(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 08 - ஸ்ரீ

en kadhalin kadhali

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

 

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய நொடியல்லவா

கல்லும் மண்ணும் வீடுகளில்லை

அன்பின் வீடே அழிவது இல்லை

வெறும் கரையில் படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி..”

பீஸ் போக ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியிருந்து ஹரிணிக்கு..தினமும் மதிய சாப்பாடு தன்னவனோடு கேபிடேரியாவில் சாப்பிடுவாள்..தினமும் அவனுக்கும் சேர்த்து உணவு கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்..

“ஏன் நீங்க லஞ்ச் எடுத்துட்டு வர்றதில்ல நந்தா???வெளிலேயே சாப்ட்டா உடம்பு என்னாகுறது???”

“ம்ம் சேம் டயலாக் தான் டெய்லி அம்மாவும் சொல்றாங்க பட் இந்த ஸ்கூல்பசங்க மாதிரி பேக் தூக்கிட்டு வர்றதெல்லாம் நமக்கு செட் ஆகாதுடா ஹணி..அதான் இப்போ எனக்கும் சேர்த்து என் பொண்டாட்டி எடுத்துட்டு வராளே அப்பறம் என்ன???”

“ம்ம் போதும் போதும் தெரியாம கேட்டேன்..சாப்டுங்க..”

“ரொம்ப நாளா ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன் கேக்கவா??”

“என்னனு சொல்லு ஹணி??”, என கன்னத்தை காட்டி வினவ,

“அடச்சே எப்போ பாத்தாலும் எடக்கு மடக்காவே பேசிகிட்டு..இல்ல உங்களுக்கு கோபமே வராதா??எப்படி இவ்ளோ கூல்லா இருக்கீங்க???”

“உங்கப்பா கோப பபட்டா தப்புநு சொல்ற இப்போ என்ன பாத்து கோப படமாட்டியாநு கேக்குற??இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது..”

“அப்படியில்ல..இப்போ ஹர்ஷாவே நல்லவன்தான் ஆனா சில நேரத்துல சட்நு திட்டிருவான்..அதுமாதிரி கூட நீங்க பேசி நா பாத்ததில்லையே..அன்னைக்குகூட அந்த சீனியர் என்ன ரேக் பண்ணதுக்கு போய் ஏதோ பேசுனீங்களே அப்போகூட கண்ல கண்டிப்பு இருந்ததே தவிர கோபமில்லையே???”

“ம்ம் ஹணி..கோபம்ங்கிறது நமக்கு பிடிக்காதத அப்போஸ் பண்றதுக்காக யூஸ் பண்ற ஒரு விஷயம் அதை முகத்துலயோ  குரல்லயோ  காட்டினாதான் கோபம்நு அர்த்தம் கிடையாது..அன்னைக்கு அவன்கிட்ட என்ன சொன்னேன்னு தெரியுமா???”

“உன் வீரத்தை காட்டனும்னா என்கிட்ட காட்டு போய் ஒரு பொண்ணுகிட்ட காட்டாத இதுக்கு மேல அவள எதாவது சொன்னனு தெரிஞ்சுது பாத்த இடத்துலயே பொதச்சுருவேன்னு சொன்னேன்..”

அதுல இருக்குற கோபம் அவனுக்கு புரிஞ்சா போதும் ஊருக்கே தெரியணும்னு அவசியம் இல்லல..சிம்பிள் சோ நீ நினைக்குற மாதிரி விஜயகாந்த போல ஏய்ய்ய் நு கத்திலா நா பேசமாட்டேன் ஹணி..”

அவளுக்குத் தெரியவில்லை அவனின் இந்த அமைதி கோபத்தை விட ஆபத்தானது என்று..

தினமும் இரவு குறுஞ்செய்தி பரிமாறுவது வழக்கமாகி விட்டது..அவன் காதலில் பெண்ணவள் முங்கி திழைத்தாள் என்று தான் கூற வேண்டும்..ஹணி ஹணி என சிறுபிள்ளையாய் அவளை சுற்றினான்..

இதற்கிடையில் ஹர்ஷாவிற்கு அஞ்சலியோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது..

“வாவ் என் மாமனார் எப்படி ஒத்துகிட்டாரு ஹணி??அப்போ நமக்கும் ஓ.கே சொல்லிருவாருல..ஷப்பாடா பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சேன்..”

“நீங்க வேற உலகமே அழிஞ்சாலும் அதுமட்டும் நடக்காது..அத்தை மாப்ளை கேக்குறமாதிரி கேட்டு பேசி சம்மதிக்க வச்சு ஒருவழி ஆய்ட்டாங்க..ஹர்ஷாகிட்ட எங்கப்பா ஒரு வார்த்தை சம்மதமாநு கூட கேக்கல..அவனும் நல்லவன் மாதிரி சரிப்பா அப்படிநு மண்டைய ஆட்டிட்டான்..”,என சிரிக்க,

“நல்ல குடும்பம்..”

அவனை கோவமாய் அவள் முறைக்க ,”ஹே ஹணி இல்ல நிஜமாவே நல்ல குடும்பம்நு பாராட்டினேன்..மத்தபடி ஒண்ணுமில்ல..”

“ம்ம் அந்த பயம் இருக்கனும்..ஹர்ஷா உங்கள இன்வைட் பண்றேன்னு சொல்லிருக்கான் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.