(Reading time: 15 - 30 minutes)

“நா போனை வைக்குறேன்.”

“அப்போ நா நேர்லயே வந்துருவேன்..”

“ஏன் நந்தா இப்படி இருக்கீங்க??”

“அதுக்கு காரணம் நீ தான் ஹணி என்ன பாத்து லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிட்டனா நானே சமத்தா போய்டுவேன் அத பண்ணாம இப்படி சிணுங்கிட்டே இருந்தா நா என்ன பண்றது..இன்னும் பத்தே நாள் அப்பறம் இருக்கு உனக்கு..”

“இப்படியெல்லாம் பயமுறுத்துனீங்க னா அப்பறம் நா கல்யாணமே வேண்டாம்னு ஓடிருவேன்”, என அவள் இன்னுமாய் சிணுங்க,

“ஓடுவ ஓடுவ இதுக்கு மேல உன்னையெல்லாம் எங்கேயும் விடுறதா இல்ல ஹணி எனக்கே எனக்கு மட்டும்தான் நீ..உனக்கு புரியுதானு எனக்கு தெரில பட் ஐ அம் மேட்லி க்ரேஸ் ஆன் யூ..இப்போ இந்த செகண்ட் நீ என் கைக்கு கிடைசசாலும் யாருக்கும் காட்டாம உன்னை எனக்கே என்க்கா ஒழிச்சு வச்சுப்பேன்..”

மறுபுறம் அமைதியாய் இருக்க,”ஹணி தூங்கிட்டியா???”

“லவ் யூ நந்தா..” மெதுவாய் கேட்ட உள்ளடங்கிய அவள் குரலில் அவனுக்கு அதற்குமேல் பேச வார்த்தைகள் தேவைபடவில்லை..தன் கைப்பேசியை அவள் செவ்விதழ்ளாய் நினைத்து முத்தங்களை வாரி வழங்கினான்..

அங்கு பெண்ணவளோ அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் தனக்குள் உருகி மருகி கரைந்து கொண்டிருந்தாள்..”நந்தா ப்ளீஸ்..நா போனை வச்சுட்றேன்..”

“சரி ஹணி வா தூங்கலாம்..”

“என்ன??”

“என்ன என்ன??நீ எப்போவோ என்னோட வாழ ஆம்பிச்சுட்ட டீ..என் பக்கத்துலயே என் மேல சாஞ்சு தான டெய்லி தூங்குற..”

“ஐயோ நா போறேன் பை பை”, என்றவள் போனை தூக்கி மெத்தையில் வீசி விட்டு வேக மூச்சுகளை எடுத்து தன்னை நிதானப்படுத்தினாள்..அவன் கூறுவது நேரில் நடந்தால் கூட இத்தனை சிலிர்ப்பு இருக்குமோ என்னவோ அவன் கூறி இவள் கண்ணில் காட்சி விரிய பெண்ணவள் படபடத்துதான் போனாள்..மொபைல் நோட்டிபிகேஷனில் அதை கையிலெடுத்தவள் அவன் மெசெஜை பார்க்க,

“ஏன் ஹணி இவ்ளோ டென்ஷன் நா ஒண்ணுமே பண்ணலயே”, என கண்ணடிக்கும் ஸ்மைலி போட்டு அனுப்பியிருக்க,

“நந்தா நா தூங்கியாச்சு பை “,என அனுப்பிவிட்டு தலையணையில் தலை புதைத்துக் கொண்டாள்..

திருமணநாள் நெருங்க நெருங்க மதுராவும் ஹர்ஷாவும் அஞ்சலியும் அவளை கைக்குள் வைத்து தாங்க தன் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் தவித்தாள் ஹரிணி..எப்போதுமே அவர் பெரிதாய் அவளிடம் பாசத்தை காட்டியதில்லை எனினும் இப்போது நந்தாவின் மனநிலையால் ஒருவித ஏக்கம் வந்திருந்தது..

எங்கே அவன் இறுதி வரை தந்தையோடு இணக்கமாகாமலே போய்விடுவானோ என்ற கவலை வேறு ஒருபுறம் இருக்க ஒன்றும் கூறத் தோன்றாமல் சாதாரணமாய் வளைய வந்தாள்…

திருமணத்திற்கு மூன்றே நாட்கள் எனும் நிலையில் அவளுக்கு மெஹந்தி போட்டுவிடவென பார்லர் பெண்கள் வந்திருக்க தன் மகளின் திருமண களையை கண்டு கிருஷ்ணணும் பூரித்துதான் போனார்..பக்கத்து அறையில் அமர்ந்து பேப்பர் படிப்பதை போன்று தன் மகளையே கவனித்துக் கொண்டிருந்தார்..மணமகளுக்கே உரிய வெட்கம் பூரிப்பு சந்தோஷம் என அவள் முகம் இன்னுமாய் பிரகாசிக்க மகளை பிரிய போவதை எண்ணி முதன்முறையாய் துக்கம் எழுந்தது..

ஹரிணி பிறந்ததிலிருந்தே அவருக்கு அவள்மேல் தனி பிரியம் மனதினுள் உண்டு அதற்கு காரணம் அவள் தன் அன்னையின் மறுஉருவமாகவே இருந்தாள்..தத்தி தத்தி அவள் வைத்த முதல் அடியிலிருந்து சட்டென தாவணிக்குள் ஒழிந்துகொண்டநாள் வரை அத்தனையும் அவரின் மனப் பெட்டகத்தில் அழகான நினைவுகளாய் இருந்து கொண்டுதான் இருந்தது..

தன் கோபத்தால் ரகுவை அடித்தது தவறோ என மனம் கலங்கியது..இதுவரை அவர் முகம் பார்த்து அவன் பேசியிராதது அவருக்கு நினைவு வர திருமணத்திற்கு பின் அவளை பார்க்கவே முடியாதோ என மனம் துடித்துப் போனது..தன் நினைவுகளில் உலன்றவர் விழி நகர்த்தி தன்னை மீட்டெடுக்க அங்கு ஹரிணி மட்டுமாய் சோபாவில் அமர்ந்திருந்தாள்..முழங்கை வரையிலும் அழகாய் மெஹெந்தி இடப்பட்டிருக்க கால்களிலும் நேர்த்தியாய் வரையப்பட்டு சோபாவில் சாய்வாய் அமர்ந்திருந்தாள்..அஞ்சலியோ மதுராவோ அவ்வப்போது வந்து அவளுக்கு வேண்டியதை கொடுத்துச் சென்றவாறு இருக்க அவள் டீவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

மெந்தி காய வேண்டுமென ஃபேனை முழு வேகத்தில் வைத்து ஜன்னலையும் திறந்து விட்டிருக்க அவள் தலைமுடி காற்றில் கலைந்து முகத்தில் வந்து விழுந்து கொண்டேயிருந்தது..தோள்பட்டையை அசைத்து அசைத்து அதை அவள் சரி செய்ய யாரையும் அழைத்து அவர்கள் வேலையை கெடுக்க வேண்டாமென அப்படியே அமர்ந்திருந்தாள்..என்ன தோன்றியதோ மெதுவாய் அவளருகில் வந்த கிருஷ்ணன்  அவள் முன்தலை முடியை நகர்த்தி சரி செய்து விட சட்டென அவள் கண்ணில் நீர் கோர்த்து விட்டிருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.