(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 12 - ஸ்ரீ

en kadhalin kadhali

கேளாமல்.. கையிலே... வந்தாயே காதலே...

என் பேரில்.. கூவிடும்.. உன் பேரும்... கோகிலம்

ஆண்: இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை

போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

 

பெண்: மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்

மிக எளிதாய் எங்கும் நடந்தேன்

இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான்

நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

ஆண்: கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு

பெண்: நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு (கேளாமலே...)

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் ஹரிணி வேலையை விடுவதாய் முடிவெடுக்க தன் விருப்பத்தை ரகுவிடம் கூறினாள்..

“நந்தா வேலையை விட்டுரலாம்நு இருக்கேன்..”

“ஏன் ஹணி என்னாச்சு??”

“இல்லப்பா கல்யாணத்துக்கு அப்பறம் இந்த பன்னிரெண்டு மணிநேர வேலையெல்லாம் செட் ஆகாது..நா வேணா வொர்க் ப்ரம் ஹோம் ஜாப் எதாவது ட்ரை பண்றேனே..”

“ம்ம் நீ சொல்றதும் கரெக்ட்தான் ஹணி..அதுமட்டுமில்லாம இன்னும் ஒன் ஆர் டூ இயர்ஸ்ல நானும் அப்பாவோட பொஸிஷன் டேக் ஓவர் பண்றமாதிரி இருக்கும் சோ நீ அதுல ஹெல்ப் பண்ணலாம்..சரி அப்போ ரெசிக்நேஷன் குடுத்துரு..”

“ம்ம்..”

“ஹே உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..நாம ஹனி மூன்க்கு ஒரு நாலு கன்ட்ரி செலெக்ட் பண்ணிருக்கேன் உனக்கு எது ஓ.கே சொல்லு புக் பண்ணிடலாம்..”

“என்னது கன்ட்ரியா???”

“ஆமா ஏன் டீ இப்படி ஒரு ஷாக்???”

“இல்லை இந்தியாகுள்ளயே எங்கேயாவது போலாமே..நா இங்கேயே அவ்வளவா எந்த ப்லேஸும் பாத்ததில்ல..”

“அட அட என்ன ஒரு வைப்..நானே பாரின் போலாம்ங்கிறேன் நீ வேண்டாம்ங்கிற..சரி சொல்லு எங்க போலாம்..”

“உங்க சாய்ஸ் நந்தா.”

“.ம்ம் நல்லது என்கூட வர்றதாவது நீயா இல்ல என் சாய்ஸ்க்கு யாரயாவது????”

“ஏய்..செம அடி வாங்குவீங்க..”

“ஹா ஹா பின்ன என்ன எல்லாமே நானே பாத்து பண்றதுக்கு எதுக்கு உன்கிட்ட கேக்குறேன்..எதாவது ப்லேஸ் செலெக்ட் பண்ணு ஹணி..”

“ம்ம் சரி நா யோசிச்சு சொல்றேன்.”

“அப்பறம் ஹணி பேபி நம்ம ரூம்க்கு வந்துருக்கல நீ எதாவது அல்ட்ரேஷன்ஸ் பண்ணணுமா சொல்லு மாத்திடலாம்..”

“அது..அன்னைக்கு வந்த நிலைமைக்கு அவ்ளோலா கவனிக்கல நந்தா..”

“உன்னை பத்தி தெரிஞ்சும் நா இந்த கேள்வியை உன்கிட்ட கேட்டேன் பாத்தியா..என்ன சொல்லனும்.சரி கால கட் பண்ணு வீடியோ கால் போட்றேன்..”

“என்னது???அதெல்லாம் வேண்டாம்..”

“அடியேய் ஏன் டீ என்ன படுத்துற..அடுத்த மாசம் கல்யாணம் வீடியோ கால்கே அலப்பற பண்ணா சத்தியமா டென்ஷன் ஆகிடுவேன்..”

“இல்லப்பா அது…சரி சரி பண்ணுங்க”, என போனை வைத்தவள் வேகமாய் தன்னை கண்ணாடியில் சரிப்பார்த்துக் கொண்டாள்..

அவன் அழைப்பை ஏற்றவள் மொபைலை பார்க்க அவனை காணவில்லை..”நந்தா எங்க இருக்கீங்க??”

அவர்களின் கல்லூரி புகைப்படத்தை அருகில் காட்டியவன் ஹாய் ஹணி டியர் என்றவாறு கட்டிலில் அமர்ந்தான்..

“இன்னும் இந்த போட்டோ வச்சுருக்கீங்களா??”

“வச்சுருக்கேனாவா??இதனாலதான் இரண்டு வருஷம் நா தூங்கினதே..”

அவள் அந்த புகைப்படத்தையே பார்த்திருக்க,”என்ன ஹணி மலரும் நினைவுகளா???”

“ம்ம் இதை எத்தனை வருஷம் ஆனாலும் மறக்கவே முடியாது நந்தா..சத்தியமா அன்னைக்கு உங்களை பாத்து என் மனசு பட்டபாடு சொல்லவே முடியாது..”

“ம்ம் உண்மைதான் ஹணி..அந்த கெட்டப்ல நீ மை காட்..இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது..உன்கிட்ட நா சொல்லல அன்னைக்கு ப்ரோகிராம் முடிஞ்சு நீ கேன்டீன் வர்றப்போ என் ப்ரெண்ட்ஸ் எல்லாருமே என்கிட்ட பேசினது ஒரு விஷயம்தான்..

நீயும் ஹரிணியும் வாட் அ பேர் டா..ரியலிஸ்டிக்கா இருக்க காரணம் கண்டிப்பா மேக்கப் மட்டுமில்ல..உங்க கெமிஸ்ட்ரி ரியல் லைப்லயும் ரொம்பவே  வொர்க் ஆகும் அது இதுநு..அப்போ கூட எனக்கு தோணிணது இப்படி ஊருக்கே புரியுறது இந்த குட்டி பொண்ணுக்கு புரியலையேநு தான்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.