(Reading time: 14 - 28 minutes)

“அது..மறுபடியும் வீட்ல ப்ரச்சனை நந்தா அப்பா என்னென்னவோ சொல்றாரு..ஹர்ஷா தான் பேசிருக்கான்..அதான் ஆபீஸ்க்கு வரல..”

“ம்ம் சாரி ஹணி என்னால தான் உனக்கு இவ்ளோ ப்ராப்ளம்..”

“ஏன் அப்படி சொல்றீங்க நந்தா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..நானும்தான் உங்கள…உங்களவிட்டா எனக்கு லைவ் இல்லப்பா..”

“ஹணி லவ் யூ சோ மச்..”

“நந்தா நா உங்கள பாக்கனும் எங்கேயாவது மீட் பண்ணலாமா??”

“ஹணி!!!!!”

“ப்ளீஸ்ப்பா..ஒரு பத்து நிமிஷம்னாலும் போதும்..”

“ஹே உனக்காக தான் இந்த லைவ்வே சரி நீ கிளம்பி பீச் வந்துடு நானும் வந்துட்றேன்டா..”

“ம்ம் சரி வச்சுட்றேன்..”

தாயிடம் வெளியே செல்வதாய் கூறிவிட்டு கிளம்பி வந்தவள் பீச்சில் அவனுக்காய் காத்திருக்க அன்றைய வானிலையும் அவள் மனதை குளுமை படுத்துவதற்காக இதமாய் இருந்தது..அவள் சென்று அமர்ந்த பத்து நிமிடத்தில் ரகு வந்துவிட,

“சாரி ஹணி லேட் ஆய்டுச்சா???”

“இல்லை இப்போதான் வந்தேன் நந்தா.”

“ஹணி பத்து நாள்ல நீ எப்படி மெலிஞ்சுட்ட..ஏன்டீ உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற???”

அதற்குமேல் தாங்க மாட்டாதவளாய் அவன் தோள் சாய்ந்து கதற ஆரம்பித்திருந்தாள்..

“நந்தா அப்பா கல்யாணம் அது இதுநு சொல்றாரு அப்படி எதாவது நடந்தா நா உயிரோடேயே இருக்க மாட்டேன்..”

“ஏ லூசு அடி வாங்க போற அப்படி உன்னை விட்டுருவேனா???என் பொண்டாட்டி டீ நீ..”

“இல்ல நந்தா அப்பா மத்தவங்க பேச்சை கேப்பாருநு தோணல..”

“ம்ம் உங்கப்பா எப்போ தான் அடுத்தவன பத்தி யோசிச்சுருக்காரு..”

லேசாய் கண்ணைத் துடைத்தவாறே நகர்ந்து அமர்ந்தவள் அமைதி காக்க..அவனும் ஒன்றும் பேசவில்லை..

“நந்தா..அப்பாவ நீங்க ஒதுக்கிடாதீங்க..அவரு..”

“ஹணி ஒண்ணு மட்டும் மனசுல வச்சுக்கோ..நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அது உங்கப்பா சம்மதத்தோடேயோ இல்லையோ எனக்கு தெரியாது.உன்னோட அப்பா, உன்னை பெத்தவருங்கிற மரியாதை என்கிட்டயிருந்து எப்பவும் குறையாது..பட் அட் த சேம் டைம் உங்கப்பா எனக்கும் அப்பாங்கிற அளவு நா மனம் ஒத்து பேசுறதெல்லாம் ரொம்பவே கஷ்டம்..இதை மட்டும் நீ சகிச்சுகிட்டு வாழ்ந்துதான் ஆகணும் ஹணி..ஐ அம் சாரி டு சே திஸ்..பட்..”,என மறுபுறம் பார்த்தவாறு நெற்றியை தடவ,

“நந்தா ஏன் என்னென்னவோ பேசுறீங்க???எனக்காக அவரை மன்னிக்க கூடாதா..மறக்க..”

