந்த தங்கையை பார்த்தவனுக்கு பாவமாய் இருந்தது..

“ஹரிணிம்மா நானும் அம்மாவும் இருக்கோம் அப்பாவும் உன்னை கஷ்டபடுத்த நினைக்க மாட்டாரு கவலபடாத சரியா??”

ம்ம் ரொம்ப தேங்க்ஸ்ணா என்றவள் தமையனிடம் சாய்ந்துகொள்ள அந்நிமிடம் தந்தையுமாய் மாறிப்போனான் ஹர்ஷா..

தனதறைக்கு வந்தவள் மொபைல் சத்தத்தில் அதையெடுத்து அட்டெண்ட் செய்ய,

“ஹணி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே??ஆபீஸுக்கும் வரல போனும் எடுக்கல ரொம்ப பயந்துட்டேன் டீ..”

“நந்தா அதெல்லாம் ஒண்ணுமில்ல ஹர்ஷா ஊர்ல இருந்து வந்துட்டான்ல அதான்..”

“ஹணி உன் குரலே சரியில்ல என்னாச்சு??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.