(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 22 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

த்தனை அழகாக திட்டம் போட்டேன் கமல் எல்லாத்தையும் விதி கெடுத்துடுச்சு வேறு என்ன சொல்ல முடியும் அன்னைக்கு மட்டும் நான் நினைச்சது நடந்திருந்தா இந்நேரம் மாயாவின் சொத்து எல்லாம் என் காலடியில் சொத்து மட்டும் இல்லை நீயும்தான். இதைப் பார்த்தியா மாயாவோட உயில்.....வீட்டை என்பேருக்கு மாயா மாத்தித்தந்தாற்போல ஒரு டாக்மெண்ட் ரெடி பண்ணி, மயங்கி இருந்த மாயா கையெழுத்தை வாங்கிட்டேன் எப்படின்னு தெரியுமா ? அன்னைக்கு நிகழ்ச்சி முடிந்து ஹோட்டல் ரூமிலே உங்கிட்ட மாயா ஸ்கைப்பிலே பேசிகிட்டு இருந்தப்போ நான் வந்தேன் இரவு கொடுக்கிற பால்ல மயக்கமருந்தைக் கலந்து கொடுத்து மாயாவைத் தூங்கவைச்சிட்டேன், மாயாபோலவே உருவம் இருந்ததே அந்தப் பொண்ணு அவளை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஸார்ஜ் செய்து நான்தான் கூட்டி வந்தேன். 

நாப்தலின் வாசனை வீசியது அறை முழுவதும் மெல்ல கண்களைத் திறந்து பார்த்த சுப்ரியா எதிரே முன்பின் அறியாத பெண்ணைக் கண்டு திகைத்தாள். 

பயப்படாதே சுப்ரியா என்பேரு வினிதா நான்தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். நீங்க யாரு என்னன்னு விவரம் சேகரிக்க உங்க டைரியைப் பார்க்க வேண்டியதா போச்சு கவலைப் படாதே கடவுள் அத்தனை சீக்கிரம் உன்னைக் கைவிடமாட்டார். உலகத்திலே ஒரு ரவி மட்டும் இல்லை நீ பெத்த ஒரு குழந்தை மட்டும் இல்லை எத்தனையோ குழந்தைகள் ஏன் பெரியவங்க கூட பிள்ளைகள் இல்லாம ஏங்கிக்கிட்டு இருக்காங்க எங்க அத்தையே எடுத்துக்க அவங்க பொண்ணு அச்சு அசல் உன்னைப் போலவே இருக்கும் அந்தப் பொண்ணை தன்னோட மருமகளாக்கிக்கணுமின்னு கொள்ளை ஆசை ஆனா அது யாரையோ காதலிச்சுட்டு ஓடிப்போச்சு அன்னையிலேயே இருந்து சித்தபிரம்மை பிடிச்சி அலையுது. அதை உயிரோட பார்க்கணுமின்னா பெத்த பிள்ளை மாதிரி வளர்த்த பொண்ணு வரணுமின்னு சொன்னாங்க இங்கே எங்க சொந்தக்காரங்க ஒருத்தர் இந்த பெங்களூருப்பக்கம் அந்தப் பொண்ணைப் பார்த்ததா சொன்னதும் நான் தேடி ஓடியாந்தான். ஆனா அவளைக் கண்டுபிடிக்க முடியலை, ஆனா நீ கண்ணில் பட்டே, எப்படியோ கடவுள் எல்லாரையும் ஏதாவது ஒரு காரணத்தோடதான் படைஞ்சிருப்பார் இப்பத்தான் உன்னைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமா இருக்கு, மனசைப் போட்டு குழப்பிக்காதே, பேசமா என்கூட வந்தது, பழச மறந்தா மாதிரியும் இருக்கும் எங்க அத்தைக்கும் குணமானாமாதியும் இருக்கும். 

