(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ

en kadhalin kadhali

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா

நீ வந்த நொடி நிஜமா

 

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா

நீ நானால் நிஜமா

நேற்று இன்று நாளை என்பதென்ன

காலம் உறைந்து போனது

நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச

கடவுள் ஆக தோணுதே

வேற்று கிரகம் போலே இன்று எனக்கு

எந்தன் வீடு ஆனதே

வெற்று கோபம் என்றே அர்த்தம் மாறி

வெட்கம் ஆகி போனதே

வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே

வானமும் இடிந்தால் அதுதான் காதலே

இடி மின்னல் மழை இந்த மூன்றுமே

இதயத்தில் தந்தால் அது காதலே

யற்கை எழில் பொங்கும் கேரளாவின் குமரோகம் பகுதிக்கு கொச்சின் ஏர்போர்ட்டிலிருந்து தன்னவனுடனான கார் பயணம் மனதை நிறைத்திருந்தது..அந்தி மாலை வேளையில் நிலவவள் தன் குளுமையால் சூரியனையே அடக்கி ஆளத் தயாராக இதமான காற்றும் தன்னவனின் கையணைப்புமாய் சொர்கத்தின் வாசற்படியாகவே தோன்றியது ஹரிணிக்கு..

“ஹணி நாகூட சிம்ளா முடிச்சுட்டோமோ ஹனிமூனனு பீல் பண்ணேன் பட் வொண்டர்புல் ப்ளேஸ் இல்ல..”

“ம்ம் உண்மைதான் நந்தா..ரொம்பவே அழகு…இதுக்கு இணையா எந்த நாடுக்கு போய்ட முடியும் நாம..”எனும் போதே கார் ஓர் ரெசார்ட் வாசலில் நிற்க டிரைவர் அவனிடம் விவரம் கூறி அவர்களின் லக்கேஜை எடுத்து முன்னே சென்றார்..

கேரளாவிற்கே உரிய பசுமை ஒவ்வொரு இடத்திலும் தெரிய ரம்மியமாய் காட்சியளித்தது..உள்ளே சென்று செக் இன் ப்ராசஸை முடித்தவர்களை மேனேஜர் ரிசெப்ஷனில் வெயிட் செய்யுமாறு கூற ஹரிணி கேள்வியாய் அவனை பார்த்தாள்..

“ஏன் நந்தா அதான் செக் இன் முடிச்சாசே ரூம் கீ தர வேண்டியதுதான??”

“அதான் ரெடியா இருக்கானு பாக்க போய்ருக்காரு ஹணி பேபி..”என்றவன் கண்ணடித்து சிரித்தான்..

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வேலையாள் ஒருவரோடு வந்த மேனேஜர் அவர்களின் லக்கேஜை எடுத்துக் கொண்டு நடக்க நந்தா வழக்கம்போல் ஹரிணியை அணைத்தவாறே பின் தொடர்ந்தான்..முன்பகுதியை தாண்டிய லானில் நடக்க சற்று தூரத்தில் நீரின் குளுமையை உணர்ந்தாள்..என்னவென யோசிப்பதற்குள் அவள் கண்முன் ப்ரம்மாண்டமாய் தோன்றியது அந்த படகுவீடு…ஆர்வமாய் தன்னவனைப் பார்க்க,

“டூ டேஸ் நோ டிஸ்டர்பெண்ஸ் ஹணி”,என்றான் குறும்பாய்..

லக்கேஜை உள்ளே வைத்துவிட்டு அவர்களுக்குத் தேவையான விவரங்களை கூறிவிட்டு இருவரும் நகர,.ரகு அவள் கைப்பற்றி படகிற்குள் அழைத்துச் செல்ல பொறுப்பாளரும் ஒரு சமையல்காரரும் இருந்தனர்..அது இவர்கள் மட்டுமே இருக்கும் தேனிலவு பிரிவு என்பதால் வேறு எவரும் இருக்கவில்லை..அவர்களுக்கான அறை மாடியிலிருப்பதாய் கூற அங்கே சென்றவளின் கண்கள் விரிந்தது..

அறை முழுவதும் மெழுகுவர்த்திகளால் நிறைந்திருக்க படுக்கை மொத்தமும் ரோஜா இதழ்களால் நிரம்பி வழிந்தது…அழகான மணம் நாசியை வருட அனைத்திற்கும் மகுடமாய் தன்னவனின் நெருக்கம்..கதவை மூடிய அடுத்த நொடி அவளை தன்னோடு சேர்ந்திருந்தான்…இன்னும் சற்று அழுத்தினால் அவன் முதுகு வழி வெளியேறிவிடும் அளவிற்கான இறுக்கம் அவனிடத்தில்..

“நந்தா..”

“லவ் யூ ஹணி பேபி..”

“ம்ம்..”

என்னடி ரியாக்ஷன் இது என சற்று விலக்கி அவள் முகம் பார்க்க இதுதான் சமயம் என அவனை விட்டு நகர்ந்தவள் சென்று கட்டிலில் அமர்ந்தாள்..

“ஷப்பா என்ன பேசுறது மூச்சே இப்போ தான் ஒழுங்கா விட முடியுது..சரியான முரடன் நீங்க..”

ஹணி மெத்து மெத்துனு இருக்குறது உன் தப்பு..இதுல என்ன சொல்றியா..நீ ஏன் இப்படி பேபி மாதிரி சாப்ட்டா இருக்க என அருகில் அமர்ந்தவன் அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்..

“ம்ம் போதும்..ஆமா ஏன் போட் ஹவுஸ் வரோம்னு சொல்லவே இல்ல??”

“அப்பறம் அதுல என்ன சஸ்பென்ஸ் இருக்கு ஹணி..இன்னைக்கும் நாளைக்கும் புல்லா இங்க தான்..நாம கூப்டா தான் சாப்பாடு கூட எடுத்துட்டு வருவாங்க..எப்படி அரேண்ஜ்மெண்ட்ஸ்??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.