(Reading time: 15 - 30 minutes)

“புரியாம இல்ல நந்தா..பட் அதையும் மீறின ஒரு பயம் தயக்கம்..தைரியமா மனசை கட்டுப்படுத்தி வாழ்ந்துரலாம்நு நினைச்சேன்..அப்பறம்..அக்சுவலா இப்படி ஒரு நிலைமைல இருக்குற பொண்ணுங்க எல்லாருமே எந்த ஒரு நிலைமைல பயத்தை உடைச்சு வெளியே வருவாங்க தெரியுமா??

நம்ம வாழ்க்கை இன்னொருத்தர் கைக்கு போகப் போகுதுங்கிற உண்மை புரியுறப்போ தான்..எனக்கும் அப்படிதான்..நீங்க காலேஜை விட்டு கிளம்பின அப்பறம் எல்லாத்தையும் மறந்து நிம்மதியா இருக்குறதா தான் நினைச்சேன்..

ஆனா நடுவுல இரண்டு தடவை என்னை பொண்ணு கேட்டு அப்பாவ அப்ரோச் பண்ணாங்க..அப்போ தான் முதல் தடவையா மனசு ஆட்டம் கண்டது..கல்யாணம்ங்கிறத நினைச்சு துளிகூட சந்தோஷம் வரல ஒருமாதிரி அருவருப்பா பயம்தான் வந்தது..பட் அது பெருசா எந்த ப்ராஸஸும் இல்லாம அப்படியே போனதால நா தப்பிச்சேன்..

அதுக்கைப்பறம் இன்னொரு இன்சிடென்ட் எனக்கு வந்த ப்ரபோசல்ஸ்.அப்போ நீங்க மட்டும்தான் என் கண் முன்னாடி தெரிஞ்சீங்க..இதுக்கப்பறம்தான் கடைசியா உங்கள ஒரு வருஷத்துக்கு அப்பறம் பாத்தப்போ அந்த செகண்ட் என் லைவ்வே நீங்க தான்னு முடிவு பண்ணிட்டேன்..”என பழைய நினைவுகளில் தேங்கியிருந்தவள் அவனைப் பார்க்க,

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..”லவ் யூ டீ..வேற ஒண்ணும் சொல்ல தோணல..உன் அளவு நா யோசிச்சேனானு எனக்கு தெரில ஹணி..எதையும் யோசிக்காம உன்னை விரும்புறேன்னு சொல்லிட்டேன்..நீ எவ்ளோ திங் பண்ணிருக்க..ரியலி ஹேப்பி டு ஹவ் யூ இன் மை லைவ் டியர்..”

“ம்ம் போதும் போதும் கால் பண்ண வேலையை பாருங்க” என அவள் சிரிக்க,

“ஒருத்தன் மனசுருகி லவ் யூ சொல்றேன் நல்ல பதில்..”,என போலியாய் சலித்தவன் தங்களின் வருங்கால அறை மாற்றங்களை அவளிடம் கேட்டறிந்தான்..

“ம்ம் பாய்ண்ட்ஸ் நோட்டட் ஹணி செமயா மாத்திரலாம்..சரி டா நீ போய் தூங்கு மார்னிங் பாக்கலாம்..”

நாட்கள் அமைதியாய் அழகாய் நகர்ந்தது..திருமண வேலைகள் களைகட்ட ஆரம்பித்திருக்க திருமணத்திற்கான உடைகளெடுக்க தேதிபார்த்து இரு குடும்பமும் கிளம்பியது..வழக்கம்போல் கிருஷ்ணண் அடம்பிடித்து வராமல் இருந்துவிட ஹர்ஷாவும் அஞ்சலியும் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியதிருக்க ஹரிணியும் மதுராவுமாய் கிளம்பினர்…

தற்செயலாய் ஹரிணியை போனில் அழைத்தவன் அவர்கள் மட்டும் வருவது தெரிந்து தானே பிக்கப் செய்து கொள்வதாய் கூற,ஹரிணி எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவன் பெற்றோரோடு அவள் வீட்டு வாசலில் வந்து ஹார்ன் அடித்து நின்றான்.

 மதுரா அவசரமாய் ஓடிச் சென்று அவர்களை உள்ளே அழைக்க வரும்போது வருவதாய் கூறி அவர்களை தயாராகச் சொல்ல அவர் உள்ளே சென்று ஹரிணிக்கு குரல் கொடுத்தார்.

வாசலை நோக்கி வந்தவளை முன் இருக்கை கண்ணாடியை இறக்காமலே அமர்ந்திருந்தவன் அப்படியே தனக்குள் நிரப்பினான்…அழகிய நீல நிற சில்க் காட்டன் புடவையை நேர்த்தியாய் கட்டி இடையளவு முடியை கச்சிதமாய் பின்னலிட்டு பூ வைத்து ஒயிலாய் வந்தவளை பார்த்தவனுக்கு விழியகற்றுவது பெரும் பாடாய் இருந்தது..

அவனை கண்டு கொண்ட கண்ணணும் லஷ்மியும் தொண்டையை செருமி சத்தமாய் சிரிக்க,

“மாம்..”

“நாங்க எதையும் பாக்கலப்பா..இல்லங்க???”

“ஆமா ஆமா..”என அவரும் சிரித்தார்..

அதற்குள் இருவரும் காரில் ஏறி அமர உதட்டோர சிரிப்போடு தன்னவளை கண்ணாடியில் ரசித்தவாறே காரை கிளப்பினான் ரகு..அந்த பெரிய கடை பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் இறங்க பெரியவர்கள் மூவரும் முன்னே செல்ல ஹரிணியின் கைப்பற்றி ஜாடை காட்டி நிறுத்தினான்..

“நந்தா அம்மா…”

அதெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க..உனக்காக தான் நா வந்ததே..ஒழுங்கா என்னோட வா..என்றவன் கை உரசும் அளவு இடைவெளியிலேயே தான் நடந்தான்..ஹரிணிக்கு அவனின் அந்த மென் தொடுகை சுகமாய் இருந்தது..பாதுகாப்பான ஒரு உணர்வு..

அப்போது சிந்தித்து பார்த்தால் அவளுக்கு புரிகிறது எப்போதுமே அவன் அப்படிதான் நடந்திருக்கிறான் அவளோடு வரும் போது..கையும் தோளும் உரச யாருக்கும் வழிவிட வேண்டுமானால் எதார்த்தமாய் அவள் தோள் தொட்டு லேசாய் திருப்பி தன்னோடு சேர்த்தவாறே நடந்தான்..

“என்ன ஹணி சைலண்டாவே வர்ற???”

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா..சரி ரிசெப்ஷனுக்கு என்ன ட்ரெஸ் எடுத்துக்க போறீங்க???”

“ம்ம் ஷெர்வாணி ட்ரை பண்ணலாம்நு இருக்கேன் என்ன சொல்ற???”

“ம்ம் ஓ.கே தான்..நா டிசைனர் சாரி எடுத்துக்குறேன் ஓ.கே தான???”

“ம்ம் ஓ.கே தான் பட் அப்பா ப்ரெண்ட்ஸ்க்காக வைக்குற ரிசெப்ஷனுக்கு நா எடுக்குற ட்ரெஸ் தான்..இப்போவே சொல்லிட்றேன்..நாளைக்கு ஆர்டர் குடுத்துருவேன் டியர்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.