(Reading time: 13 - 25 minutes)

“உங்களுக்குத் தெரியாதா??”

“தெரியும் இருந்தாலும் நீயா சொல்லும்போது கேக்குறதுக்கு இன்னமும் நல்லாயிருக்குமேனு பாக்குறேன்..”,என இன்னுமாய் அவளை தன்னோடு இறுக்க,

“ம்ம் அதெல்லாம் இரண்டு வருஷமா இருக்கு..இப்போ சொன்னது அப்பாவ புரிஞ்சுகிட்டதுக்காக”,என்றவள் விழி நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

“”ஹணி ஹேப்பி??”

“ஏன் நீங்க ஹாப்பியா இல்லையா??”

“ம்ம் கொஞ்சம் ஹேப்பி தான்.பட் ஹணி டியர் ஹேப்பினா இன்னும் எக்ஸ்ட்ராவா என்னை கவனிப்பாளே!!”

“ஓ அப்போ இத்தனை நாள் கவனிக்காம விட்டாங்களா??”,என அவன் கையை பிடித்து கிள்ள ஹே பொண்டாட்டி தெரியாம சொல்லிட்டேன் மீ பாவம் என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டு அறைக்குள் ஓடிவிட குறுஞ்சிரிப்போடு அவளைப் பின் தொடர்ந்தான் அந்த அன்புக் கணவன்.

உயிரிலே உயிராய்

கலந்த பெண்ணவள்

இதயத்தையும் மூளையையும்

கட்டி வைக்கும் மாயை அவள்

காதலையே காதல் கொள்ள

செய்யும் கள்ளி அவள்

ஹரிணி என்றுமே இந்த ரகுவின்

காதலின் காதலி அவள்!!!

காதல்,திருமணம் என்பதில் எப்போதுமே ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றவர் நிலையறிந்து விட்டுக் கொடுத்து கரையிலடங்கா அன்பை பரிமாறும் போது எத்தனை பெரிய பிரச்சனைகளும் அவமானங்களும் கண்ணில் பட்ட தூசியாய் சில நாட்களில் மறந்து தான் போகும்.

எப்போதுமே காதலராய் இருக்கும் போது ஒருவர் மீதான மற்றவரின் அன்பு கல்யாணம் என்ற பகுதியில் சற்று மாறுபடத்தான் செய்யும்.அதற்கு காரணங்கள் பல இருக்கலாம்.ஆனால் அவற்றை கடந்து வந்து தங்கள் காதலை நிலைநாட்டுவதே காதலர்கள் தங்கள் காதலுக்கு கொடுக்கும் அங்கீகாரம்.

நிஜ வாழ்வில் நிச்சயம் ஹரிணியை போல் அனைவராலும் பொறுமையாய் இருக்க முடியாது ஆனால் அப்படி இருக்க முயற்சி செய்யும்போது நிச்சயம் அதன் விளைவுகள் அழகானதாய் தான் இருக்கும்.அதே நேரம் அவர்களின் காதலை உணர்ந்து நிஜவாழ்வின் ரகுக்களும் தங்கள் கோட்பாடுகளை மீறிய தன்னவளின் காதலில் முங்கி திளைக்க சற்று இறங்கி வர முயற்சி செய்தால் இல்லறம் நிச்சயம் நல்லறமே!!

இந்த கதை முழுக்க முழுக்க ரகு ஹரிணிக்காக மட்டுமே அதனால் தான் சற்று சீக்கிரமாகவே முடித்துவிட்டேன்.இக்கதையின் முக்கிய கரு காதலர்கள்- தம்பதியாராய் மாறும் போது எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனையை சுற்றி மட்டுமே என்பதால் அதிக கதாபாத்திரங்களையோ அதிக காட்சிகளையோ புகுத்தவில்லை.நிறை குறைகள் இருப்பின் நிச்சயம் பகிர்ந்து கொள்ளவும்.

வணக்கம் மக்களே அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். J J இந்த நல்ல நாளில் உங்களின் பேராதரவில் என்னுடைய மூன்றாவது தொடர்கதையை வெற்றிகரகமாக முடித்துவிட்டேன்..வழக்கம் போல் இதற்கு முக்கிய முதல் காரணமான சில்சீக்கு மிகப் பெரிய நன்றி..தொடர் ஆதரவு அளித்த சில்சீ நட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அடுத்து நம்ம நிர்பயா-தமிழ் ஜோடிக்கும் டாடா சொல்ற டைம் வர போகுது. வரும் வாரங்களில் அவர்களோடு உங்களைச் சந்திக்கிறேன் மக்களே..  smilesmile 

 

சுபம்!

Episode # 14

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.