(Reading time: 15 - 30 minutes)

“ப்பா…”

“இப்போ எதுக்கு அழற கல்யாண பொண்ணு சந்தோஷமா இருக்கணும்”, என வழக்கமான கடுமையில் கூறினாலும் அவர் குரலும் கரகரத்துதான் இருந்தது..தொண்டையை சரி செய்தவர் அவளருகில் சோபாவில் அமர அவரையே பார்த்திருந்தாள் ஹரிணி..

“அப்பா ரொம்ப கஷ்டப்படுத்திடேனா ஹரிணி..”

அவரின் கம்பீரம் மொத்தமாய் வடிந்து சிறு குழந்தையின் கெஞ்சல் இருந்தது அந்த குரலில்..

“அப்பா ஏன்ப்பா அப்படி யெல்லாம் பேசுறீங்க அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா..”

“தெரில கண்ணு ஏன் இதெல்லாம் நடந்துதோ இப்போ நீ இந்த வீட்டை விட்டு போகப் போறனு நினைச்சா ஒருமாதிரி இருக்கு..என் அம்மாடா நீ உன்னை கண்ணுக்குள்ள வச்சு தாங்கலனாலும் என் மனசு உன்னை எப்பவுமே சுத்திட்டுதான்டா இருந்துருக்கு..அப்பா மேல உனக்கு கோபமெல்லாம் இல்லையே???”

“அப்பா என்னப்பா நீங்க உங்க மேல நா கோபபடுவேனா..என்னை நீங்க மன்னிச்சுட்டீங்களாப்பா???”

“மன்னிக்குற அளவு நீ எந்த தப்பும் பண்ணலையே ஹரிணி..நா தான்…மாப்பிள்ளைக்கு இன்னும் கோபம் குறையல இல்லடா..”

“ப்பா..அப்படியெல்லாம் இல்ல..அது..”

“புரியுது ஹரிணி பெரிய இடத்து புள்ள..நடு ரோட்ல நா அடிச்சத அவ்ளோ சீக்கிரம் மறக்குமா சொல்லு..உனக்காக அவர்ட்ட நா மன்னிப்பு கேக்குறேன் டா..நீ சந்தோஷமா இருக்கணும் அதான் வேணும்..”

“அப்பா அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..அவரு என்ன ரொம்பவே நல்லாதான் பாத்துக்குவாரு..நீங்க யார்கிட்டேயும் தலை குனிஞ்சு போற நிலைமை என்னால வரக்கூடாதுப்பா..நீங்க தைரியமா இருங்க..”

“எத்தனை நம்பிக்கை அவள் காதல் மேல்…முதன் முறையாய் தெளிவான குமரியாய் தன் குழந்தை அந்த தகப்பனின் கண்களில் தெரிந்தது..”,அவள் முன் உச்சியில் கைவைத்து செல்லமாய் அசைத்தவர் சிறு சிரிப்போடு எழுந்து செல்ல,

ஹரிணிக்கோ கால் தரையில் இல்லை..என்னதான் தன் தந்தை இப்படிதான் என எடுத்துக் கொண்டாலும் தந்தையின் அரவணைப்பை அவள் ஒவ்வொரு பருவத்திலுமே எதிர்பார்த்து ஏங்கி இருக்கிறாள்..இப்போது பேசிய அவரின் பேச்சு அவளை மிகவும் லேசாக்கியிருந்தது..

அன்றைய நாள் முழுதுமே அவளுக்கு உற்சாகமாய் இருக்க அனைத்தையும் பார்த்திருந்த மற்ற மூவரும் ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களின் மகிழ்ச்சியை தங்களுக்குள்ளேயே ரசித்தனர்...

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.