(Reading time: 12 - 24 minutes)

அவள் ஏதோ பேச நினைத்து வாயை திறப்பதற்குள் அவளின் செவ்விதழ் அவன் வசம் இருந்தது..மூச்சடைத்தவள் அவன் கையை இறுகப்பற்ற அவனின் கைகளோ இடையில் விடாது கோலம் வரைந்து கொண்டிருந்தது..இதழை விடுவித்து அவன் முகத்தை உரச சட்டென அவனை பின்நோக்கி தள்ளினாள்..அவன் சட்டை கசங்கியிருந்த விதமே அவள் எத்தனை அழுத்தமாய் பற்றியிருக்கிறாள் என்பதை உணர்த்த உதடு கடித்து அதை சரி செய்தவன் தன்னவைளை பார்க்க கண்களில் நீர்கோர்க்க அதை கட்டுப்படுத்தியவாறு தன்னை சரிசெய்து கொண்டிருந்தாள்..

“ஹணி..”

பதிலில்லை அவளிடம் நிமிர்ந்து ஒரு பார்வைகூட அவன்மீது படவில்லை..அவனின் தவறு புரிந்தாலும் அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியவில்லை அவனுக்கு..சட்டென அவள்முன் மண்டியிட்டவன்,

“ரியலி சாரி ஹணி ப்ளீஸ் மன்னிச்சுடு..அழாத ப்ளீஸ்”

அதைப் பார்த்தவள் பதறிப்போய் கீழே அவனை போலவே காலைமடக்கி அமர்ந்தாள்..

“ஏன் நந்தா இப்படி பண்றீங்க???”குரல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது..

“ஹணி சாரி..”

“ப்ச்ச்ச்ச்”

“எனக்கு வேற என்ன சொல்லனு தெரில ஹணி..எனக்கு இது தப்புநு புரிஞ்சாலும் மனசு இதை தப்புநு ஒத்துக்க மாட்டேங்குது..என் ஹணி என் பொண்டாட்டி டீ நீ..அத தாண்டி உன்னை பக்கத்துல பாத்த வேற எதுவும் தோண மாட்டேங்குது..”

“சரி விடுங்க”

“அப்படிசொல்லாத நீ சிரிச்ச முகமா இருந்தாதான் நா கிளம்புவேன்..”

“அதெல்லாம் சிரிப்பேன் நீங்க கிளம்புங்க..”

“ஹே ரொம்ப பண்ற டீ ஒரு முத்தம் தான குடுத்தேன் ஏதோ குழந்தையே குடுத்தமாதிரி டென்ஷன் ஆகுற??”

“ஏது!! இன்னும் அந்த நினைப்பு வேற இருக்கா எதையாவது தூக்கி அடிக்குறதுக்குள்ள ஓடிருங்க”என்றவள் ஓரளவு நிதானமடைந்திருந்தாள்..

“இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப அநியாயம்..கல்யாணத்துக்கப்பறம் உன்னை அங்க இங்க நகர விடுறதாவேயில்ல..அப்போ இருக்கு உனக்கு..”

“அதுக்கப்பறம் நானும் எங்கேயும் போற ஐடியால இல்ல இப்போ கிளம்புங்க என எழுந்து கதவருகில் நின்று கொள்ள,

“அடிப்பாவி ஒரு முடிவுல தான் இருக்க சரி பை..நைட் பேசுறேன்..என்றவன் அவள் இடை கிள்ளி ஓடிவிட்டான்..

ஹரிணிக்கோ யாரையும் முகம் கொடுதது பார்க்க முடியுமா என்றே தெரியவில்லை..ஆணின் ஸ்பரிசம் என்பதை தாண்டிய அவனுக்கு அவள் மீதான வேட்கை ஒவ்வொரு தொடுதலிலும்..காதலை இத்தனை முரட்டுத் தொடுதலிலும் கூட உணர்த்த முடியும் என்பதை அவன் உணர்த்தியிருந்தான்..மெதுவாய் யார் கண்ணிலும் படாமல் மணமகன் அறையில் சென்று முகம் கழுவி உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக் போட்டு மேடையில் போய் நின்று கொண்டாள்…மனம் சமனபட மறுத்தது..மீண்டும் மீண்டும் அத்தனை அருகில் தெரிந்த அவன் முகமே மனக் கண்ணில் இம்சித்தது..சாப்பிட்டு முடித்து கிளம்பியவன் பிறரறியாமல் கண்ணசைத்து விடைபெற தலையசைப்போடு நிறுத்திக் கொண்டாள்..

திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருக்க ஹர்ஷா அஞ்சலியோடு தேனிலவு சென்றிருந்தான்..ஹரிணி விடுப்பு முடிந்து இன்று தான் மறுபடியும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்..வழக்கம்போல் மதிய உணவில் அவனை சந்திக்க,அவன் முகம் மிகவும் சந்தோஷமாய் இருந்தது..

“என்ன நந்தா??ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க??”

“சொன்னா நீயும் ரொம்பவே சந்தோஷப்படுவ ஹணி..”

“என்ன சொல்லுங்க..”

“ம்ம் நம்ம விஷயத்தை வீட்ல சொல்லிட்டேன்..அப்பா அம்மா ஓ.கே சொல்லிட்டாங்க..”

“நிஜமாவா சொல்றீங்க என்ன திடீர்நு????”

ம்ம் அன்னைக்கு உங்க அண்ணா கல்யாணத்துக்கு வந்துட்டு போனேன்ல அப்போவே அப்பாவும் அம்மாவும் பிடிச்சுகிட்டாங்க..

“ரகு யார்ரா அது எங்களுக்கு தெரியாத உன் ப்ரெண்ட்???” -லஷ்மி..

“ம்ம் அவரு பேரு ஹர்ஷாம்மா..இப்போ தான் ப்ரெண்ட் ஆனோம் “,என்றவாறு சட்டை பட்டனை கழட்டி சாய்வாய் சோபாவில் அமர்ந்தான்..

“ஓ..சரி உன் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு போறதெல்லாம் இருக்கட்டும் நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?? “– கண்ணன்..

“டேட் அதுகுள்ள என்னை ஏன் வம்புல மாட்டி விட பாக்குறீங்க??இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..”

“யாரு நாங்க மாட்டிவிட பாக்குறோமா??அதான் நீயே மாட்டிக்கிட்டியே”, என்றவாறு கிச்சனிலிருந்து வந்த லஷ்மி கையில் வைத்திருந்ததை பார்த்து நாக்கு கடித்து கொண்டான்..

அவர்களின் டேப்ளோ போட்டோவை ஓரளவு பெரிதாய் ப்ரிண்ட் போட்டு வைத்திருந்தான்..தன் அலைமாரியில் துணிகளுக்கடியில் வைத்திருந்தது எப்படி சிக்கியது என அவன் மனம் யோசித்துக் கொண்டிருக்க லஷ்மி அவனருகில் வந்து காதை திருகினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.