Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

வீட்டு மாப்பிள்ளையின்  உடன் பிறந்த சகோதரன் வந்திருந்ததால் மகிழ்ச்சி அடைந்திருந்த சின்னையா

 தன் தம்பி மகளை தான் வளர்க்கப்போவதாய் சொன்னதும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

அவளை அனுப்பும் எண்ணம் அங்கு எவருக்கும் இல்லாமல் இருக்க ,வாய் வார்த்தை நீண்டது. இவ்வளவு நாள் எங்கே சென்றாய்? என்ற கேள்வியில் தொடங்கி அனுப்ப முடியாது என்ற தீர்மானம் வரை வந்து நிற்க

வந்தவரோ போன மாதம் வரை பிள்ளை செல்வத்திற்காக காத்திருந்ததையும் ஆனால் வாழ் நாளில் என்றுமே தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க போவதில்லை என்பதை அறிந்த பிறகு வாழ்வே நரகமாகிவிட்டது  என்று பிள்ளை செல்வம் இல்லாமல் தானும் தன் மனைவியும் படும் வேதனையை சொல்லி அழ அங்கிருந்த அனைவருக்குமே சங்கடமாகிவிட்டது.

தன் உயிருக்கு உயிராய் அந்த பட்டு ரோஜாவை வளர்ப்பதாய் சொல்லி மன்றாடினார் இருவரும்.

தன் தொழிலை உடனடியாக ஏதும் செய்ய முடியாத நிலையில் சிறிது காலம் கழித்து தானே இந்தியா வந்து விடும் எண்ணத்தில் இருப்பதாக அவர் தெரிவிக்க

என்ன செய்வதென்றே புரியாத நிலையில் அனைவரும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

பாட்டியும் பேரனும் பேத்தியும் அவர்களுடன் வெளிநாட்டிற்கு செல்வது என்று முடிவானது.

வள்ளியம்மையால் இதை ஏற்க முடியாத போதும் சிறிது காலம் பொறுத்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று அனைவரும் எடுத்து சொல்ல வேறு வழியே இன்றி பொறுத்து கொள்ள சம்மதித்தாள்.

அவர்களின் சம்மதம் கிடைத்த ஆனந்தத்தில் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகளை தெரிவித்தவர்கள் பாட்டி பேரன் பேத்தி தங்களுடன் வந்து தங்க தேவையான அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை வந்து அழைத்து செல்வதாய் சொல்லிவிட்டு செல்ல, அன்று முதல் நாட்களை வேதனையுடன் எண்ணத் தொடங்கினாள் வள்ளியம்மை.

ஒவ்வொரு விடியலும் தன் பிள்ளைகள் தன்னை விட்டு வெகு தூரம் செல்ல போகும் வேதனையை கொடுத்து கொண்டே இருக்க, பிள்ளைகளுக்கு பிரியாமானவற்றை செய்து கொடுத்தாள். அவர்களோடு மட்டுமே நேரத்தை செலவிட்டாள். அவள் வேதனையை அறிந்த சின்னையாவும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அவள் வேதனையை பொருட்படுத்தாத காலமும் ஒரு நன்னாளில் அவள் வாசலில் நிறுத்தியது அவ்வீட்டு மாப்பிள்ளையின் சகோதரனை.

அடக்க முடியாமல் அழுது விட்டாள் வள்ளியம்மை, அவள் மாமியார், கணவன்  எவ்வளவு முயன்றும் அவளை தேற்ற முடியாமல் போக கண்ணீருடன்  ஒரு டைரியை கொடுத்தாள் அவரிடம்.

என் பிள்ளைகளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு இதுல எழுதி இருக்கேன். பார்த்து நடந்துக்கோங்க சீக்கிரம் என் பிள்ளைகளை என்கிட்ட வந்து சேர்த்துடுங்க ரொம்ப நாள் என்னால தாங்கிட்டு இருக்க முடியாது என்று அவள் கண் கலங்க

நிச்சயமா மா சீக்கிரம் நாங்க வந்திடுவோம் கவலை படாதீங்க உங்க தியாகம் ரொம்ப பெருசுமா ரொம்ப நன்றி என்று கூறிவிட்டு அயல் நாட்டிற்கு பறந்தனர் அவர்கள்.

