(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 13 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

தீபா… என்னடா?...”

தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த தமையனிடம் அவள் வினவிட,

“இல்லக்கா…. ஒன்னுமில்லை…” என்றான் அவன் தலையசைத்தபடி…

அந்த ஒன்றுமில்லை என்பதில் அவளுக்குப் புரிந்து விட்டது… அவனின் மனதில் ஓடும் எண்ணங்கள்…

“அவங்க காதலுக்கு உதவ நினைக்கிற நீ உன்னோட காதலை சொல்லுறதுக்கு கூட யோசிக்கலையா?...”

அவனின் மனதில் எழுந்திட்ட கேள்வியினைப் படித்தவளாய், சிரித்தவள், “தீபா… வெளியேப் போறோம்னு சொன்ன?... கிளம்பாம நின்னுட்டிருக்கிற?...” என கேட்டிட, அவனும் புன்னகைத்தபடியே “போகலாம்…” என்றவாறு கிளம்பச்சென்றான்…

சில மணி நேரத்திலேயே, இருவரும் அந்த நகரத்தின் பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர்…

ஏற்கனவே புக் செய்து வைத்திருந்ததால், நேரே அந்த டேபிளை நோக்கிச் சென்றனர் இருவரும்…

அவள் அமர்ந்ததும், “என்னக்கா சாப்பிடுற?...” என தீபன் கேட்டிட,

“ஏண்டா இப்படி பண்ணுற?.. வீட்டுல மஞ்சுளாக்கா என்ன டேஸ்ட்டா செய்வாங்க தெரியுமா?... அவங்க்கிட்ட சொல்லியிருந்த வீட்டுலயே இதை எல்லாம் ரெடி பண்ணி தந்திருப்பாங்க…”

அவள் குறைப்பட்டுக்கொண்டேக்கூற, “தீபனும் அதான்க்கா சொன்னான்… ஆனா எனக்குத்தான் உங்களை வெளியே கூட்டிட்டு வந்து ட்ரீட் தரணும்னு ஆசை…” என சொல்லியபடியே தீபனின் அருகே வந்தமர்ந்தான் விக்கியும்…

“வா விக்கி…” சாரு விக்கியினை வரவேற்க,

“விக்கி… நீ என்ன சாப்பிடுற?... சொல்லு…”

தீபன் விக்கியிடம் கேட்க, “நீ சரியான சாப்பாட்டுராமன்டா… எப்ப பாரு சாப்பாட்டுலயே குறியா இரு…”

சாரு கேலி செய்திட,

“பின்ன நமக்கு சோறு தான முக்கியம்…” என்றபடி புன்னகைத்தவனாய் மூவருக்கும் அவனே ஆர்டர் செய்துவிட்டு அவன் திரும்பியவன்,

“இதோ வந்துடுறேன்…” என்றபடி வேகமாக அங்கிருந்து கிளம்ப, சாருவும், விக்கியும் அவனை புரியாமல் பார்த்தனர்…

“என்ன விக்கி?... தீபா எங்க போறான்?...”

“தெரியலையேக்கா.. இருங்க நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்…”

விக்கி எழ முயற்சித்திட, “வேண்டாம் விக்கி… அவன் வந்துடுவான்… சாப்பாடும் வந்துடும் இப்போ… காலையில வேற சாப்பிடலைன்னு தீபன் சொன்னான்… நீ முதல்ல சாப்பிடு… அவன் வந்துடுவான்…” என விக்கியை தடுத்தாள் சாரு…

பின் சில நிமிடத்திலேயே தீபன் வந்துவிட, “எங்கடா போயிருந்த?...” என அவனின் கைகளில் அடித்தபடி சாரு கேட்டுக்கொண்டிருக்க,

“வாங்க… உட்காருங்க சார்..” என எழுந்து கைகொடுத்தான் தீபன் அங்கிருந்த கௌஷிக்கிற்கு…

யாரை இவன் வரவேற்று அமர சொல்லுகிறான் என்ற தொனியில் திரும்பி பார்த்திட்டாள் சாரு…

பார்த்த மாத்திரத்தில் விழிகள் விரிந்திட, இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு…

கௌஷிக் ஒரு மீட்டிங்கிறாக அந்த இட்த்திற்கு வந்திட, மீட்டிங்க் முடிந்த கையோடு அவன் திரும்பி செல்ல நினைத்திட்ட நேரத்தில், தீபன் அவனைப் பார்த்திட, விக்கியும் தானும் இங்கே வந்திருப்பதாக கூறியவன், தங்களோடு அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என்ற கேட்டிட, முதலில் மறுத்திட்டவன், பின் சரி என்றான் தீபனை புண்படுத்திட விரும்பாமல்…

தீபனும் விக்கியும், கௌஷிக் வரும் திசை நோக்கி அமர்ந்திருக்க, சாருவோ தீபனை பார்த்த மாதிரி அமர்ந்திருந்தாள்… சாருவின் பின்னே ஆட்கள் நான்கு பேர் அமர்ந்திருக்க, அவள் அமர்ந்திருப்பதே தெரிந்திடாது தொலைவில் இருந்து பார்த்தால்…

கிட்டத்தட்ட கௌஷிக்கிற்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருந்தது… அவன் தீபனை பார்த்து சிரித்துக்கொண்டே வர, விக்கியோ தலைகவிழ்ந்தபடி செல்போனை பார்த்துக்கொண்டிருந்தான்…

தீபனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தவன், மெல்ல தீபனின் அருகில் வந்து கைகுலுக்கிட, திரும்பி பார்த்திட்டவளுக்கு புருவங்கள் உயர்ந்து இதழ்கள் மலர்ந்திட்ட்து அக்கணமே…

“வாங்க சார்… வாட் எ ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்… உட்காருங்க…” என விக்கியும் எழுந்து வரவேற்றிட, கௌஷிக் அதனை ஏற்று எங்கு அமர என யோசித்தான்…

தீபனும் விக்கியும் அருகருகே அமர்ந்திருக்க, சாருவின் பக்கத்தில் ஒரு சீட் இருந்திட, கௌஷிக்கோ தயங்கி நின்றது ஒரு விநாடியே…

தன்னவன் நின்றிருக்க, தான் மட்டும் அமர்ந்திருப்பதா என்ற ஆதங்கம் எழுந்திட்டதோ அப்பேதையின் மனதினுள்…

கைகூப்பி வரவேற்கவும் செய்தாயிற்று… எழுந்து நகர்ந்து இடமும் தந்தாயிற்று… அவன் எங்கு அமர என யோசித்ததினையும் இல்லாமல் செய்தவாறு…

“வாங்க…” என கைகூப்பி வரவேற்கும் விதமாக எழுந்தவள், “உட்காருங்க…” என பேசியபடியே அவள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து அடுத்த இருக்கையில் அமர, இப்போது அவள் இருக்கை காலியாகிட, அவன் அவ்விடத்தை நிரப்பினான் சிறு புன்னகையுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.