“எதுவும் யோசிக்காதக்கா.. ரொம்ப முடியலனா நீ தூங்கி எழுந்ததும் ஹாஸ்பிட்டல் போகலாம்.. இப்போ தூங்கு.. மாமா வந்ததும் எழுப்பி விடறேன்..” என தட்டி தந்தாள்..
ரிந்துவும் தன் தங்கையின் அரவனைப்பில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து உறங்க ஆரம்பித்தாள்.
ஷைலுவிற்கு இப்பொழுது தனது தமக்கையை நினைத்து கவலையாக இருந்தது.. ஷைலு தனக்கு என்ன வே/ண்டும் வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பாள்.. எந்தவொரு விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என நினைப்பவள்.. ஆனால் ரிந்து மிகவும் சாஃப்ட் நேச்சர்ட் பெர்சன்.. அவளை இந்த உணர்விலிருந்து அத்தானால் மட்டுமே வெளிக்கொண்டு வர இயலும் என நினைத்தாள்..
இரவு சூர்யா வந்ததும்.. “அத்தான் நம்ம இன்னைக்கு நைட் ஷோ மூவிப் போறோம்.. டிக்கெட் புக் ப்ண்ணிட்டேன்.. என்ன உங்களுக்கு ஒகே தான..” என அவள் முடிவு எடுத்துட்டு வினவ..
“என்ன மேடம் நீங்க சொன்னா நான் மறுக்கவா போறேன்.. அஸ் யு ஸே மை லார்ட்” என போலிப் பனிவுக் காட்ட..
“ஹாஹா அது..” என இல்லாத காலரை அவள் தூக்கி காமிக்க..
“அடிங்க” என சூர்யா விரட்டவும் உள்ளே ஓடிவிட்டாள்..
தனதருகே தன் மனைவி தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து..” என்ன டா அப்படி பார்க்கற..” என கண்களில் காதலுடன் கேட்க..
“ஏன் பார்க்க கூடாதா..”எனக் குறும்பாக ரிந்து கேட்க..
சூர்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது தன் மனைவி பழையப் படி பேசுவதில்..
“நீ பார்க்காம வேற யாரு பார்க்க போறாங்க.. ஏன் டா டல்லா இருக்க.. முடிலையா என்ன.. நைட் ப்லேன் வேனும்னா கேன்ஸல் பண்ணிக்கலாம் “ என அக்கறையாக கேட்க..
“இல்ல வேண்டாங்க.. நான் நல்லா தான் இருக்கேன்.. ஒன்னும் ப்ரிச்சனை இல்லை..” என புன்னகைக்க..
சூர்யாவிற்கு அந்த நொடித் தோன்றியது இது தான்.. அவளது புன்னகை என்றுமே வாட விடக் கூடாதென..
“ஹலோ அத்தான் போதும்.. விட்டா அக்கா வ கண்ணாலையே ஸ்வாஹா பண்ணிருவீங்கப் போல..” என கூறியப் படியே ஷைலு அங்கு வர..
“அம்மா தாயே ஆள விடு.. நான் ஏதாச்சு சொல்லி அப்புறம் உங்கிட்ட கடி(பேசி பேசி கடிப்பாள் என கூற வறார் நம்ம சூர்யா சர் :P) வாங்க விரும்பல..” என பயப்படும் மாதிரி நடிக்க.. அங்கு ஒரு களேபரம் ஆரம்பமானது..
ஒருவாராக ஐவரும் கிளம்பி ரித்துவையும் அழைத்துக் கொண்டு பிரபலமான ரெஸ்டாரன்ட்டில் உணவை முடித்துக் கொண்டு திரையரங்கு நோக்கி சென்றனர்.. இன்றைய தினத்தின் அடுத்தக் கட்ட அதிர்ச்சியை நோக்கி செல்கிறோம் என அறியாமல் தனது அக்கவின் பிறந்த நாள் கொண்டாட்டம் சொதப்பாமல் இருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டே வந்தாள் ஷைலாரன்யா..!
Hi Friends!!! If there are any spelling mistakes kindly excuse karo ji. Last minute la eludhunadhu naala spell check panna mudiyala.. And got stuck with some work so couldn’t give a lengthy update.. Mudinja alavuku next time kandippa try panra extra pages tharradhukku.. Have a happy weekend
தொடரும்
{kunena_discuss:1161}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.