(Reading time: 15 - 30 minutes)

“பார்ரா அப்படி என்ன ஸ்பெஷல்???”

“அது சஸ்பென்ஸ் ஹணி..”

எனும்போதே பெரியவர்கள் அவர்களை தேட கையசைத்தவாறு அவளை கைப்பற்றி அழைத்துச் சென்றான்..முகூர்த்தப் புடவையை எடுப்பதற்குள் ஹரிணியே சோர்வடைந்து விட்டாள்..எதிலுமே திருப்தி படாதவன் கடையையே திருப்பிக் கொண்டிருந்தான்..பொறுமையிழந்த பெரியவர்கள் பாதியிலேயே மற்ற உடைகளை எடுகச் செல்ல ரகுவோ,

“ஹணி எதுவுமே செட் ஆகல டீ வேற கடை போலாமா???”

“என்னது மறுபடியும் முதல்ல இருந்தா..விளையாடுறீங்களா நா வரல இந்த விளையாட்டுக்கு..”

“ ஹே பாத்தவுடனே மனசு பதிய வேண்டாமா..ஹணிக்கு நா செலெக்ட் பண்ற பர்ஸ்ட் சாரி ஷுட் பி ஸ்பெஷல்..”

என்றவன் தற்செலாய் கண்ணை சுழற்ற தூரத்தில் பொம்மைக்கு அணிவித்திருந்த புடவை அவன் மனதை கவர்ந்தது..

“அந்த டிஸ்ப்ளே சாரி????”

“ஒர்ஜினல் பட்டு தான் சார் முந்தானை புல்லா ஸ்டோன்ஸ் வரும் ரேட் கொஞ்சம்..”

“நோ ப்ராப்ளம் அதை ப்லிங்க்கிற்கு அனுப்பிடுங்க..”

“நந்தா எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியா வேண்டாம் நாம வேற எங்கேயாவது கூட பாப்போம்..”

“நோ ஹணி டியர் எனக்கு அதான் பிடிச்சுருக்கு..யூ வில் பீ ஆசம்.வா வா அடுத்த செக்ஷன் போலாம்”, என ரிசெப்ஷனுக்கான டிசைனர் சாரி செக்ஷனுக்கு  சென்றவன் தன்னவளுக்காய் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்..அவள் விருப்பத்தையும் கேட்டு முடிவு செய்தவன் தனக்கான உடைகளை எடுத்து முடித்து பெரியவர்களோடு சேர்ந்து கொண்டான்..

ஹரிணிக்கு மனம் வெகுவாய் தன்னவன் மேல் இளகியிருந்தது..என்னதான் காதல் திருமணம் என்றாலும் அவனோடு வெளியில் அவ்வளவாய் சென்றதில்லை..அப்படியே சென்றாலும் அவனின் முரட்டடுதனமான அன்பே அவளை ஆட்டிப்படைக்கும் முதன்முறையாய் அவனின் காதலின் இன்னொரு பகுதியை உணர்ந்த திருப்தியே அதன் காரணம்..

பெரியவர்களுக்குமே அவர்களின் அந்யோநியம் மிகவும் திருப்தியாய் தோன்றியது…அனைத்து பர்ஷேஸையூம் முடீத்து ஹரிணி வீட்டு வாசலில் அவர்களை இறக்கி விட்டவன் அப்படி இப்படியாய் காரணம் கூறி உள்ளே செல்லாமல் நழுவிக் கொண்டான்..ஹரிணிக்கு அவன் செயலின் அர்த்தம் புரிந்தாலும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை..

கிருஷ்ணணிடம் அன்று நடந்த அனைத்தையும் மதுரா ஒப்பித்துக் கொண்டிருக்க கண்டும் காணாதவராய் அதே நேரம் அவரது பார்வை ஏதோ வேலை செய்து கொண்டிருந்த மகளையே தொட்டுச் சென்றது..

நாட்கள் கல்யாண பரபரப்போடு அழகாய் நகர அவர்களின் நெருக்கமும் நீளும் இரவுப் பேச்சுகளில் அதிகரித்தது..ஹரிணி தான் அவன் அன்பில் திக்குமுக்காடி போனாள்..உயிரை உருக்குவதாய் அவன் குரலும் வார்த்தைகளும்..சாதாரணமாக ஆரம்பிக்கும் பேச்சின் முடிவுகளோ புதுமணதம்பதிகளுக்கே உரிய இடத்தில் போய் நிலைகொண்டது..ஹரிணிக்கோ அவன் பேச்சு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்றே அறியாத நிலைமை..இன்னொரு புறம் பெண்மைக்கே உரிய பயம்..ஒவ்வொரு நாளும் அழகிய இம்சையாய் கழிந்தது அவளுக்கு..

“ஹே ஹணி என்ன பண்ற??”

“ம்ம் இப்போ தான் நந்தா ரூம்க்கு வந்தேன்..நீங்க சாப்டீங்களா??”

“ப்ச்ச் இல்ல டீ இன்னைக்கு சாப்டவே தோணல..”

“ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா???”

“அதெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த மனசுதான்…”

அவன் பேச்சு செல்லும் திசையை அறிந்தவளின் காது அதுவாய் சூடேறியது..ஏ..ன்.. அதுக்கு…என்னவாம்??

மென்குரலில் அவள் கேட்க,

“உனக்கு தெரியாதா ஹணி???” அவன் குரல் இன்னமும் பஞ்சையாய் ஒலிக்க,

“ம்.கு.ம்..”

“சாப்பிடலாம்னு தான் உக்காந்தேன் ஹணி..டீவி ல ஒரு செம சாங் மைண்டே போச்சு ஹணி டீயர் வந்து என் மண்டைக்குள்ள உக்காந்துட்டா..சோ பாதி சாப்ட்டு வந்துட்டேன்..”

“இன்னைக்கு வரும்போதே ஒரு முடிவுல தான் இருக்கீங்க போலயே..”

“ம்ம் நா மட்டும் முடிவெடுத்து என்னத பண்ண..எதிர்ல இருக்குறவ இரக்கமே காட்ட மாட்றாளே”, என்றான் சோகமாய்..

“நந்தா..”

“அப்போ லவ் யூ சொல்லு..”

“அதெல்லாம் சொல்ல முடியாது..”

“அப்போ நானும் அப்படிதான் பேசுவேன்..”

“வர வர ரொம்ப பிடிவாதம் உங்களுக்கு “,என செல்லமாய் அவள் கூற,

“உன் விஷயத்துல மட்டும் அப்படிதான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்..ஐ மேட்லி நீட் யூ டீ..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.