பிள்ளைகள் இருந்த வீடு வெறிச்சோடி இருக்க எவ்வளவு சொல்லியும் சந்திராவையும் ராசாத்தியையும் பங்களாவிற்கு அனுப்ப மறுத்தனர் குணாவும் சுந்தரியும்.

வசதி வாய்ப்பு இவைகளை பார்த்து தங்கள் பிஞ்சு குழந்தைகளின் மனம் சலனப்பட கூடாது என்று தெளிவாக இருந்தான் குணா.

சுந்தரி மட்டும் அவ்வப்போது வந்து அங்கே சற்று நேரம் இருந்து விட்டு செல்ல, பிள்ளைகளை பங்களாவிற்கு அனுப்ப மறுத்ததால் வள்ளியம்மை வேலை முடிந்ததும் சுந்தரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு வெகு நேரம் தங்கி விட்டு வருவதை தன் அன்றாட வழக்கம் என கொண்டாள்.

ஒவ்வொரு முறை செல்லும்போதும் வித விதமான பலகாரம் பொம்மை என்று கொண்டு வந்து கொடுப்பது அவள் வழக்கமாய் இருக்க அதை வள்ளியம்மையின் மனம் புண்படாத வகையில் சுட்டி காட்டினாள் சுந்தரி.

வள்ளியம்மை எவ்வளவு எடுத்து சொல்லியும் விலை உயர்ந்த விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வாங்கிய புது துணிமணிகளை   சுந்தரி பெற்று கொள்ள மறுத்து விடவே ஒரு கட்டத்திற்கு மேல் தானும் அங்கு சென்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தாள் வள்ளியம்மை.

இரண்டு பிள்ளைகள் போதும் என்று ராசாத்தி பிறந்த போதே குணா சொல்ல, தனக்கு மகன் வேண்டும் நிச்சயம் பிறப்பான் என்ற நம்பிக்கையில் பிடிவாதமாய் தனது மகனுக்காக சுந்தரி காத்திருக்கராசாத்தியின் பன்னிரண்டாவது வயதில்  சுந்தரி மீண்டும் கருவுற இம்முறை ஆண்மகன் தான் பிறக்கப்போகிறான் என்ற உறுதியும் எதிர்பார்ப்புமாய் இருந்தாள் சுந்தரி.

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையாSAJU 2018-04-01 15:13
SUPER UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-04-01 14:58
:clap: super epi. :thnkx: 4 big epi.waiting to read more.antha aditha kai yaarudaiyathu endru therinthu kolla miga aavalaaga adutha epiyai aarvathodu ethir paarkkirom. (y) :clap: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-04-01 14:42
Interesting update Prema ma'am :clap: :clap: thanks for long epi....FB and present rendume suspense la kondupogum kadhai nadai super :hatsoff: well balanced n very much curious to know the plot.....yaru indha kadhir sollum jeni :Q: kadhir unga push pull-k oru avalve illaye :D Ella dialoguesum super ah irundhadhu :clap: gunna and rasthi oda bonding sounds very frndly and feel good moment of the epi...kathir andha patturoja udan selavendiya necessity irundhadha :Q: jasmine mmmahhaha sema fragrance thaan :D (y) why did kadhir declines tha contract :Q: so baby moon too loves kadhir but en sollamatten Adam pidiching :Q: who is that idiot :Q: Tamil yaru?? kadhir sollum andha she who :Q: :Q: :Q: innum silla pala kelivagal irukku ninga eppo answer solluvinga :eek: :D waiting for next update.....thank you for this emotional and cute update :thnkx: :clap: :clap: keep rocking!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top