அத்தையோட உயிருக்கு நாள் குறிச்சிட்டாங்க ஏதோ நீ வந்தா போற இடத்துக்கு புண்ணியமா போகும் ஏற்ற இறக்கங்களுடன் நான் பேசிய வார்த்தைக்கு யாரா இருந்தாலும் மயங்கிப் போய் இருப்பாங்க அப்போ பெரிய துரோகத்தை சுமந்திருந்த சுப்ரியா மட்டும் விதிவிலக்கா என்ன ? அவ என்னை நம்பி என்கூட நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தா ?! நாளைக்கு நைட்டுதான் நாம கிளம்பபோறோம் சுப்ரியா அதனால நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நான் போய் நாளைக்கு போகிறதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டு வந்திடறேன். சுப்ரியாவை அறையில் விட்டுவிட்டு வந்த வினிதா எதிர்ப்பட்ட ராஜ்வீரின் மேல் இடித்துக் கொண்டாள்.

நீயா....எங்கேயிருக்கே ?

பக்கத்து அறையில்தான் இருக்கேன். சுப்ரியா வந்திட்டாளா ? அவன் கண்களில் ஆசை வெறி மின்னியது 

எதுக்கு கேக்கிறே ராஜ்வீர் முட்டாள்தனமா எதையும் செய்து வைக்காதே இப்போ நீ சுப்ரியா முன்னாடி போய் நின்னா அவளுக்கு என்மேல உள்ள நம்பிக்கை கெட்டுப்போயிடும், அப்பறம், தேவையில்லாத சிக்கல் நாம எதிர்பார்த்த காரியம் நடக்காது, மரியாதையா போய் படு, இப்போ பாதிராத்திரியில் நீ மாயாவோட கிளம்பணும் அதற்கு பிறகு எதையாவது பண்ணித் தொலை சரி நான் கேட்டது எங்கே ? ராஜ்வீர் அரைமனதோடு தன் கையில் உள்ள பொட்டலத்தை வினிதாவின் கையில் திணித்துவிட்டு தள்ளிச் சென்றான். அவன் அறைக்குள் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு, வினிதா மாயாவின் அறைக்குள் சென்றாள்.

மாயா கமலுடன் பேசிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளுக்கு பாலில் அந்த போதை மருந்தைக் கலந்து தந்தாள், பத்தாவது நிமிடத்தில் இயல்பாய் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மாயாவின் மேல் ஒரு திருப்தியான பார்வையோடு ராஜ்வீரின் அறை எண்ணைச் சுழற்றினாள். ராஜ்வீர் மாயாவை வெறித்த பார்வையால் பார்த்திருந்தான். ஏய்....ராஜ்வீர் முட்டாள் தனமா ஏதும் செய்யாத இன்னும் கொஞ்சநேரம் தானே அப்பறம் உன்னை யாரும் கேட்கப் போறது இல்லை, முதல்ல அவளை இந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்து நான் நாளைக்கு இங்கேயிருந்து சுப்ரியாவைக் கூட்டிப் போயிடுவேன் அதற்குப்பிறகு என்னோட வழியில நீயும் மாயாவும் குறுக்கே வரக்கூடாது. மாயான்னு ஒருத்தி இருந்தாங்கிற நினைப்பே எனக்கு இருக்கக்கூடாது,

ம்....மாயா கிடைத்த சந்தோஷத்தில் ராஜ்வீர் அவளை தன்னுடைய காருக்கு எடுத்துச் சென்றான். அவனுக்கு கொஞ்சமும் அதில் விருப்பமே இல்லை, எத்தனை அழகான பெண் அவளை எதிர்ப்பில்லாமல் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அவனைக் குடைந்து எடுத்தது. ஆனர் வினிதாவின் எச்சரிப்பும் மேற்கொண்டு இங்கிருந்து கிளம்பிட செய்திருக்கும் ஏற்பாடும் சொந்த விருப்புகளை தள்ளிவைக்க செய்தது. கிணற்று நீராகிவிட்ட இவளை என்ன ஆறா கொண்டு போய்விடும் தன் இருப்பிடத்தில் வைத்து அவளை சொந்தமாக்கிகொள்ளலாம் என்று தன் ஆஸ்தான டிரைவருடனும், மாயாவுடனும் அந்த ஹோட்டலை விட்டு கிளம்பினான் ராஜ்வீர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.