(Reading time: 14 - 27 minutes)

ஹணி ஐ நீட் யூ மேட்லி என்றவன் அவள் பதிலுக்கு காத்திருக்கவில்லை..பூக்குவியலாய் அவளை கையில் ஏந்தியவன் கட்டிலை அடைந்திருக்க அவன் தூக்கியதில் அதிர்ந்தவள் அவன் சட்டையை இறுக்கமாய் பற்றியிருக்க மெதுவாய் கண் திறந்தாள்..

அவளின் பக்கவாட்டில் ஒருபுறமாய் சாய்ந்து தலைக்கடியில் கைவைத்தவாறு அவள் முகம் பார்த்திருந்தான்..

 “ஹணி..”

“ம்ம் “

“லவ் யூ சோ மச்..”

“லவ் யூ டூ நந்தா..”

“நிஜமா??”

“என்ன கேள்வி இது??”

“அப்போ ஒரு கிஸ் குடு அப்போ தான் நம்புவேன்”, என அவன் சீரியஸாய் கூற,

“ம்ம் அப்படி ஒண்ணும் நீங்க நம்பவே வேண்டாம்”, என்றவள் எழுந்து இறங்க எத்தனிக்க. வேகமாய் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்..

“எங்க ஹணி ஓடுற ஓடிப் பிடிச்சு அப்பறமா விளையாடலாம் இன்னைக்கு நா சொல்றத நீ கேட்டு தான் ஆகணும் “,என பொறுமையாய் கூற அவளுக்கோ வெட்கத்தில் கைகள் புல்லரிப்பை ஏற்படுத்தியது..தற்செலாய் அவள் கையின் மேல்பார்வை பதித்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

“நா தான் ஒண்ணுமே பண்ணலயேடீ எதுக்கு இப்போ இவ்ளோ ரியாக்ஷன் குடுக்குற “,என மீண்டும் சிரிக்க,

“ம்ம் இப்படி பேசியே படுத்துறதுக்கு என்ன எதாவது பண்ணாலே பரவால்ல”, என்றவள் அவனுக்கு முதுகுகாட்டிப் படுத்துக் கொண்டாள்..

“ஹணிக்கு கோவம் எல்லாம் வருதே சரி சரி ரிலாக்ஸ் சும்மா டீஸ் பண்ணலாமேநு தான் டீ கேட்டேன்..உன்னை இப்படி சிவக்க வைச்சுட்டே இருக்க எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”, என்றவன் அவளின் கழுத்து வளைவில் இதழ்பதிக்க,கால்களை இன்னுமாய் சுருக்கி அடக்கமாய் படுத்துக் கொள்ள அவள் நிலையுணர்ந்தவனுக்கு இன்னும் இன்னுமாய் தன்னவளை ஆக்கிரமிக்கவே தோன்றியது..

தன்புறம் அவளை திருப்பி முகமெங்கும் இதழ்பதிக்க அவன் கைகளை இறுகப் பற்றியவள் தன் இதழ்களை அவனுக்குள் தொலைத்த போது மொத்தமாய் குழைந்துதான் போனாள்..அவன் கைகள் தனக்கான தேடலை தொடங்க தடுக்கவும் தோன்றாமல் முன்னேறவும் விட முடியாமல் தன்னோடு அவனை இணைத்துக் கொண்டாள்..

நேரம் நடுநிசியை தாண்டியிருக்க சோர்வாய் தன் மேல் சாய்ந்து மார்பின் முடிகளை வருடிக் கொண்டிருந்தவளை கை வளைவில் இன்னுமாய் இறுக்கி தன்னோடு சேர்ந்துக் கொண்டான்..அவனின் இறுக்கத்தை உணர்ந்தவள் லேசாய் தலை உயர்த்தி தன்னவனை பார்க்க,அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்..

விழி மூடி அதை ஏற்றவள் தன் தாடையை அவன் மார்பில் வைத்து அவனை ஏறிட,

“பர்ஸ்ட் டைம் என் ஹணி என்ன சைட் அடிக்குறா”, என்று அவன் இதழ் விரிக்க,

“ம்ம் ஆமா என் புருஷன நா சைட் அடிப்பேன் அதுக்கென்ன???”

“அடிப்பாவி அப்போ நிஜமாவே இவ்ளோ நாள்ல என்ன ஒருதடவை கூட சைட் அடிச்சதில்லையா???”

“ம்ம் அதுக்கு பேர் சைட் அடிக்குறது இல்ல நந்தா…”

“என்ன ஹணி சொல்ற??”

“ம்ம் நமக்கு உரிமையில்லாதவங்கள பாத்தா தான் அது சைட் அடிக்குறதாஆகும் நீங்க எப்போ என்ன லவ் பண்றேன்னு சொன்னீங்களோ அப்போயிருந்தே நீங்க தான என் ஹஸ்பெண்ட்னு முடிவு பண்ணியாச்சு அப்பறம் நா உங்கள பாக்குறது எப்படி சைட் அடிக்குறதா ஆகும்??ம்ம்??”

“நல்லா பேசுற ஹணி பேபி..உன்னை என்னவோனு நினைச்சேன் ம்ம் “,என இரு பொருளாய் பேச,

ச்ச கருமம் என்ன பேச்சு இது? என அவன் மார்பில் வலிக்காமல் குத்தினாள்..

ஹா ஹா உண்மையை தான சொல்றேன் ஹணி.. குறைஞ்சது ஒரு மாசத்துக்காவது என்ன காய விடுவனு நிநைச்சேன் என அவள் கலைந்த முடியை ஒதுக்கி விட,

அவன் கையை மாறி மாறி கிள்ளியவள் அவனை முறைக்க அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன்,

“ஹணி நா ஒண்ணு கேக்கட்டுமா??”

“ம்ம் சொல்லுங்க நந்தா..”

“இல்ல மார்னிங் மாமா கண்கலங்கினத பாத்து ஒருமாதிரி ஆய்டுச்சு..அப்பறம் பேசினியா அவர்ட்ட??”

பொங்கி வழிந்த காதலோடு தன்னவனை இறுக்கியவள் ,”பேசினேன்ப்பா..நார்மலா தான் இருக்காரு..”

“சாரி டீ ஏனோ இன்னும் அவர்ட்ட சாதாரணமா பேச வர மாட்டேங்குது..எவ்ளோ ட்ரை பண்றேன்..ஆனாலும்..”

“நந்தா விடுங்க எல்லாம் சரி ஆய்டும் எங்கப்பா மாறதுக்கே இத்தனை வருஷம் தேவைப்படும் போது உங்களுக்கு டைம் ஆகாதா..நா ஒண்ணும் நினைக்கலப்பா..நீங்க எதையுயும் போட்டு குழப்பிக்காதீங்க..என்ன??”,என்று அவனை ஏறிட,

அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தவன்,ஏண்டி நீ இப்படியிருக்க??என்னை அவ்ளோ லவ் பண்றியா??

ம்ம் அதெல்லாம் இல்ல ஐயோ பாவம் நமக்காக அடியெல்லாம் வாங்கிருக்காறேனு போனா போகுதுநு என அவள் முடிப்பதற்குள் அவள் இடையில் குறுகுறுப்பு மூட்டியவன் மேடம் இப்போ சொல்லுங்க என்னது??? என விடாமல் அவளை படுத்தியெடுக்க பொறுக்கமாட்டாதவள் அவன் இழ்களை தனக்கு சொந்தமாக்கி அவனை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தாள்..

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.