“எதை மறக்க சொல்ற ஹணி..என்னை அடிச்சதையா??அத்தனை பேர் முன்னாடி நடு ரோட்ல எதோ பொண்ணு பின்னாடி அலையுற பொறுக்கி மாதிரி ட்ரீட் பண்ணத நா சாகுற வர மறக்க முடியாது டீ..சாதாரணமா கூட என் அப்பா அடிச்சதில்ல..

வாழ்க்கையோட முதல் அவமானம் எப்பவுமே மனசை விட்டு போகாது ஹணி..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டீ..இந்த ஒரு விஷயத்தை தவிர உன் லைவ்ல எனக்காக நீ சேக்ரிபைஸ் பண்றதுக்கு எதுவும் இருக்காது ஹணிம்மா..மனச மாத்த ட்ரை பண்றேன் பட் அதுமாறும்னு எனக்கு தோணல..சாரி டீ..”

கண்கள் சிவக்க அமர்ந்தவளை கைப்பற்ற மறுகையால் அவனை அழுந்த பிடித்தவள்,” அதுக்கப்பறம் உங்க இஷ்டம் நந்தா..சரி நா கிளம்புறேன்..”

“ஹணி ..”

“இல்லப்பா கோவம்லா இல்ல..ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கேன் இப்போ நா..யாருக்கும் ஃபேவரா பேச முடில வேற ஒண்ணுமில்ல..பை பாக்கலாம்…”,

பெண்ணவளுக்கு மனம் வலித்தது…கால் வலிக்க வலிக்க எவ்வளவு தூரம் நடந்தாளோ தெரியவில்லை..நா வறண்டு தலைசுற்றுவதாய் தோன்ற சட்டென உணர்வு பெற்றவள் அருகிலிருந்த பயணிகள் நிழற்குடையில் அமர்ந்தாள்..

காதல் திருமணம் புரியும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நிச்சயமாய் இந்த சூழ்நிலையை கடக்காமல் வந்திருக்க முடியாது..தன் குடும்பமா தன் காதலா..யாரை தூக்கி நிறுத்த வேண்டும் யாரை தாங்கிப் பிடிக்க வேண்டும் ஒன்றும் புரியாமல்,எதாவது ப்ரச்சனை என்றால் நீயாக பார்த்த வரன் தானே என குடும்பத்தார் தேள் கொடுக்கை தயாராய் வைத்திருப்பார்கள்..மறுபுறம் உனக்காக எவ்ளோவோ பண்றேன் எனக்காக இது கூட பண்ண முடியாதவென காதலன் சாதாரணமாய் கேட்பார்..

இதற்கு நடுவிலிருக்கும் அந்த பெண்ணின் மனம் என்பதை இருதரப்புமே பார்ப்பதில்லை..மகளாய் தன் குடும்பத்தையும் மனைவியாய் வருங்கால குடும்பத்தையும் இறுக்கிப் பிடித்து ஒருவருக்கொருவரை விட்டு கொடுக்காமல் அங்கு நடப்பதை இங்கு கூறாமல் இங்கிருக்கும் நிலைமையை அங்கு காட்டிக் கொள்ளாமல் மனம் விட்டு அழ நட்புகள் கூட இல்லாமல் திருமணம் என்ற பந்தத்தில் நுழையும் போதே என்னடா வாழ்க்கை இதுவென்று ஆகிவிடும்..அதையும் தாண்டி மனசை தேற்றி புன்னகை பூரிப்பு அனைத்தையும் வர வைத்து குடும்ப வாழ்க்கைக்கு தயாரானால் நடந்த களேபரம் அனைத்தையும் மறந்து மூன்றாவது மாதத்திலிருந்த அனைவரும் கேட்க ஆரம்பிக்கும் கேள்வி..என்னம்மா இன்னும் விசேஷம் எதுவுமில்லையா????

போங்கய்யா நீங்களும் உங்க கல்யாணமும்..

மக்களே புது ஃப்ளேவர் எப்படியிருந்தது.. ;) ஸ்ரீ பாவம் திட்டப்டாது.. smilesmile கருத்துக்கள் வர வேற்கப்படுகின்றன.. ;) smile

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.