(Reading time: 12 - 24 minutes)

“நீ பட்டுபுடவையா எடுத்துருக்க ஹணி???”

“நா என்ன சொல்றேன் நீங்க என்ன கேக்குறீங்க??ஆமா மாப்பிள்ளை யோட தங்கச்சினா சும்மாவா??”

“வாவ் அப்போ கண்டிப்பா நா வரேன்..”

ஐயோ வென தலையில் அடித்துக் கொண்டவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தவனை தன் விழிகளில் பத்திரபடுத்திக் கொண்டாள்..அப்படி இப்படியாய் திருமண நாளும் வர காலையிலேயே தயாரானவளுக்கு தன்னவனை பார்க்க போகும் ஆர்வமே அதிகமாய் இருந்தது…

நொடிக்கொரு முறை வாசலை வருடிச் சென்ற அவள் விழிகள் ஒரு நொடி அங்கேயே நிலைத்து விட்டிருந்தது..அழகிய கடல்நீல நிற முழுக்கைச்  சட்டையும் ஐவரி நிற பேண்டும் பார்மல் ஷீவுமாய் கையில் பொக்கே மற்றும் கிப்ட்டோடு கம்பீரமாய் வந்தவைனை பார்த்தவளுக்கு விழியை நகர்த்த தோன்றவேயில்லை..அவள் அன்னை அவர் அருகில் வந்து,

“ஹரிணிம்மா அவருதான் ரகு தம்பியா??”என காதில் கிசுகிசுக்க,

“ம்ம் ஆமா”என தன்னை மறந்து கூறியவள் சட்டென உணர்ச்சி பெற்று ஐயோ அம்மா உனக்கு????

“ போனவாரம் தான் ஹர்ஷா சொன்னான்..ராஜாவாட்டம் இருக்காரு ஹரிணிம்மா..ஹர்ஷாவே அவ்ளோ சொன்னப்பறம் எனக்கும் சம்மதம்தான் “,என மகளை வாஞ்சையாய் கன்னம் வருட கண்கள் பனித்தது அவளுக்கு..

“ஹரிணிம்மா அப்பா பாத்தாரு தொலைஞ்சோம் போ போய் வேலைய பாரு “,என்றவர் கீழேயிறங்கி அவனருகில் சென்றார்..

“வாங்க தம்பி,நல்லாயிருக்கீங்களா???”

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி நீங்க எப்படியிருக்கீங்க..நா…”

“நல்லாயிருக்கேன்ப்பா..ம்ம் ஹர்ஷா சொன்னான்..அவங்க அப்பாவ நினைச்சுதான் பதட்டமா இருக்கு..தைரியமா இருங்க நல்லதே நடக்கும்..சரிப்பா நீங்க உக்காருங்க சாப்ட்டுதான் போணும் நா இதோ வந்துட்றேன் என சென்றவரை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது..அவர் நகர்ந்தும் மணமேடையில் கண்ணை பதித்தவன் வாய் பிளக்காத குறையாய் தன்னவளை கண்களால் பருகி கொண்டான்..தங்கநிற சரிகைப்புடவையில் கழுத்தில் சின்னதும் பெரியதுமாய் இரு செயின்கள் காதில் காதில் பெரியதாய் ஜிமிக்கி கம்மல் கை முழுவதும் கண்ணாடி வளையல்கள் என அம்சமாய் நின்றிருந்தாள்..

அவள் புடவை கட்டி பார்த்திருந்தாலும் இத்தனை ஒப்பனையோடு பார்த்ததில்லை..மனம் தன்னவளுக்காய் பாடலை பதிவிட ஆரம்பித்திருந்தது..

இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பையோ மோகினியோ

இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பையோ மோகினியோ

மனம் முந்தியதோ விழி முந்தியதோ

கரம் முந்தியதோ எனவே

உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்

சங்கணி வீதியிலே

மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி

பொன் பந்து கொன்டாடினளே

மனம் முந்தியதோ விழி முந்தியதோ

கரம் முந்தியதோ எனவே

மேடையில் அவள் ஹர்ஷா அருகிலேயே நின்றிருக்க திருமணம் முடிந்து  மணமக்களுக்கு பரிசு கொடுக்க மேடை ஏறியவன் அவளை நோக்கியே வர ஒரு நொடி உடல் நடுங்கி விட்டது அவளுக்கு..அதை உணர்ந்தவன் சட்டென பார்வையை திருப்பி ஹர்ஷாவிடம் பரிசைக் கொடுத்து புகைப்படம் எடுத்து கிளம்பினான்..ஹர்ஷா அவனை சாப்பிட அழைத்துச் செல்லுமாறு ஹரிணியிடம் கூற கேமராக்களில் இருந்து தப்பித்தால் போதுமென வேகமாய் கீழிறங்கி விட்டாள்..அவள் முன்னே செல்ல சற்று இடைவெளிவிட்டு அவளை தொடர்ந்தவன்,

“ஹணி இப்படியே என்கூட வந்துரேன் நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம்..”

“நந்தா யாராவது கேட்டாங்க அவ்ளோதான்..”

“ ப்ளீஸ் டீ நா பாவம்தான..”

அவன் குரல் அவளை என்னவோ செய்தது முகம் தாமரையாய் மலர அதை மறைக்க முடியாமல் பரிதவித்தவள் ஆட்கள் இல்லாத இடத்தில் இருந்த அந்த அறைக்குள் அவனை இழுத்துச் சென்றாள்..அடுத்த நொடி அவளை இடையோடு பிடித்து  வேகமாய் சுவரோடு சாய்த்துநிறுத்தியிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.