(Reading time: 14 - 28 minutes)

“என்ன ஹரிணி வாய் நீளுது..ஓ அந்த அளவு உன் மனச கெடுத்து வச்சுருக்கானா அவன்???”

“அப்பா ப்ளீஸ்..அவரு மேல எந்த தப்பும் இல்ல நாதான் உங்களபத்தி நம்ம குடும்பத்த பத்தி தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்க கூடாது..தகுதிக்கு மீறினதுனு தெரிஞ்சும் ஆசைப்பட்டது தப்புதான்”,என்றவாறே மாடிக்கு தனதறைக்குள் சென்று மெத்தையில் விழுந்தவள் முடிந்த வரை அழுது தீர்த்தாள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் சற்று மட்டுப்பட்டவளாய் தன் பேக்கை தேடி மொபைலை எடுத்து ரகுவிற்கு அழைக்க போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது..பயந்தது போலவே அனைத்தும் நடப்பதை எண்ணி மேலும் கலங்கியவள் மேலும் மேலும் முயற்சி செய்ய பலனில்லாமல் போனது..சட்டென நினைவிற்கு வர அவன் அறையிலுள்ள லேண்ட் லைன் நம்பருக்கு அழைத்தாள்..முழுவதுமாய் அடித்து ஓய்ந்தது..மீண்டும் அழைக்க போனை யாரோ எடுத்த அடுத்த நொடி,

“நந்தா..எப்போ வந்தீங்க ஏன் போன் எடுக்கல??”,என பதற,

“ஹரிணி????”, என கேட்ட லஷ்மியின் குரலில் இன்னுமாய் பதட்டமடைந்தாள்..

“ஆன்ட்டி..எப்படியிருக்கீங்க??நா அவர்ட்ட பேச நினைச்சு..”

“ம்ம் நா நல்லாயிருக்கேன்..அவன் மாடி இருக்கான் போன் கூட இங்க ரூம்ல தான் இருக்கு எதுவும் ப்ராப்ளமா??”

“இல்ல இல்ல ஆன்ட்டி அதெல்லாம் இல்ல..சரி நா அப்பறமா பேசிக்குறேன்”, என அவள் அங்கு பேசும் போதே அவன் போனை உயிர்பித்தவர் அவளிடமிருந்து வந்த 50க்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்களை கவனித்து..

“இல்ல நீ ஒரு நிமிஷம் லைன்ல இரும்மா”, என்றவாறு காட்லெஸை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றார்..அங்கு ரகு முகம் இறுக வேக வேகமாய் தம்பில்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்..

ரகு உனக்கு போன் என அவர் நீட்ட யாரென அறிந்தவன் ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் கொள்ள லஷ்மி கீழேயிறங்கிச் சென்றுவிட்டார்..

“சொல்லு..”

“நந்தா ஐ அஅம்.. “என அவள் மீண்டும் அழத் தொடங்க,

“ப்ச்ச் இப்போ எதுக்கு அழற ஹணி??”

“சாரி ந்தா நா பயந்த மாதிரியே நடந்துருச்சு..அப்பாவுக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்..”

“ப்ளீஸ் அதபத்தி இனி பேசாத விட்டுரு..”

“நந்தா..”

“இங்க பாரு ஹணி அவரு பொண்ணா நீ அவரு பண்ணத நினைச்சு அழு..ஆனா என் பொண்டாட்டிநு நினைச்சேனா ஒரு செகண்ட் கூட அழாத..அது என்னவா இருந்தாலும் சரி..என் ஹணி அழக்கூடாது..புரியுதா???”

“நந்தா ஏன் என்னவோ போல பேசுறீங்க??அப்பா நல்லவருதான்ப்பா..ப்ளீஸ் வேற எதுவும் தப்பா நினைச்சுறாதீங்க ப்ளீஸ்..”

“அப்போ நா கெட்டவனா ஹணி??அவரு அடிச்சது கரெக்ட்னு சொல்றியா???”

“நந்தா!!!!!”

“ப்ளீஸ் ஹணி இதோட விட்டுரு..நா என் வாழ்க்கைல இருந்து எடுத்து வீச நினைக்குற மறக்க நினைக்குற ஒரு நாள் இதுவா தான் இருக்கும்..சரி நீ சாப்ட்டு போய் தூங்குடா..நாளைக்கு ஆபீஸ்ல பாப்போம்..பை டேக் கேர் டா..”

அத்தனை அழுத்தம் அவன் குரலிலும் பேச்சிலும்..அவள் தந்தை மீதான கோபத்தை அவளிடம் காட்ட விரும்பாத அழுத்தம்..பெண்ணவள் தன்னிறக்கத்தால் தவித்தாள் தனிமையில்…இரவு சாப்பிடவும் கீழேயிறங்கவில்லை..ஹர்ஷா இருந்திருந்தால் ஒரு வேளை நிலைமை சிறிது சமாதானம் ஆகியிருக்கலாம் ..இப்போது மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவேயில்லை..அவள் பேசவும் விரும்பவில்லை..காலை எழுந்து தயாராகி வந்தவளை பார்த்த அவள் தந்தை,

“வேலைக்குத் தான் போறியா இல்ல கல்யாணம் பண்ணி அவனோடேயே போய்ரலாம்நு இருக்கியா???”

“அப்பா!!!”

“இல்ல இப்போதான் இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னவெல்லாமோ நடக்குதே அதான் கேட்டேன்..”,கண்களில் நீர்கோர்க்க அவர்முன் நிற்க பிடிக்காமல் சாப்பிடால் அப்படியே கிளம்பிவிட்டாள்..ஆபீஸிற்கு சென்றவள் தன் இடத்திற்கு போகப் பிடிக்காமல் கேன்டீனிலேயே அமர்ந்துவிட சரியாய் ஹர்ஷா அவளை அழைத்தான்..

“அண்ணா..”

“ஹரிணிம்மா என்னடா என்னாச்சு ஏன் அழற???”

“அண்ணா நேத்து…”

“பெரிய ப்ராப்ளம் ஆய்டுச்சு..அம்மாவும் கோபத்துல எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நாக்காலயே குத்தி கிளிக்கிறாருண்ணா அப்பா..நீ எப்போ வருவ..”

“அழாதடா ஹரிணி..இரண்டு நாள்ல வரேன் அதுக்கு முன்னாடி டிக்கெட் கிடைக்குதானு பாக்குறேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.